யார் போய் சொல்லுவார் - Yaar Poi Solluvaar Lyrics

பிறந்தது மண் மேல் 
இறப்பதற்கென்றே பேசிடும் ஊன்
பிறந்தது மண் மேல்
இறப்பதற்கென்றே பேசிடும் ஊன்
துறந்தனர் சுகமும்
துக்கத்திற்கு ஈடெனும் 
சொல்லும் கண்டேன்

கரம்தனைக் கூப்பி
சுடலையைக் காக்க
கனிவு கொண்டேன்
வரம் தந்து வாழ்த்திட
சிவனே நின்பாதமே
சரண் புகுந்தேன்
நின்பாதமே
சரண் புகுந்தேன்

யார் போய் சொல்லுவார்
இந்த ஏழை வருந்தும் வேளை
அரணிடம் யார் போய் சொல்லுவார்
இந்த ஏழை வருந்தும் வேளை
அரணிடம் யார் போய் சொல்லுவார்


பார்தனிலே தன் பத்தினியை இழந்து
பார்தனிலே தன் பத்தினியை இழந்து
பரதவிக்கும் நிலையை
யார் போய் சொல்லுவார்
இந்த ஏழை வருந்தும் வேளை
அரணிடம் யார் போய் சொல்லுவார்

விதியே உனக்கொரு முடிவில்லையா
விதியே உனக்கொரு முடிவில்லையா
உன் லீலைக்குமே ஓர் அளவில்லையா
விதியே உனக்கொரு முடிவில்லையா
உன் லீலைக்குமே ஓர் அளவில்லையா
எதிரேதும் இல்லாத
செங்கோலை இழந்தேன்
எதிரேதும் இல்லாத
செங்கோலை இழந்தேன்
விதியேதும் இல்லாமல்
சுடுகோலை அடைந்தேன்
யார் போய் சொல்லுவார்
இந்த ஏழை வருந்தும் வேளை
அரணிடம் யார் போய் சொல்லுவார்

No comments:

Post a Comment