கண் இழந்த பிள்ளைக்கு - Kan Ilantha Pillaiku Deivam Lyrics

கண் இழந்த பிள்ளைக்கு
தெய்வம் தந்த தரிசனம்
அன்புமிக்க ஒரு மனம்
நல்லவர்க்கு ஒரு குணம்

கண் இழந்த பிள்ளைக்கு
தெய்வம் தந்த தரிசனம்
அன்புமிக்க ஒரு மனம்
நல்லவர்க்கு ஒரு குணம்

கண் இழந்த பிள்ளைக்கு
தெய்வம் தந்த தரிசனம்


தாயின் குரல் கேட்டதுண்டு
தந்தை முகம் பார்த்ததுண்டு
ஜீவனற்ற கண்களுக்கு
தேவன் முகம் தெரிகிறது

தாயின் குரல் கேட்டதுண்டு
தந்தை முகம் பார்த்ததுண்டு
ஜீவனற்ற கண்களுக்கு
தேவன் முகம் தெரிகிறது
அந்த மரக்கிளைதனிலே
வந்தமர்ந்த பறவை ஒன்று
அந்த மரக்கிளைதனிலே
வந்தமர்ந்த பறவை ஒன்று
தந்ததொரு அன்பு கண்டு
தந்தை தன்னை மறந்ததுண்டு

கண் இழந்த பிள்ளைக்கு
தெய்வம் தந்த தரிசனம்
அன்புமிக்க ஒரு மனம்
நல்லவர்க்கு ஒரு குணம்

கண் இழந்த பிள்ளைக்கு
தெய்வம் தந்த தரிசனம்


ஏற்றிவிட்ட ஏணி ஒன்று
நின்றபடி நிற்கிறது
ஏறிவிட்ட ஒரு மனமோ
வேறு வழி நடக்கிறது

ஏற்றிவிட்ட ஏணி ஒன்று
நின்றபடி நிற்கிறது
ஏறிவிட்ட ஒரு மனமோ
வேறு வழி நடக்கிறது
ஏற்றியதும் குற்றமில்லை
ஏணியிலும் பாவமில்லை
ஏற்றியதும் குற்றமில்லை
ஏணியிலும் பாவமில்லை
மாற்றியது காலம் என்னும்
மாயக்காரன் லீலை அம்மா

கண் இழந்த பிள்ளைக்கு
தெய்வம் தந்த தரிசனம்


தேவன் அவன் கோயிலிலே
கோடை வெயில் சுடுகிறது
தேவி அவள் வாசலிலோ
செல்வ மழை பொழிகிறது

தேவன் அவன் கோயிலிலே
கோடை வெயில் சுடுகிறது
தேவி அவள் வாசலிலோ
செல்வ மழை பொழிகிறது
நல்லவர்க்கு பொருள் எதற்கு
நாடி வரும் புகழ் எதற்கு
நல்லவர்க்கு பொருள் எதற்கு
நாடி வரும் புகழ் எதற்கு
உன்னுடைய வசந்தத்திலே
ஒன்றுமில்லை ருசிப்பதற்கு

கண் இழந்த பிள்ளைக்கு
தெய்வம் தந்த தரிசனம்
அன்புமிக்க ஒரு மனம்
நல்லவர்க்கு ஒரு குணம்

கண் இழந்த பிள்ளைக்கு
தெய்வம் தந்த தரிசனம்

No comments:

Post a Comment