எட்டடி கோயிலிலே நீ வசிக்க - Ettadi Koyilile Nee Vasikka Lyrics

மாயா உலகத்திலே
மதி மயங்கி நில்லாமல்
உன் மங்காத ஜோதியிலே
மகிழ்வது தான் எக்காலம்
மகிழ்வது தான் எக்காலம்

எட்டடி கோயிலிலே
நீ வசிக்க இடமும் இருக்குதய்யா
எட்டடி கோயிலிலே
நீ வசிக்க இடமும் இருக்குதய்யா
அங்கு நிஷ்டையில் நீ இருந்தால்
மாயா நித்திரை மறையுமய்யா
அங்கு நிஷ்டையில் நீ இருந்தால் 
மாயா நித்திரை மறையுமய்யா
மாயா நித்திரை மறையுமய்யா
மாயா நித்திரை மறையுமய்யா
எட்டடி கோயிலிலே
நீ வசிக்க இடமும் இருக்குதய்யா


தேயாத நிலவு என்றே
தேகத்தை எண்ணாமல்
திகட்டாத ஜோதியிலே
திகழ்வது நான் எக்காலம்
ஆசையின் கயிற்றினிலே
பம்பரம் அகந்தையால் ஆடுதய்யா
ஆசையின் கயிற்றினிலே
பம்பரம் அகந்தையால் ஆடுதய்யா
ஐம்புலச் சிறைதனிலே
ஐம்புலச் சிறைதனிலே
நீ அமர்ந்தால் அமைதியும் நாடுமய்யா
ஐம்புலச் சிறைதனிலே
நீ அமர்ந்தால் அமைதியும் நாடுமய்யா
எட்டடி கோயிலிலே
நீ வசிக்க இடமும் இருக்குதய்யா


காயாகி கனியாகி
கனிந்திடும் நிலையாகி
கண்ணான ஜோதியிலே
கலப்பது நான் எக்காலம்
கலப்பது நான் எக்காலம்
பாதத்தின் சதங்கையிலே
ஓங்கார நாதமும் தொனிக்குதய்யா
பாதத்தின் சதங்கையிலே
ஓங்கார நாதமும் தொனிக்குதய்யா
பக்குவ நிலை அடைந்தால்
பக்குவ நிலை அடைந்தால்
என் வாழ்வும் பண்புடன் இனிக்குமய்யா
பக்குவ நிலை அடைந்தால்
என் வாழ்வும் பண்புடன் இனிக்குமய்யா
எட்டடி கோயிலிலே
நீ வசிக்க இடமும் இருக்குதய்யா

No comments:

Post a Comment