ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு - Ondrenriru Deivam Undenriru Lyrics

ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு
ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு
செல்வமெல்லாம் அன்றென்றிரு
உயர் செல்வமெல்லாம் அன்றென்றிரு
ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு


பசித்தோர் முகம் பார்
நல்லறமும் நட்பும் நன்றென்றிரு
ஆ..ஆ..ஆ...
பசித்தோர் முகம் பார்
நல்லறமும் நட்பும் நன்றென்றிரு
நடு நீங்காமலே 
நமக்கு இட்டபடி என்றென்றிரு
மனமே உனக்குபதேசம் இதே


நாட்டமின்றே இரு 
சத்குரு பாதத்தை நம்பு
நாட்டமின்றே இரு 
சத்குரு பாதத்தை நம்பு
பொம்மலாட்டமென்றே இரு
பொல்லா உடலை
ஆ.. ஆ...ஆ...
பொம்மலாட்டமென்றே இரு
பொல்லா உடலை
அடர்ந்த சந்தை கூட்டமென்றே இரு
சுற்றத்தை அடர்ந்த சந்தை கூட்டமென்றே இரு
சுற்றத்தை வாழ்வை
உடன்கவிழ் நீர்
ஓட்டமென்றே இரு
சுற்றத்தை வாழ்வை
உடன்கவிழ் நீர்
ஓட்டமென்றே இரு
நெஞ்சே உனக்குபதேசம் இதே

ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு
ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு
செல்வமெல்லாம் அன்றென்றிரு
உயர் செல்வமெல்லாம் அன்றென்றிரு
ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு

No comments:

Post a Comment