செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே - Senbagame Senbagame Thenpothigai Lyrics

செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தா சம்மதமே
செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே


உன் பாதம் போகும் பாதை
நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசப்பட்டு
பாத்து காத்து நின்னேனே
உன் பாதம் போகும் பாதை
நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசப்பட்டு
பாத்து காத்து நின்னேனே
உன் முகம் பாத்து
நிம்மதியாச்சு
என் மனம் தானா
பாடிடலாச்சு
என்னோட பாட்டு சத்தம்
தேடும் உன்ன பின்னால
எப்போதும் ஒன்ன தொட்டு
பாடப்போறேன் தன்னால

செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தா சம்மதமே
செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே


மூனாம் பிறையப்போல
காணும் நெத்திப் பொட்டோட
நானும் கலந்திருக்க வேணும்
இந்த பாட்டோட
மூனாம் பிறையப்போல
காணும் நெத்திப் பொட்டோட
நானும் கலந்திருக்க வேணும்
இந்த பாட்டோட
கருத்தது மேகம்
தலைமுடி தானோ
இழுத்தது என்ன
பூவிழி தானோ
எள்ளுப்பூ நாசிப்பத்தி
பேசிப் பேசி தீராது
உன் பாட்டுக்காரன் பாட்டு
ஒன்ன விட்டு போகாது

செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தா சம்மதமே
செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே

No comments:

Post a Comment