வளர்ந்த கலை மறந்து விட்டாள் - Valarntha kalai maranthuvittaal lyrics

வளர்ந்த கலை மறந்து விட்டாள்
கேளடா கண்ணா
அவள் வடித்து வைத்த ஓவியத்தை
பாரடா கண்ணா
வளர்ந்த கலை மறந்து விட்டாள்
கேளடா கண்ணா
அவள் வடித்து வைத்த ஓவியத்தை
பாரடா கண்ணா

குடும்ப கலை போதுமென்று
கூறடா கண்ணா
அதில் கூட இந்த கலைகள் வேறு 
ஏனடா கண்ணா
குடும்ப கலை போதுமென்று
கூறடா கண்ணா
அதில் கூட இந்த கலைகள் வேறு 
ஏனடா கண்ணா

வளர்ந்த கலை மறந்து விட்டாள்
கேளடா கண்ணா
அவள் வடித்து வைத்த ஓவியத்தை
பாரடா கண்ணா



காதல் சொன்ன பெண்ணை இன்று
காணோமே கண்ணா
காதல் சொன்ன பெண்ணை இன்று
காணோமே கண்ணா
கட்டியவள் மாறிவிட்டாள்
ஏனடா கண்ணா
தாலி கட்டியவள் மாறிவிட்டாள்
ஏனடா கண்ணா

காதலி தான் மனைவி என்று
கூறடா கண்ணா
அந்த காதலி தான் மனைவி என்று
கூறடா கண்ணா
அன்று கண்ணை மூடிக் கொண்டிருந்தார்
ஏனடா கண்ணா
மனதில் அன்றே எழுதி வைத்தேன்
தெரியுமா கண்ணா
அதை மறுபடியும் எழுதச் சொன்னால்
முடியுமா கண்ணா

தினம் தினம் ஏன் கோபம் கொண்டாள்
கூறடா கண்ணா
அவள் தேவை என்ன ஆசை என்ன
கேளடா கண்ணா
நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல
முடியுமா கண்ணா
அதை நீ பிறந்த பின்பு கூற
இயலுமா கண்ணா

வளர்ந்த கலை மறந்து விட்டாள்
கேளடா கண்ணா
அவள் வடித்து வைத்த ஓவியத்தை
பாரடா கண்ணா



இன்று வரை நடந்ததெல்லாம்
போகட்டும் கண்ணா
இன்று வரை நடந்ததெல்லாம்
போகட்டும் கண்ணா
இனி என்னிடத்தில் கோபமின்றி
வாழச் சொல் கண்ணா
இனி என்னிடத்தில் கோபமின்றி
வாழச் சொல் கண்ணா

அவரில்லாமல் எனக்கு வேறு
யாரடா கண்ணா
அவரில்லாமல் எனக்கு வேறு
யாரடா கண்ணா
நான் அடைக்கலமாய் வந்தவள் தான்
கூறடா கண்ணா

No comments:

Post a Comment