சித்திரத்தில் பெண் எழுதி - Chithirathil Pen Eluthi Lyrics

சித்திரத்தில் பெண் எழுதி
சீர்படுத்தும் மாநிலமே
ஜீவனுள்ள பெண்ணினத்தை
வாழவிட மாட்டாயோ

சித்திரத்தில் பெண் எழுதி
சீர்படுத்தும் மாநிலமே
ஜீவனுள்ள பெண்ணினத்தை
வாழவிட மாட்டாயோ

சித்திரத்தில் பெண் எழுதி
சீர்படுத்தும் மாநிலமே


காவியத்தில் காதல் என்றால்
கரைந்துருகும் கற்பனையே
காவியத்தில் காதல் என்றால்
கரைந்துருகும் கற்பனையே
கண் நிறைந்த காதலுக்கே
கண்ணீர் தான் உன் வழியோ
கண் நிறைந்த காதலுக்கே
கண்ணீர் தான் உன் வழியோ
கண்ணீர் தான் உன் வழியோ

சித்திரத்தில் பெண் எழுதி
சீர்படுத்தும் மாநிலமே
ஜீவனுள்ள பெண்ணினத்தை
வாழவிட மாட்டாயோ

சித்திரத்தில் பெண் எழுதி
சீர்படுத்தும் மாநிலமே


அன்னையென்றும் தெய்வமென்றும்
ஆர்ப்பரிக்கும் பெரியோரே
அன்னையென்றும் தெய்வமென்றும்
ஆர்ப்பரிக்கும் பெரியோரே
இன்னமுத தெய்வமெல்லாம்
ஏட்டில் வரும் தேன் தானோ
இன்னமுத தெய்வமெல்லாம்
ஏட்டில் வரும் தேன் தானோ

மன்னர் குல கன்னியரும்
கண்கலங்க நேருமென்றால்
மன்னர் குல கன்னியரும்
கண்கலங்க நேருமென்றால்
மண்டலத்தில் பெண்களுக்கே
வாய்த்த விதி இது தானோ
வாய்த்த விதி இது தானோ

சித்திரத்தில் பெண் எழுதி
சீர்படுத்தும் மாநிலமே
ஜீவனுள்ள பெண்ணினத்தை
வாழவிட மாட்டாயோ

சித்திரத்தில் பெண் எழுதி
சீர்படுத்தும் மாநிலமே

2 comments: