மன்னவனே அழலாமா
கண்ணீரை விடலாமா
உன் உயிராய் நான் இருக்க
என் உயிராய் நீ இருக்க
மன்னவா மன்னவா மன்னவா
மன்னவனே அழலாமா
கண்ணீரை விடலாமா
உன் உயிராய் நான் இருக்க
என் உயிராய் நீ இருக்க
கண்ணை விட்டு போனாலும்
கருத்தை விட்டு போகவில்லை
கண்ணை விட்டு போனாலும்
கருத்தை விட்டு போகவில்லை
மண்ணை விட்டு போனாலும்
உன்னை விட்டு போகவில்லை
மண்ணை விட்டு போனாலும்
உன்னை விட்டு போகவில்லை
இன்னொருத்தி உடலெடுத்து
இருப்பவளும் நானல்லவா
கண்ணெடுத்தும் பாராமல்
கலங்குவதும் வீணல்லவா
மன்னவா மன்னவா மன்னவா
மன்னவனே அழலாமா
கண்ணீரை விடலாமா
உன் உயிராய் நான் இருக்க
என் உயிராய் நீ இருக்க
உன் மயக்கம் தீர்க்க வந்த
பெண் மயிலை புரியாதா
உன் மயக்கம் தீர்க்க வந்த
பெண் மயிலை புரியாதா
தன் மயக்கம் தீராமல்
தவிக்கின்றாய் தெரியாதா
தன் மயக்கம் தீராமல்
தவிக்கின்றாய் தெரியாதா
என் உடலில் ஆசை என்றால்
என்னை நீ மறந்துவிடு
என் உயிரை மதித்திருந்தால்
வந்தவளை வாழ விடு
மன்னவா மன்னவா மன்னவா
மன்னவனே அழலாமா
கண்ணீரை விடலாமா
உன் உயிராய் நான் இருக்க
என் உயிராய் நீ இருக்க
No comments:
Post a Comment