பாட்டோட வாழும் என் சாமியே
ஒன் பேர போட்டு
நான் பாடும் பாட்டு
கேட்டாக்கா வாழும் ஒன் பூமியே
என் மூச்சு என் பேச்சு
நீதானய்யா
என் வாக்கு நீ கேட்டு
காப்பாத்தய்யா
ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒன்னு நட்டுவச்சேன்
நான் பூவாயி
ஆதரவ தேடி ஒரு
பாட்டு ஒன்னு கட்டிவச்சேன்
நான் பூவாயி
நானா பாடலியே
நீதான் பாடவச்ச
நானா பாடலியே
நீதான் பாடவச்ச
ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒன்னு நட்டுவச்சேன்
நான் பூவாயி
வைகையிலே வந்த வெள்ளம்
நெஞ்சிலே வந்ததென்ன
வஞ்சி நான் கேட்ட வரம்
வந்து நீ தந்ததென்ன
சின்னப் பூ பாத்து
சேர்ந்ததே காத்து
சிந்து தான் பாடுது
பொன்னு மணித்தேரு
நான் பூட்டி வச்சேன் பாரு
கன்னி என்னத்தேடி
நீ அங்க வந்து சேரு
வெதை போட்டேன் அது வெளஞ்சாச்சு
நீ வா என் வழி பாத்து
ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒன்னு நட்டுவச்சேன்
நான் பூவாயி
ஆதரவ தேடி ஒரு
பாட்டு ஒன்னு கட்டிவச்சேன்
நான் பூவாயி
கண்ணு தான் தூங்கவில்ல
காரணம் தோணவில்ல
பொன்னு நான் ஜாதி முல்ல
பூமால ஆகவில்ல
கன்னி தான் நாத்து
கண்ணன் நீ காத்து
வந்து தான் கூடவில்ல
கூரப்பட்டுச் சேல
நீ வாங்கி வரும் வேள
போடு ஒரு மால
நீ சொல்லு அந்த நாள
ஏன் சாமி நான் காத்திருக்கேன்
என்ன ஏந்து நீதானே
ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒன்னு நட்டுவச்சேன்
நான் பூவாயி
ஆதரவ தேடி ஒரு
பாட்டு ஒன்னு கட்டிவச்சேன்
நான் பூவாயி
நானா பாடலியே
நீதான் பாடவச்ச
நானா பாடலியே
நீதான் பாடவச்ச
ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒன்னு நட்டுவச்சேன்
நான் பூவாயி