தல கோதும் எளங்காத்து - Thalakothum Elangaathu Lyrics

தல கோதும் எளங்காத்து
சேதி கொண்டு வரும்
மரமாகும் வெதையெல்லாம்
வாழ சொல்லித் தரும்

ம் ம் ம் ம்.......

கலங்காத கலங்காத
நீயும் நெஞ்சுக்குள்ள
இருளாத விடியாத
நாளும் இங்கு இல்ல

ம் ம் ம் ம்.......

தல கோதும் எளங்காத்து
சேதி கொண்டு வரும்
மரமாகும் வெதையெல்லாம்
வாழ சொல்லித் தரும்

கலங்காத கலங்காத
நீயும் நெஞ்சுக்குள்ள
இருளாத விடியாத
நாளும் இங்கு இல்ல

ரொம்ப பக்கந்தான் பக்கந்தான்
நிழல் நிக்குதே நிக்குதே
ரொம்ப பக்கந்தான் பக்கந்தான்
நிழல் நிக்குதே நிக்குதே
ஒன்ன நம்பி நீ முன்னப் போகையிலே
பாத உண்டாகும்

நிக்காம முன்னேறு
கண்ணோரம் ஏன் கண்ணீரு
நிக்காம முன்னேறு
அன்பால நீ கைசேரு 
கைசேரு.....


நீல வண்ணக் கூர இல்லாத
நிலம் இங்கு ஏது
காலம் என்னும் தோழன் உன்னோடு
தடைகள மீறு
மாறுமோ தானா நிலை எல்லாமே தன்னாலே
போராடு நீயே அறம் உண்டாகும் மண்மேலே
மீதி இருள் நீ கடந்தால்
காலை ஒளி வாசல் வரும்
தோழில் நம்மை ஏந்திக் கொள்ளும்
நமக்கான நாள் வரும்

தல கோதும் எளங்காத்து
சேதி கொண்டு வரும்
மரமாகும் வெதையெல்லாம்
வாழ சொல்லித் தரும்

கலங்காத கலங்காத
நீயும் நெஞ்சுக்குள்ள
இருளாத விடியாத
நாளும் இங்கு இல்ல

ரொம்ப பக்கந்தான் பக்கந்தான்
நிழல் நிக்குதே நிக்குதே
ஒன்ன நம்பி நீ முன்னப் போகையிலே
பாத உண்டாகும்

நிக்காம முன்னேறு
கண்ணோரம் ஏன் கண்ணீரு
நிக்காம முன்னேறு
அன்பால நீ கைசேரு 

நிக்காம முன்னேறு
கண்ணோரம் ஏன் கண்ணீரு
நிக்காம முன்னேறு
அன்பால நீ கைசேரு 

No comments:

Post a Comment