ஒரு காலத்திலே என்னைக் கட்டிப் போட - Oru Kaalathile Ennai Katti Poda Lyrics

ஒரு காலத்திலே என்னைக் கட்டிப் போட
ஒரு ராஜ்ஜியம் இருந்தது

ஒரு காலத்திலே என்னைக் கட்டிப் போட
ஒரு ராஜ்ஜியம் இருந்தது
அன்பு ராஜ்ஜியம் இருந்தது

அந்த ராஜ்ஜியத்தை ஆண்ட
ராஜாவின் பின்னால் பூஜ்ஜியம் இருந்தது
ஒரு பூஜ்ஜியம் இருந்தது

அந்த ராஜ்ஜியத்தை ஆண்ட
ராஜாவின் பின்னால் பூஜ்ஜியம் இருந்தது
ஒரு பூஜ்ஜியம் இருந்தது


அட நாலு செவத்துல பிஞ்சு கரங்கள்
கோடு கிழிச்சதய்யா
அட நாலு செவத்துல பிஞ்சு கரங்கள்
கோடு கிழிச்சதய்யா
அந்த கோடு கிழிச்சவன் கூட இருக்கையில்
வீடு சிரிச்சதய்யா
இந்த வீடு சிரிச்சதய்யா

நல்ல புத்தி இருந்தது சக்தி இருந்தது
பிள்ளை இருக்கையிலே
இப்ப பித்து பிடிச்சது
ரத்தம் கொதிச்சது தன்னந்தனிமையிலே
இன்று தன்னந்தனிமையிலே

ஒரு காலத்திலே ....
ஒரு காலத்திலே என்னைக் கட்டிப் போட
ஒரு ராஜ்ஜியம் இருந்தது
அன்பு ராஜ்ஜியம் இருந்தது


அவன் கள்ளச்சிரிப்பிலே என்னை மயக்கிய
கண்ண பரமாத்மா
அவன் கள்ளச்சிரிப்பிலே என்னை மயக்கிய
கண்ண பரமாத்மா
அவன் போட்ட விலங்கினில் மாட்டி தவிக்குது
சின்னஞ்சிறு ஆத்மா
சின்னஞ்சிறு ஆத்மா

அவன் பேசும் மழலைகள்
ஊதும் குழலென காதில் இனிச்சதய்யா
இந்த மீசைக் கிழவனின் ஆசைக் குழந்தையை
காலம் பிரிச்சதய்யா
கலி காலம் பிரிச்சதய்யா

ஒரு காலத்திலே ....
ஒரு காலத்திலே என்னைக் கட்டிப் போட
ஒரு ராஜ்ஜியம் இருந்தது
அன்பு ராஜ்ஜியம் இருந்தது


இந்த பாட்டன் படுகிற பாட்ட நெனச்சா
பாசம் புரியலயா
இந்த பாட்டன் படுகிற பாட்ட நெனச்சா
பாசம் புரியலயா
அது பாட்டி மனசயும் வாட்டி எடுப்பது
பார்த்தா தெரியலயா
பார்த்தா தெரியலயா

அட ஊரார் குழந்தைய ரெண்டு கிழங்களும்
ஊட்டி வளர்த்ததய்யா
இப்ப ஓட்ட படகென பாசச் சுழலிலே
மாட்டி முழிக்குதய்யா
பாவம் மாட்டி முழிக்குதய்யா

ஒரு காலத்திலே ....
ஒரு காலத்திலே என்னைக் கட்டிப் போட
ஒரு ராஜ்ஜியம் இருந்தது
அன்பு ராஜ்ஜியம் இருந்தது

அந்த ராஜ்ஜியத்தை ஆண்ட
ராஜாவின் பின்னால் பூஜ்ஜியம் இருந்தது
ஒரு பூஜ்ஜியம் இருந்தது

No comments:

Post a Comment