அமுதக்கடல் உனக்குத் தான் - Amutha kadal unakku than lyrics

அமுதக்கடல் உனக்குத் தான்
ஆறா மழை உனக்குத் தான்
நீங்கா நிழல் உனக்குத் தான்
நீ கண்மணி எனக்குத் தானே
பொருந்திப் போ நீ தோளோடு
மடியில் ஊஞ்சல் ஆடு

என் பார்வை உன்னோடு
உன் பொம்மை கண்ணோடு
பேசாமல் விண்ணோடு
நாம் மிதந்து போவோம்
காதோரம் அடி ஆலோலம்
நான் தாங்க மாரோடு
வா விருது தேரே வா



சந்திக்கா மலர் உனக்குத் தான்
கண்டிக்கா மொழி உனக்குத் தான்
சிந்திக்கா நொடி உனக்குத் தான்
சிரிக்கும் நதி உனக்குத் தானே
வழியும் எச்சில் வாயோரம்
எனது காயம் ஆறும்

என் தங்கம் முன்னாடி
என் காலக் கண்ணாடி
உன் ஆசை என்னாடி
நான் நடத்தி வைப்பேன்
வாழ்ந்தாலும் தரை வீழ்ந்தாலும்
உன் கால்கள் என் நெஞ்சில்
வா அழகுத் தேனே வா



பத்து விரல் கோலம் போட
பூமி மேல முளைச்ச சித்திரமே
உன் அசைவ பாத்து பாத்து
ஆயுள் கூடும் எனக்கு
புன்னகையில் காலம் போக
தோகையாக சிரிச்ச பெட்டகமே
யாருக்கிங்கு யாரு காவல்
மாறிப்போச்சு கணக்கு

என் கூட பேசுற தூத்தோவா உனக்கு
நேருல காட்டட்டுவா
சில்லுக்கு புடிச்ச எல்லா இனிப்பும்
சாப்பிட தரட்டுமா
அந்த அருவிப் போல் அன்ப தருவாளே
சின்ன அறிவிப்பும் இன்றி சுடுவாளே
நீ தும்மிடுடி தும்மிடுடி ஆயுசு நூறாக
என் உயிர் உன்னோட பத்திர சொத்தாக

என் பார்வை உன்னோடு
உன் பொம்மை கண்ணோடு
பேசாமல் விண்ணோடு
நாம் மிதந்து போவோம்
காதோரம் அடி ஆலோலம்
நான் தாங்க மாரோடு
வா விருது தேரே வா

எண்ணமே என் உன்னால - Enname en unnaala lyrics

எண்ணமே என் உன்னால
உள்ள பூந்தது தன்னால
கன்னமே என் கண்ணால
வெந்து செவந்து புண்ணாக
ஏதோ நானும் உளர
கொஞ்சம் காதல் வளர
உள்ள வெட்கம் வளர
அவ வந்தா தேடியே

தன்ன நேரம் நிக்குது
மோகம் சொக்குது
வார்த்தை திக்குதம்மா
நெஞ்சம் பூட்டி வச்சத
வந்து ஒடச்சிட்டம்மா

கட்சி சேர நிக்குது
கண் அழைக்குது
பொன் நனைந்திடவா
அன்பு தேங்கி நிக்குது
வந்து எடுத்துக்கோ மா



யாரும் பாத்து நின்னு பேசவில்ல
காத்து நின்னு குடுத்ததில்ல
நீயும் வந்து பாத்ததால பனியும் பத்திக்கிச்சே
கண் மறைச்சு போற புள்ள
முன் அழைச்சது யாருமில்ல
உன் மனசில் தான் விழுந்தேன் நானும் தங்கிடவே

எண்ணமே என் உன்னால
உள்ள பூந்தது தன்னால
கன்னமே என் கண்ணால
வெந்து செவந்து புண்ணாக
ஏதோ நானும் உளர
கொஞ்சம் காதல் வளர
உள்ள வெட்கம் வளர
அவ வந்தா தேடியே

தன்ன நேரம் நிக்குது
மோகம் சொக்குது
வார்த்தை திக்குதம்மா
நெஞ்சம் பூட்டி வச்சத
வந்து ஒடச்சிட்டம்மா

கட்சி சேர நிக்குது
கண் அழைக்குது
பொன் நனைந்திடவா
அன்பு தேங்கி நிக்குது
வந்து எடுத்துக்கோ மா

ஆராத்யா என் ஆராத்யா - Aaraadhya en aaraadhya tamil song lyrics

You are my sun shine
You are my moon light
You are star in the sky
Come with me now
You have my desire

வெண் தீயாய் வந்தாயா ஆராத்யா
கணவனே கேளடா
கனவு நீதானடா
கண் திறந்து காண்கிறேன்
காதல் பாயுதடா

நெருங்காதே விலகாதே
உன் பக்கமிருந்தால் கெட்டுப்போவேன்
தள்ளியிருந்தால் நல்லவனாவேனே
உன் புன்னகை என்னை கொய்வது பொய்யா
மெய் எனை மென்மை செய்வது மெய்யா
ஆராத்யா என் ஆராத்யா
என் இதய துணைவியே ஆராத்யா
ஆராத்யா என் ஆராத்யா
கலவியின் தலைவியே ஆராத்யா



காதோடு நான் சொன்ன
ஓர் சொல் உன் தோள் வீழ்ந்து 
உன் மார்பில் உடைகின்றதோ
மார்போடு நான் தந்த
ஓர் முத்தம் மேலேறி
மோட்சங்கள் அடைகின்றதோ
சொல்வாயா... 
செய்வாயா...
கொல்வாயா... 
உயிர் தந்து மீண்டும் கொல்வாயா

ஆராத்யா என் ஆராத்யா
என் இதய துணைவியே ஆராத்யா
ஆராத்யா என் ஆராத்யா
கலவியின் தலைவியே ஆராத்யா



நாத்தீகன் நான் என்று
தெய்வங்கள் பொய் என்று
நீ தோன்றும் முன் நம்பினேன்
அச்சங்கள் வீணென்று
பேயெல்லாம் பொய் என்று
நீ தோன்றும் முன் நம்பினேன்
அஞ்சாதே... 
கொஞ்சாதே...
நீங்காதே... 
எந்நாளும் நீ என்னை நீங்காதே

நெருங்காதே விலகாதே
உன் பக்கமிருந்தால் கெட்டுப்போவேன்
தள்ளியிருந்தால் நல்லவனாவேனே
உன் புன்னகை என்னை கொய்வது பொய்யா
மெய் எனை மென்மை செய்வது மெய்யா
ஆராத்யா என் ஆராத்யா
என் இதய துணைவியே ஆராத்யா
ஆராத்யா என் ஆராத்யா
கலவியின் தலைவியே ஆராத்யா

கணவனே கேளடா
கனவு நீதானடா
கண் திறந்து காண்கிறேன்
காதல் பாயுதடா

உனக்காக எல்லாம் உனக்காக - Unakkaaga ellaam unakkaaga lyrics

உனக்காக எல்லாம் உனக்காக
உனக்காக எல்லாம் உனக்காக
இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பது உனக்காக
உனக்காக எல்லாம் உனக்காக
இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பது உனக்காக

எதுக்காக கண்ணே எதுக்காக
நீ எப்பவும் இப்படி எட்டி இருப்பது எதுக்காக
எதுக்காக கண்ணே எதுக்காக
நீ எப்பவும் இப்படி எட்டி இருப்பது எதுக்காக
கண்ணுக்குள்ளே வந்து கலகம் செய்வது எதுக்காக
கண்ணுக்குள்ளே வந்து கலகம் செய்வது எதுக்காக
மெல்ல காதுக்குள்ளே உந்தன் கருத்தை சொல்லிடு முடிவாக

உனக்காக எல்லாம் உனக்காக
இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பது உனக்காக



பள்ளியிலே இன்னும் ஒரு தரம் படிக்கணுமா
இல்லே பயித்தியமா பாடி ஆடி நடிக்கணுமா
பள்ளியிலே இன்னும் ஒரு தரம் படிக்கணுமா
இல்லே பயித்தியமா பாடி ஆடி நடிக்கணுமா
துள்ளி வரும் காவேரியில் குதிக்கணுமா
துள்ளி வரும் காவேரியில் குதிக்கணுமா
சொல்லு சோறு தண்ணி வேறு ஏதுமில்லாம கிடக்கணுமா

உனக்காக எல்லாம் உனக்காக
இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பது உனக்காக



இலங்கை நகரத்திலே இன்ப வள்ளி நீ இருந்தா
இந்து மகா சமுத்திரத்தை இங்கேருந்தே தாண்டிடுவேன்
இலங்கை நகரத்திலே இன்ப வள்ளி நீ இருந்தா
இந்து மகா சமுத்திரத்தை இங்கேருந்தே தாண்டிடுவேன்
மேகம் போலே வான வீதியிலே நின்னு மிதந்திடுவேன்
மேகம் போலே வான வீதியிலே நின்னு மிதந்திடுவேன்
இடி மின்னல் மழை புயல் ஆனாலும் துணிந்து இறங்கிடுவேன்

உனக்காக எல்லாம் உனக்காக
இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பது உனக்காக
உனக்காக எல்லாம் உனக்காக
இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பது உனக்காக