நீ வருவாய் என
பூத்து பூத்து புன்னகை சேர்த்து வைப்பேன்
நீ வருவாய் என
தென்றலாக நீ வருவாயா ஜன்னலாகிறேன்
தீர்த்தமாக நீ வருவாயா மேகமாகிறேன்
வண்ணமாக நீ வருவாயா பூக்களாகிறேன்
வார்த்தையாக நீ வருவாயா கவிதையாகிறேன்
நீ வருவாய் என.... நீ வருவாய் என....
பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாய் என
பூத்து பூத்து புன்னகை சேர்த்து வைப்பேன்
நீ வருவாய் என
கரைகளில் ஒதுங்கிய கிளிஞ்சல்கள் உனக்கென
தினம் தினம் சேகரித்தேன்
குமுதமும் விகடனும் நீ படிப்பாய் என
வாசகன் ஆகிவிட்டேன்
கவிதை நூலோடு கோல புத்தகம்
உனக்காய் சேமிக்கிறேன்
கனவில் உன்னோடு என்ன பேசலாம்
தினமும் யோசிக்கிறேன்
ஒரு காகம் காவென கரைந்தாலும்
என் வாசல் பார்க்கிறேன்
நீ வருவாய் என... நீ வருவாய் என..
பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாய் என
பூத்து பூத்து புன்னகை சேர்த்து வைப்பேன்
நீ வருவாய் என
எனக்குள்ள வேதனை நிலவுக்கு தெரிந்திடும்
நிலவுக்கும் ஜோடியில்லை
எழுதிய கவிதைகள் உனை வந்து சேர்ந்திட
கவிதைக்கும் கால்கள் இல்லை
உலகில் பெண் வர்க்கம் நூறு கோடியாம்
அதிலே நீ யாரடி
சருகாய் அன்பே நான் காத்திருக்கிறேன்
எங்கே உன் காலடி
மணி சரி பார்த்து தினம் வழி பார்த்து
இரு விழிகள் தேய்கிறேன்
நீ வருவாய் என... நீ வருவாய் என...
பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாய் என
பூத்து பூத்து புன்னகை சேர்த்து வைப்பேன்
நீ வருவாய் என
தென்றலாக நீ வருவாயா ஜன்னலாகிறேன்
தீர்த்தமாக நீ வருவாயா மேகமாகிறேன்
வண்ணமாக நீ வருவாயா பூக்களாகிறேன்
வார்த்தையாக நீ வருவாயா கவிதையாகிறேன்
நீ வருவாய் என... நீ வருவாய் என...
நீ வருவாய் என... நீ வருவாய் என...
No comments:
Post a Comment