காதல் பிரியாமல் கவிதை தோன்றாது - Kathal Piriyaamal Kavithai Thondraathu Lyrics

காதல் பிரியாமல் கவிதை தோன்றாது
கவியின் திரு ஏட்டிலே
பூக்கள் அழியாமல் கனிகள் தோன்றாது
கொடியின் வரலாற்றிலே
என்னை கவியாய் செய்வாயா
இல்லை கனியாய் செய்வாயா
பழி போடும் பாவையே


நாயகி என்னை நீங்கியதாலே
வீடு வெறிச்சோடிப் போச்சு
நாற்புறம் கண்ணீர் சூழ்ந்ததனாலே
கட்டில் தீவாக ஆச்சு

மணமாகும் முன்பு கண்ணன் நானே
மணமான பின்பு ராமன் தானே
அடி சீதை நீ சொன்னால்
இந்த ராமன் தீ குளிப்பேன்
இல்லை காற்றில் உயிர் கலப்பேன்


காண்பவை எல்லாம் பிழை என்று கொண்டால்
வாழ முடியாது பெண்ணே
கயிறுகள் எல்லாம் பாம்பென கண்டால்
கண்கள் உறங்காது கண்ணே

என் போர்வையோடு உந்தன் வெப்பம்
என் கண்களோடு கண்ணீர் தெப்பம்
வலையோடு தண்ணீர் நிற்குமா
உயிர் நீங்கி உடல் நிற்குமா
உந்தன் ஊடல் தீருமா.....

காதல் பிரியாமல் கவிதை தோன்றாது
கவியின் திரு ஏட்டிலே
பூக்கள் அழியாமல் கனிகள் தோன்றாது
கொடியின் வரலாற்றிலே
என்னை கவியாய் செய்வாயா
இல்லை கனியாய் செய்வாயா
பழி போடும் பாவையே

அத்திக்காய் காய் காய் - Athikai Kaai Kaai Lyrics

அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னைப்போல் பெண்ணல்லவோ
நீ என்னைப்போல் பெண்ணல்லவோ

அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னுயிரும் நீயல்லவோ
என்னுயிரும் நீயல்லவோ

அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே....


ஓ ஓ ஓ.. ஓ ஓ ஓ...

கன்னிக்காய் ஆசைக்காய்
காதல் கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரை காய்
மங்கை எந்தன் கோவை காய்

கன்னிக்காய் ஆசைக்காய்
காதல் கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரை காய்
மங்கை எந்தன் கோவை காய்

மாதுளங்காய் ஆனாலும்
என் உளங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ

இத்திக்காய் காயாதே
என்னைப்போல் பெண்ணல்லவோ


ஓ ஓ ஓ.. ஆ ஆ ஆ ஆ...

இரவுக்காய் உறவுக்காய்
ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய்
நேரில் நிற்கும் இவளை காய்

இரவுக்காய் உறவுக்காய்
ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய்
நேரில் நிற்கும் இவளை காய்

உருவங்காய் ஆனாலும்
பருவங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ

அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னுயிரும் நீயல்லவோ
என்னுயிரும் நீயல்லவோ

ஆ ஆ ஆ ஆ...


ஏலக்காய் வாசனைப்போல்
எங்கள் உள்ளம் வாழக் காய்
சாதிக்காய் பெட்டகம் போல்
தனிமை இன்பம் கனியக்காய்

ஏலக்காய் வாசனைப்போல்
எங்கள் உள்ளம் வாழக் காய்
சாதிக்காய் பெட்டகம் போல்
தனிமை இன்பம் கனியக்காய்

சொன்னதெல்லாம் விளங்காயோ
தூதுவளங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ

அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னுயிரும் நீயல்லவோ
என்னுயிரும் நீயல்லவோ

ஆ ஆ ஆ ஆ...


உள்ளமெலாம் மிளகாயோ
ஒவ்வொரு பேர் சுரைக்காயோ
வெள்ளரிக்காய் பிளந்தது போல்
வெண்ணிலவே சிரித்தாயோ

உள்ளமெலாம் மிளகாயோ
ஒவ்வொரு பேர் சுரைக்காயோ
வெள்ளரிக்காய் பிளந்தது போல்
வெண்ணிலவே சிரித்தாயோ

கோதையை நீ காயாதே
கொற்றவரை காய் வெண்ணிலா
இருவரையும் காயாதே
தனிமையில் ஏங்காய் வெண்ணிலா

அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னுயிரும் நீயல்லவோ
ஆ ஆ ஆ ஆ...

காதலாகினேன் - Kaathalaaginen Lyrics

காதலாகினேன்
எவர் ஏது சொன்னபோதும் நானும்
காதலாகினேன்

காதலாகினேன்
எவர் ஏது சொன்னபோதும் நானும்
காதலாகினேன்

யாது சொல்வரோ
என்னை ஏற்றுக்கொள்வரோ
யாது சொல்வரோ
என்னை ஏற்றுக்கொள்வரோ
காதலாகினேன்

கண்டபோது என்
கண்ணும் கருத்தும்
பின் தொடர்ந்து போனதே
கண்டபோது
கண்ணும் கருத்தும்
பின் தொடர்ந்து போனதே
கண்டபோது என்
கண்ணும் கருத்தும்
பின் தொடர்ந்து போனதே


எண்ணமேறி எங்கும் இல்லை
எண்ணமேறி எங்கும் இல்லை
யாரிடம் எடுத்தே சொல்வேன்
காதலாகினேன்

பூரின்மல்ல பார்வை கொண்டு
ஆசையோடு கேட்கவே
பூரின்மல்ல பார்வை கொண்டு
ஆசையோடு கேட்கவே

நான் மறந்தேன் வசமிழந்தேன்
நான் மறந்தேன் வசமிழந்தேன்
காமனாய் அவர் மீது நான்
காதலாகினேன்

எவர் ஏது சொன்னபோதும் நானும்
காதலாகினேன்

உறவுகள் தொடர்கதை - Uravugal Thodarkadai Lyrics

உறவுகள் தொடர்கதை 
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே

உன் நெஞ்சிலே பாரம்
உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம்
எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம்
வெறும்பனி விலகலாம்
வெண்மேகமே
புது அழகிலே நானும் இணையலாம்

உறவுகள் தொடர்கதை 
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே


வாழ்வென்பதோ கீதம்
வளர்கின்றதோ நாதம்
நாளொன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துன்பம்
இனி வாழ்வெலாம் இன்பம்
சுகராகமே ஆரம்பம்
நதியிலே புதுப்புனல்
கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது
இன்பம் பிறந்தது

உறவுகள் தொடர்கதை 
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே
இனியெல்லாம் சுகமே

அமைதிக்கு பெயர்தான் சாந்தி - Amaithiku Peyarthan Shanthi Lyrics

அமைதிக்கு பெயர்தான் சாந்தி சாந்தி சாந்தி
அந்த அலையினில் ஏதடி சாந்தி சாந்தி சாந்தி
உன் பிரிவினில் ஏதடி சாந்தி சாந்தி சாந்தி
உன் உறவினில் தானடி சாந்தி சாந்தி சாந்தி...

அமைதிக்கு பெயர்தான் சாந்தி
அந்த அலையினில் ஏதடி சாந்தி
உன் பிரிவினில் ஏதடி சாந்தி
உன் உறவினில் தானடி சாந்தி...

சாந்தி என் சாந்தி...


நீ கொண்ட பெயரை நான் உரைத்துக் கண்டேன் சாந்தி
நீ காட்டும் அன்பில் நான் கண்டு கொண்டேன் சாந்தி
நீ பெற்ற துயரை நான் கேட்டுத் துடித்தேன் சாந்தி
நீ பெற்ற துயரை நான் கேட்டுத் துடித்தேன் சாந்தி
நீ பிரிந்த பின்னே நான் இழந்து நின்றேன் சாந்தி
நீ பிரிந்த பின்னே நான் இழந்து நின்றேன் சாந்தி

அமைதிக்கு பெயர்தான் சாந்தி
அந்த அலையினில் ஏதடி சாந்தி


எல்லோரும் வாழ்வில் தேடிடும் பாக்கியம் சாந்தி
என் உயிரோடு கலந்து எழுதிடும் வாக்கியம் சாந்தி
எது வந்தபோதும் மறவாத செல்வம் சாந்தி
எது வந்தபோதும் மறவாத செல்வம் சாந்தி
எனை இன்று வாட்டும் தனிமையில் இல்லையே சாந்தி
எனை இன்று வாட்டும் தனிமையில் இல்லையே சாந்தி

அமைதிக்கு பெயர்தான் சாந்தி
அந்த அலையினில் ஏதடி சாந்தி


உன்னோடு வாழ்ந்த சில காலம் போதும் சாந்தி
மண்ணோடு மறையும் நாள் வரை நிலைக்கும் சாந்தி
கண்ணோடு வழியும் நீரென்று மாறும் சாந்தி
கண்ணோடு வழியும் நீரென்று மாறும் சாந்தி
பொன்னேடு எழுதும் என் உறவு வாழ்த்தும் சாந்தி
பொன்னேடு எழுதும் என் உறவு வாழ்த்தும் சாந்தி

அமைதிக்கு பெயர்தான் சாந்தி
அந்த அலையினில் ஏதடி சாந்தி
உன் பிரிவினில் ஏதடி சாந்தி
உன் உறவினில் தானடி சாந்தி...

சாந்தி என் சாந்தி...
சாந்தி என் சாந்தி...