இளமை கொலுவிருக்கும் இனிமை - Ilamai Koluvirukum Inimai Lyrics

இளமை கொலுவிருக்கும்
இனிமை சுவையிருக்கும்
இயற்கை மணமிருக்கும்
பருவத்திலே
பெண் இல்லாமல் சுகமில்லை
உலகத்திலே

இளமை கொலுவிருக்கும்
இனிமை சுவையிருக்கும்
இயற்கை மணமிருக்கும்
பருவத்திலே
பெண் இல்லாமல் சுகமில்லை
உலகத்திலே


அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ
அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ
அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ
அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ
கவிஞர் பாடுவதும்
கலைஞர் நாடுவதும்
இளைஞர் தேடுவதும் பெண்ணல்லவோ
பெண் இயற்கையின் சீதனப்பரிசல்லவோ

இளமை கொலுவிருக்கும்
இனிமை சுவையிருக்கும்
இயற்கை மணமிருக்கும்
பருவத்திலே
பெண் இல்லாமல் சுகமில்லை
உலகத்திலே


பொன்னும் பொருளும் வந்து
மொழி சொல்லுமா
ஒரு பூவைக்கு மாலையிடும்
மணம் வருமா
பொன்னும் பொருளும் வந்து
மொழி சொல்லுமா
ஒரு பூவைக்கு மாலையிடும்
மணம் வருமா
இன்று தேடிவரும் நாளை ஓடிவிடும்
செல்வம் சிரித்தபடி அமுதிடுமா
எந்த செல்வமும் பெண்மையின்
சுகம் தருமா

இளமை கொலுவிருக்கும்
இனிமை சுவையிருக்கும்
இயற்கை மணமிருக்கும்
பருவத்திலே
பெண் இல்லாமல் சுகமில்லை
உலகத்திலே

இளமை கொலுவிருக்கும்
இனிமை சுவையிருக்கும்
இயற்கை மணமிருக்கும்
பருவத்திலே
பெண் இல்லாமல் சுகமில்லை
உலகத்திலே

No comments:

Post a Comment