அன்பே வா அருகிலே என் வாசல் வழியிலே - Anbe vaa arugile en vaasal valiyile lyrics

அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே
உல்லாச மாளிகை மாளிகை
எங்கே என் தேவதை தேவதை
நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன்
நாள்தோறும் முள்ளின் மீது தூங்கினேன்

அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே



இத்தனை நாள் வாய் மொழிந்த
சித்திரமே இப்பொழுது
மௌனம் ஏன் தானோ
மின்னலென மின்னிவிட்டு
கண்மறைவாய் சென்றுவிட்ட
மாயம் நீ தானோ
உன்னால் வந்த காதல்
உன்னால் தானே வாழும்
என்னை நீங்கி போனால்
உன்னைச் சேரும் பாவம்
எனக்கொரு அடைக்கலம்
வழங்குமோ உன் இதயமே

அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே
உல்லாச மாளிகை மாளிகை
எங்கே என் தேவதை தேவதை
நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன்
அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே



உள்ளத்துக்குள் உள்ளிருந்து
மெல்ல மெல்ல கொல்லுவது
காதல் நோய் தானோ
வைகை என பொய்கை என
மையலிலே எண்ணியது
கானல் நீர் தானோ
என்னை நீயும் தூண்ட
எண்ணக் கோலம் போட்டேன்
மீண்டும் கோலம் போட
உன்னைத் தானே கேட்டேன்
எனக்கொரு அடைக்கலம்
வழங்குமோ உன் இதயமே

அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே
உல்லாச மாளிகை மாளிகை
எங்கே என் தேவதை தேவதை
நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன்
நாள்தோறும் முள்ளின் மீது தூங்கினேன்
அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே

ஓ சிதம்பர வாசனே தில்லை நடராஜனே - O Chidambara nathane thillai nadarajane Lyrics

ஓ சிதம்பர வாசனே...
ஓ சிதம்பர வாசனே
தில்லை நடராஜனே
சிவகாமி நேசனே வா..
உன் நடனத்தைக் காணவே
நாடி வந்தேன் சிவனே
நலம் பெற அருள்வாயே..

ஓ சிதம்பர வாசனே...
ஓ சிதம்பர வாசனே
தில்லை நடராஜனே
சிவகாமி நேசனே வா..
உன் நடனத்தைக் காணவே
நாடி வந்தேன் சிவனே
நலம் பெற அருள்வாயே..



பிட்டுக்கு மண் சுமந்த நேசனே
கையால் பிரம்படி பட்ட பரமேசனே
பிட்டுக்கு மண் சுமந்த நேசனே
கையால் பிரம்படி பட்ட பரமேசனே
கட்டுக்கட்டாய் விறகினை
கடைத்தெருவில் விற்று வந்த 
கயிலைகிரி நாதனே வா
உன் நடனத்தைக் காணவே
நாடி வந்தேன் சிவனே
நலம் பெற அருள்வாயே..

ஓ சிதம்பர வாசனே...
ஓ சிதம்பர வாசனே
தில்லை நடராஜனே
சிவகாமி நேசனே வா..
உன் நடனத்தைக் காணவே
நாடி வந்தேன் சிவனே
நலம் பெற அருள்வாயே..



சாம்பல் நிறம் பூசிக் கொண்டு வந்து
தலை ஆண்டி வேடம் போட்டுக் கொண்டு வந்து 
சாம்பல் நிறம் பூசிக் கொண்டு வந்து
தலை ஆண்டி வேடம் போட்டுக் கொண்டு வந்து 
சாம்பசிவ சங்கரா சாம்பசிவ சங்கரா
சாம்பசிவ சங்கரா வா..
உன் நடனத்தைக் காணவே
நாடி வந்தேன் சிவனே
நலம் பெற அருள்வாயே..

ஓ சிதம்பர வாசனே...
ஓ சிதம்பர வாசனே
தில்லை நடராஜனே
சிவகாமி நேசனே வா..
உன் நடனத்தைக் காணவே
நாடி வந்தேன் சிவனே
நலம் பெற அருள்வாயே..