ஆராத்யா என் ஆராத்யா - Aaraadhya en aaraadhya tamil song lyrics

You are my sun shine
You are my moon light
You are star in the sky
Come with me now
You have my desire

வெண் தீயாய் வந்தாயா ஆராத்யா
கணவனே கேளடா
கனவு நீதானடா
கண் திறந்து காண்கிறேன்
காதல் பாயுதடா

நெருங்காதே விலகாதே
உன் பக்கமிருந்தால் கெட்டுப்போவேன்
தள்ளியிருந்தால் நல்லவனாவேனே
உன் புன்னகை என்னை கொய்வது பொய்யா
மெய் எனை மென்மை செய்வது மெய்யா
ஆராத்யா என் ஆராத்யா
என் இதய துணைவியே ஆராத்யா
ஆராத்யா என் ஆராத்யா
கலவியின் தலைவியே ஆராத்யா



காதோடு நான் சொன்ன
ஓர் சொல் உன் தோள் வீழ்ந்து 
உன் மார்பில் உடைகின்றதோ
மார்போடு நான் தந்த
ஓர் முத்தம் மேலேறி
மோட்சங்கள் அடைகின்றதோ
சொல்வாயா... 
செய்வாயா...
கொல்வாயா... 
உயிர் தந்து மீண்டும் கொல்வாயா

ஆராத்யா என் ஆராத்யா
என் இதய துணைவியே ஆராத்யா
ஆராத்யா என் ஆராத்யா
கலவியின் தலைவியே ஆராத்யா



நாத்தீகன் நான் என்று
தெய்வங்கள் பொய் என்று
நீ தோன்றும் முன் நம்பினேன்
அச்சங்கள் வீணென்று
பேயெல்லாம் பொய் என்று
நீ தோன்றும் முன் நம்பினேன்
அஞ்சாதே... 
கொஞ்சாதே...
நீங்காதே... 
எந்நாளும் நீ என்னை நீங்காதே

நெருங்காதே விலகாதே
உன் பக்கமிருந்தால் கெட்டுப்போவேன்
தள்ளியிருந்தால் நல்லவனாவேனே
உன் புன்னகை என்னை கொய்வது பொய்யா
மெய் எனை மென்மை செய்வது மெய்யா
ஆராத்யா என் ஆராத்யா
என் இதய துணைவியே ஆராத்யா
ஆராத்யா என் ஆராத்யா
கலவியின் தலைவியே ஆராத்யா

கணவனே கேளடா
கனவு நீதானடா
கண் திறந்து காண்கிறேன்
காதல் பாயுதடா

No comments:

Post a Comment