பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன் - Paarthu Paarthu Kangal Poothirupen Song Lyrics

பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாய் என
பூத்து பூத்து புன்னகை சேர்த்து வைப்பேன்
நீ வருவாய் என
தென்றலாக நீ வருவாயா ஜன்னலாகிறேன்
தீர்த்தமாக நீ வருவாயா மேகமாகிறேன்
வண்ணமாக நீ வருவாயா பூக்களாகிறேன்
வார்த்தையாக நீ வருவாயா கவிதையாகிறேன்

நீ வருவாய் என.... நீ வருவாய் என....

பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாய் என
பூத்து பூத்து புன்னகை சேர்த்து வைப்பேன்
நீ வருவாய் என


கரைகளில் ஒதுங்கிய கிளிஞ்சல்கள் உனக்கென
தினம் தினம் சேகரித்தேன்
குமுதமும் விகடனும் நீ படிப்பாய் என
வாசகன் ஆகிவிட்டேன்
கவிதை நூலோடு கோல புத்தகம்
உனக்காய் சேமிக்கிறேன்
கனவில் உன்னோடு என்ன பேசலாம்
தினமும் யோசிக்கிறேன்
ஒரு காகம் காவென கரைந்தாலும்
என் வாசல் பார்க்கிறேன்

நீ வருவாய் என... நீ வருவாய் என..

பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாய் என
பூத்து பூத்து புன்னகை சேர்த்து வைப்பேன்
நீ வருவாய் என


எனக்குள்ள வேதனை நிலவுக்கு தெரிந்திடும்
நிலவுக்கும் ஜோடியில்லை
எழுதிய கவிதைகள் உனை வந்து சேர்ந்திட
கவிதைக்கும் கால்கள் இல்லை
உலகில் பெண் வர்க்கம் நூறு கோடியாம்
அதிலே நீ யாரடி
சருகாய் அன்பே நான் காத்திருக்கிறேன்
எங்கே உன் காலடி
மணி சரி பார்த்து தினம் வழி பார்த்து
இரு விழிகள் தேய்கிறேன்

நீ வருவாய் என... நீ வருவாய் என...

பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாய் என
பூத்து பூத்து புன்னகை சேர்த்து வைப்பேன்
நீ வருவாய் என
தென்றலாக நீ வருவாயா ஜன்னலாகிறேன்
தீர்த்தமாக நீ வருவாயா மேகமாகிறேன்
வண்ணமாக நீ வருவாயா பூக்களாகிறேன்
வார்த்தையாக நீ வருவாயா கவிதையாகிறேன்

நீ வருவாய் என... நீ வருவாய் என...
நீ வருவாய் என... நீ வருவாய் என...

எந்தன் உயிரே எந்தன் உயிரே - Enthan Uyire Enthan Uyire Lyrics

எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே

எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே
என்னை மறந்தேன் என்னை மறந்தேன்
நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே

சொல்லாமல் என்னை எடுத்தாய்
பதிலாக உன்னை கொடுத்தாய்
உலகத்தின் பூக்களே
உயிரிலே பூத்ததே
உன்னருகே நானிருந்தால்
தினம் உன்னருகே நானிருந்தால்

எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே


என்னை வெல்ல இங்கு யாரும் இல்லை என்ற
எண்ணத்தில் நானிருந்தேன்
இன்று உன்னைப் பார்த்தவுடன் என்னை தோற்றுவிட்டு
வெட்கத்தில் தலை குனிந்தேன்

அன்பே ஓர் நிமிடம் உன்னை மறந்திருக்க
என்னாலே முடியவில்லை
இங்கு எந்தன் நாள் முழுக்க உன்னை நினைத்திருக்க
ஒரு போதும் அலுக்கவில்லை

சின்னச் சின்ன கூத்து நீ செய்யுறத பாத்து
உள்ளுக்குள்ளே நான் சிரித்தேன்
வண்ண வண்ண பாதம் நீ வச்சு வச்சு போகும்
அந்த தரையாய் நான் இருப்பேன்

கவலைகள் மறக்குதே கவிதைகள் பிறக்குதே
உன்னருகே நானிருந்தால்
தினம் உன்னருகே நானிருந்தால்

எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே


உன்னைச் சேர்வதற்கு யுத்தம் செய்யவில்லை
ஆனாலும் நீ கிடைத்தாய்
எங்கு எங்கோ சுற்றி வந்த என்னை நிற்க வைத்து
அடையாளம் நீ கொடுத்தாய்

உன்னைச் சேரும் அந்த நாளை எண்ணி எண்ணி
பத்து விரல் நான் மடித்தேன்
புது மஞ்சத் தாலி மின்ன மெட்டி கேலி பண்ண
பக்கத்தில் நான் கிடப்பேன்

கண்ணில் மீனை வச்சு புத்தம் புது தூண்டில்
போட்டது நீயல்லவா
கள்ளத்தனம் இல்லா உன் வெள்ளை உள்ளம் கண்டு
விழுந்தது நானல்லவா

உலகமே காலடியில் கரைந்ததே ஓர் நொடியில்
உன்னருகே நானிருந்தால்
தினம் உன்னருகே நானிருந்தால்

எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே
என்னை மறந்தேன் என்னை மறந்தேன்
நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே


சொல்லாமல் என்னை எடுத்தாய்
பதிலாக உன்னை கொடுத்தாய்
உலகத்தின் பூக்களே
உயிரிலே பூத்ததே
உன்னருகே நானிருந்தால்
தினம் உன்னருகே நானிருந்தால்

எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே