நான் ஏரிக்கர மேலிருந்து
எட்டுத்தெச பாத்திருந்து
ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆன பின்னும்
ஊரடங்கிப் போன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னு தோணல
என் தெம்மாங்கு பாட்ட
தென்காத்து ஓடிவந்து
தூதாக போக வேணும் அக்கரையில
நான் உண்டான ஆசைகள
சொல்லாம பூட்டி வச்சு
உள்ளாற வாடுறேனே இக்கரையில
நான் ஏரிக்கர மேலிருந்து
எட்டுத்தெச பாத்திருந்து
ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆன பின்னும்
ஊரடங்கிப் போன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னு தோணல
நேத்து வெதச்சு வச்ச நேசந்தான்
பூத்து கனிஞ்சு வரும் நேரந்தான்
வாராமப் போகாது
வாடாதே பூந்தேனே
சேராம வாழாது
தண்ணீரச் செம்மீனே
நம்மூரு கோட்டச் சாமி
ஒன்ன என்ன சேர்த்தாச்சு
என் சோடி நீதான் என்று
என்றோ எழுதி வச்சாச்சு
எப்போதும் சொந்தங்கள் போகாது
செந்தாழ கத்தாழ ஆகாது
நான் ஏரிக்கர மேலிருந்து
எட்டுத்தெச பாத்திருந்து
ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆன பின்னும்
ஊரடங்கிப் போன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னு தோணல
என் தெம்மாங்கு பாட்ட
தென்காத்து ஓடிவந்து
தூதாக போக வேணும் அக்கரையில
நான் உண்டான ஆசைகள
சொல்லாம பூட்டி வச்சு
உள்ளாற வாடுறேனே இக்கரையில
நான் ஏரிக்கர மேலிருந்து
எட்டுத்தெச பாத்திருந்து
ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆன பின்னும்
ஊரடங்கிப் போன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னு தோணல
ஊரார் ஒதுக்கி வச்ச ஓவியம்
என்னப் பொறுத்த வர காவியம்
எந்நாளும் நீதான்டி
என்னோட ராசாத்தி
பொன்னாட்டம் நெஞ்சோடு
வச்சேனே காப்பாத்தி
எங்கே நான் போனா என்ன
எண்ணம் யாவும் இங்கே தான்
ஒன் பேர மெட்டுக் கட்டி
உள்ளம் பாடும் அங்கே தான்
என்னாச காத்தோடு போகாது
எந்நாளும் என் வாக்கு பொய்க்காது
நான் ஏரிக்கர மேலிருந்து
எட்டுத்தெச பாத்திருந்து
ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆன பின்னும்
ஊரடங்கிப் போன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னு தோணல
என் தெம்மாங்கு பாட்ட
தென்காத்து ஓடிவந்து
தூதாக போக வேணும் அக்கரையில
நான் உண்டான ஆசைகள
சொல்லாம பூட்டி வச்சு
உள்ளாற வாடுறேனே இக்கரையில
நான் ஏரிக்கர மேலிருந்து
எட்டுத்தெச பாத்திருந்து
ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆன பின்னும்
ஊரடங்கிப் போன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னு தோணல