உன் நெஞ்சத் தொட்டு சொல்லு - Un nenja thottu sollu lyrics

உன் நெஞ்சத் தொட்டு சொல்லு
என் ராசா
என் மேல் ஆசை இல்லயா
உன் நெஞ்சத் தொட்டு சொல்லு
என் ராசா
என் மேல் ஆசை இல்லயா
என் மேல் ஆசை இல்லயா

உன் நெஞ்சத் தொட்டு சொல்லு
என் ராசா
என் மேல் ஆசை இல்லயா
என் மேல் ஆசை இல்லயா
வானந்தான் சாட்சி இருக்கு
பூமி தான் சாட்சி இருக்கு

உன் நெஞ்சத் தொட்டு சொல்லு
என் ராசா
என் மேல் ஆசை இல்லயா
என் மேல் ஆசை இல்லயா



தண்ணிக்குள்ளே முக்குளிச்சு
முத்து ஒன்னு எடுத்ததென்ன
தனிச்சிருந்து சூடையிலே
தவறி அது விழுந்ததென்ன
கோயிலிலே சாமி முன்னே
வேடிக்கை தான் நடக்குமம்மா
சாமியும் தான் எனக்கு இங்கே
வேடிக்கை தான் நடத்துதம்மா
நல்ல காதலுக்கு இது வாடிக்கையா

உன் நெஞ்சத் தொட்டு சொல்லு
என் ராசா
என் மேல் ஆசை இல்லயா
என் மேல் ஆசை இல்லயா



தாகத்திலே சிப்பி ஒன்னு
தண்ணிக்குள்ளே மிதக்குதம்மா
மேகத்திலே நீர்க்குடிக்க
நீருக்குள்ளே தவிக்குதம்மா
ஆயிரம் பேர் ஊருக்குள்ளே
ஆம்பிளன்னு இங்கில்லயா
ஆயிரமும் உனக்கிணையா
எனக்கு அது வழித்துணையா
இந்த கேள்விக்கு நீ ஒரு பதிலச் சொல்லு

உன் நெஞ்சத் தொட்டு சொல்லு
என் ராசா
என் மேல் ஆசை இல்லயா
என் மேல் ஆசை இல்லயா
வானந்தான் சாட்சி இருக்கு
பூமி தான் சாட்சி இருக்கு

உன் நெஞ்சத் தொட்டு சொல்லு
என் ராசா
என் மேல் ஆசை இல்லயா
என் மேல் ஆசை இல்லயா

பூங்காத்து திரும்புமா என் பாட்ட விரும்புமா - Poongaathu thirumbumaa en paata virumbumaa lyrics

பூங்காத்து திரும்புமா
என் பாட்ட விரும்புமா
பாராட்ட மடியில் வச்சு தாலாட்ட
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா
பூங்காத்து திரும்புமா
என் பாட்ட விரும்புமா

ராசாவே வருத்தமா
ராசாவே வருத்தமா
ஆகாயம் சுருங்குமா
ஏங்காதே கதை உலகம் தாங்காதே
அடுக்குமா சூரியன் கருக்குமா



என்ன சொல்லுவேன்
என்னுள்ளம் தாங்கல
மெத்தை வாங்குனேன்
தூக்கத்த வாங்கல
இந்த வேதனை யாருக்குத் தான் இல்ல
உன்ன மீறவே ஊருக்குள் ஆள் இல்ல

ஏதோ என் பாட்டுக்கு நான் பாட்டு பாடி
சொல்லாத சோகத்த சொன்னேனடி
சுக ராகம் சோகம் தானே
சுக ராகம் சோகம் தானே
யாரது போறது
குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா

பூங்காத்து திரும்புமா
என் பாட்ட விரும்புமா
பாராட்ட மடியில் வச்சு தாலாட்ட
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா



உள்ள அழுகுறேன் 
வெளிய சிரிக்கிறேன்
நல்ல வேசந்தான் 
வெளுத்து வாங்குறேன்
உங்க வேசந்தான் கொஞ்சம் மாறணும்
எங்க சாமிக்கு மகுடம் ஏறணும்

மானே என் நெஞ்சுக்கு பால் வார்த்த தேனே
முன்னே என் பார்வைக்கு வா வா பெண்ணே
எசப் பாட்டு படிச்சேன் நானே
எசப் பாட்டு படிச்சேன் நானே
பூங்குயில் யாரது
கொஞ்சம் பாருங்க பெண் குயில் நானுங்க

அடி நீ தானா அந்தக் குயில்
யார் வீட்டு சொந்தக் குயில்
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததே ஒலகமே மறந்ததே
நான் தானே அந்தக் குயில்
தானாக வந்தக் குயில்
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததா ஒலகந்தான் மறந்ததா

காதல் வைபோகமே காணும் நன்னாளிதே - Kathal vaibogame kaanum nannaalithe lyrics

காதல் வைபோகமே
காணும் நன்னாளிதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடிக் கிளிகள் கூடி இணைந்து
ஆனந்தப் பண்பாடுமே

காதல் வைபோகமே
காணும் நன்னாளிதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடிக் கிளிகள் கூடி இணைந்து
ஆனந்தப் பண்பாடுமே



கோடைக் காலத்தில் தென்றல்
குளிரும் பௌர்ணமி திங்கள்
வாடைக் காலத்தில் கூடல்
விளையாடல் ஊடல்

வானம் தாலாட்டுப் பாட
மழைகள் பொன்னூஞ்சல் போட
நீயும் என் கையில் ஆட
சுகம் தேட.. கூட..
பூவில் மேடை அமைத்து
பூவை உன்னை அணைத்தால்
கதகதப்பு துடிதுடிப்பு
இது கல்யாணப் பரபரப்பு

காதல் வைபோகமே
காணும் நன்னாளிதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடிக் கிளிகள் கூடி இணைந்து
ஆனந்தப் பண்பாடுமே



எண்ணம் என்னென்ன வண்ணம்
இளமை பொன் என்று மின்னும்
எங்கும் ஆனந்த ராகம்
புது பாவம்.. தாபம்..
மேகலை பாடிடும் ராகம்
ராகங்கள் பாடிடும் தேகம்
தேகத்தில் ஊறிய மோகம்
சமபோகம்.. யோகம்..

வாழ்ந்தால் உந்தன் மடியில்
வளர்ந்தால் உந்தன் அருகில்
அனுபவிப்பேன் தொடர்ந்திருப்பேன்
ஏழேழு ஜென்மமெடுப்பேன்

காதல் வைபோகமே
காணும் நன்னாளிதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடிக் கிளிகள் கூடி இணைந்து
ஆனந்தப் பண்பாடுமே

பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம் - Pesa koodaathu verum pechil sugam lyrics

பேசக் கூடாது....
பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம்.. ஹோய்
ஏதும் இல்லை வேகம் எல்லை
லீலைகள் காண்போமே..

ஆசை கூடாது மணமாலை தந்து.. ஹோய்
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு
லீலைகள் காண்போமே..
ஆசை கூடாது....



பார்க்கும் பார்வை நீ
என் வாழ்வும் நீ
என் கவிதை நீ
பாடும் ராகம் நீ
என் நாதம் நீ
என் உயிரும் நீ

காலம் யாவும் நான் உன் சொந்தம்
காக்கும் தெய்வம் நீ
ஆலில் ஆடும் மேனி எங்கும்
கொஞ்சும் செல்வம் நீ
இலையோடு கனி ஆட
தடை போட்டால் ஞாயமா.. ஆ
உன்னாலே பசி தூக்கம் இல்லை
எப்போதும் நெஞ்சுக்குள் தொல்லை
இனி மேல் ஏன் இந்த எல்லை

ஆசை கூடாது மணமாலை தந்து.. ஹோய்
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு
லீலைகள் காண்போமே..
பேசக் கூடாது....



காலைப் பனியும் நீ
கண்மணியும் நீ
என் கனவும் நீ
மாலை மயக்கம் நீ
பொன் மலரும் நீ
என் நினைவும் நீ

ஊஞ்சல் ஆடும் பருவம் உண்டு
உரிமை தர வேண்டும்
நூலில் ஆடும் இடையும் உண்டு
நாளும் வர வேண்டும்
பல காலம் உனக்காக மனம் ஏங்கி வாடுதே
வருகின்ற தை மாதம் சொந்தம்
அணிகின்ற மணிமாலை பந்தம்
இரவோடும் பகலோடும் இன்பம்

ஆசை கூடாது மணமாலை தந்து.. ஹோய்
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு
லீலைகள் காண்போமே..
பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம்.. ஹோய்
ஏதும் இல்லை வேகம் எல்லை
லீலைகள் காண்போமே..