உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே - Unnai kaanaathu naan indru naanillaye lyrics

அதிநவநீதா அபிநய ராஜா
கோகுல பாலா கோடி பிரகாசா
விரக நரக ஶ்ரீரக்சக மாலா
எத்தனை முறை நான் ஏங்கிச் சாவேன்
இத்தவணை எனை ஆட்கொள்வாயா

சூடிய வாடலை சூடியவா
களவாடிய சிந்தை திரும்பத் தா
பூதகியாக பணித்திடுவாயா
பாவை விரகம் பருகிடுவாயா
ஆயர் தம் மாயா நீ வா
மாயா மாயா
ஆயர் தம் மாயா நீ வா
மாயா மாயா
ஆயர் தம் மாயா நீ வா
மாயா மாயா வா..

உன்னைக் காணாது நான் இன்று
நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
உன்னைக் காணாது நான் இன்று
நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
மாயத் திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
மாயத் திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
கிருஷ்ணா.... 

உன்னைக் காணாது நான் இன்று
நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
நிதம் காண்கின்ற வான் கூட நிஜம் அல்ல
இதம் சேர்க்கும் கனா கூட சுகம் அல்ல
நீ இல்லாமல் நான் இல்லையே

உன்னைக் காணாமல்
உன்னைக் காணாமல்
உன்னைக் காணாமல்
உன்னைக் காணாமல்

உன்னைக் காணாமல் 
பெண் நெஞ்சு தடுமாறுதே
விதை இல்லாமல் வேர் இல்லையே
நளின மோக சாமன ரங்கா
தீம் தீம்கிட தின்னா
நடன பாவ சுதிலய கங்கா
தீம் தீம்கிட தின்னா
சரிவர தூங்காது வாடும்
மனம் தினம் உனக்காக ஏங்கும்
ராதா தான் உனக்கென ராதா தான்
உனக்கொரு ராதா தான்



அவ்வாறு நோக்கினால் எவ்வாறு நாணுவேன்
கண்ணாடி முன் நின்று பார்த்துக் கொண்டேன்
ஒன்றாகச் செய்திட ஒரு நூறு நாடகம்
ஒத்திகைகள் செய்து எதிர் பார்த்திருந்தேன்
எதிர்பாராமலே அவன்
எதிர்பாராமலே அவன்
ஓ... பின்னிருந்து வந்து எனை
பம்பரமாய் சுழற்றி விட்டு
உலகுண்ட பெருவாயன் எந்தன்
வாயோடு வாய் பதித்தான்
இங்கு பூலோகம் என்றொரு 
பொருள் உள்ளதை
இந்த பூங்கோதை மறந்தாளடி



உடலணிந்த ஆடை போல்
எனை அணிந்து கொள்வாயா இனி நீ
இனி நீ கண்ணா..
தூங்காத என் கண்ணின்
துயிலுரித்த கண்ணன் தான் இனி நீ
இனி நீ
இது நேராமலே நான்
உனை பாராமலே நான்
இந்த முழு ஜென்மம் போயிருந்தால்
என்று அதை எண்ணி வீண் ஏக்கம்
ஏங்காமலே உன்னை மூச்சாக்கி வாழ்வேனடா

மாயத் திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
மாயத் திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா

ரோஜா ரோஜா - Roja roja song lyrics

ரோஜா... ரோஜா....
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

கண்ட பின்னே உன்னிடத்தில்
என்னை விட்டு வீடு வந்தேன்

உனை தென்றல் தீண்டவும் விடமாட்டேன்
அந்த திங்கள் தீண்டவும் விடமாட்டேன்
உனை வேறு கைகளில் தரமாட்டேன்
நான் தரமாட்டேன் நான் தரமாட்டேன் 
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா



நிலத்தினில் உன் நிழல் விழ ஏங்குவேன்
நிழல் விழுந்த மணலையும் மடியினில் தாங்குவேன்
உடையென எடுத்து எனை உடுத்து
நூல் ஆடை கொடி மலர் இடையினை 
உறுத்தும் ரோஜா

உன் பேர் மெல்ல நான் சொன்னதும்
என் வீட்டு ரோஜாக்கள் பூக்கின்றன
ஓர் நாள் உனைக் காணா விடில்
எங்கே உன் அன்பென்று கேட்கின்றன
நீ வந்தால் மறு கணம் விடியும் என் வானமே

மழையில் நீ நனைகையில் எனக்கு காய்ச்சல் வரும்
வெயிலில் நீ நடக்கையில் எனக்கு வேர்வை வரும்
உடல்கள் தான் ரெண்டு உணர்வுகள் ஒன்று
ரோஜா ரோஜா ரோஜா

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா...
கண்ட பின்னே உன்னிடத்தில்
என்னை விட்டு வீடு வந்தேன்



இளையவளின் இடை ஒரு நூலகம்
படித்திடவா பனி விழும் இரவுகள் ஆயிரம்
இடைவெளி எதற்கு சொல் நமக்கு
உன் நாணம் ஒரு முறை விடுமுறை
எடுத்தால் என்ன

என்னை தீண்டக் கூடாதென
வானோடு சொல்லாது வங்கக்கடல்
என்னை ஏந்தக் கூடாதென
கையோடு சொல்லாது புல்லாங்குழல்

நீ தொட்டால் நிலவினில் கறைகளும் நீங்குமே
விழிகளில் வழிந்திடும் அழகு நீர் வீழ்ச்சியே
எனக்கு நீ உனைத் தர எதற்கு ஆராய்ச்சியே
உனை விட வேறு நினைவுகள் ஏது
ரோஜா ரோஜா ரோஜா

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா 
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா 
கண்ட பின்னே உன்னிடத்தில்
என்னை விட்டு வீடு வந்தேன்

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா 
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா 
ரோஜா ரோஜா 

கூண்டுக்குள்ள என்ன வச்சு கூடி நின்ன - Koondukkulla onna vachu koodi ninna lyrics

கூண்டுக்குள்ள என்ன வச்சு
கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே

கூண்டுக்குள்ள என்ன வச்சு
கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே
அடி மானே மானே ஒன்னத் தானே
எண்ணி நானும் நாளும் தவித்தேனே
அடி மானே மானே ஒன்னத் தானே
எண்ணி நானும் நாளும் தவித்தேனே

கூண்டுக்குள்ள என்ன வச்சு
கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே



கண்ணு வலது கண்ணு
தானே துடிச்சதுன்னா ஏதோ நடக்குமின்னு பேச்சு
மானம் கொறையுமின்னு மாசு படியுமின்னு
வீணா கத முடிஞ்சு போச்சு
ஈசான மூலையில லேசான பல்லிச் சத்தம்
மாமன் பேர சொல்லிப் பேசுது
ஆறாத சோகந்தன்ன தீராம சேர்த்து வச்சு
ஊரும் சேர்ந்து என்ன ஏசுது
மாமா மாமா ஒன்னத் தானே
எண்ணி நானும் நாளும் தவித்தேனே

கூண்டுக்குள்ள என்ன வச்சு
கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே
கூண்டுக்குள்ள ஒன்ன வச்சு
கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள வந்ததிந்த கோலக்கிளியே



தென்னங்கிளையும் தென்றல் காத்தும் குயிலும்
அடி மானே உன்ன தினம் பாடும்
கஞ்சி மடிப்பும் கறை வேட்டி துணியும்
இந்த மாமன் கதைய தினம் பேசும்
பொள்ளாச்சி சந்தையில கொண்டாந்த சேலையில
சாயம் இன்னும் விட்டி போகல
பண்ணாரி கோயிலுக்கு முந்தான ஓரத்தில
நேர்ந்து முடிச்சு வச்ச கடன் தீரல
மானே மானே ஒன்னத் தானே
எண்ணி நானும் நாளும் தவித்தேனே

கூண்டுக்குள்ள ஒன்ன வச்சு
கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள வந்ததிந்த கோலக்கிளியே
கூண்டுக்குள்ள என்ன வச்சு
கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே
என் மாமா மாமா ஒன்னத் தானே
எண்ணி நானும் நாளும் தவித்தேனே
அடி மானே மானே ஒன்னத் தானே
எண்ணி நானும் நாளும் தவித்தேனே

கூண்டுக்குள்ள என்ன வச்சு
கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் - Nalam vaazha ennaalum en vaazhthukkal song lyrics

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன் மீது பண் பாடும்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன் மீது பண் பாடும்

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்



மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் பிழை ஆகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்
விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதில் என்ன பாவம் எதற்கிந்த சோகம் கிளியே

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்



கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது
கடல்களில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது
நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான் இறைவன்

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன் மீது பண் பாடும்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன் மீது பண் பாடும்

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

எல்லோரும் சொல்லும் பாட்டு சொல்வேனே - Ellorum sollum paatu solvene

எல்லோரும் சொல்லும் பாட்டு
சொல்வேனே உன்னைப் பார்த்து
மேடையே வையகம் ஒரு மேடையே
வேஷமே அங்கெல்லாம் வெறும் வேமே
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே

எல்லோரும் சொல்லும் பாட்டு
சொல்வேனே உன்னைப் பார்த்து



நாயகன் மேலிருந்து 
நூலினை ஆட்டுகின்றான்
நாமெல்லாம் பொம்மை என்று 
நாடகம் காட்டுகின்றான்
காவியம் போலொரு காதலை தீட்டுவான்
காரணம் ஏதுமின்றி காட்சியை மாற்றுவான்
ரயில் ஸ்னேகமாய் புயலடித்த மேகமாய்
கலைந்து வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே

எல்லோரும் சொல்லும் பாட்டு
சொல்வேனே உன்னைப் பார்த்து



கோவலன் காதை தன்னில்
மாதவி வந்ததுண்டு
மாதவி இல்லையென்றால்
கண்ணகி ஏது இன்று
மானிடன் ஜாதகம் இறைவனின் கையிலே
மயக்கங்கள் நேர்வதில்லை தெளிந்தவர் நெஞ்சிலே
எது கூடுமோ எது விலகி ஓடுமோ
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே

எல்லோரும் சொல்லும் பாட்டு
சொல்வேனே உன்னைப் பார்த்து
மேடையே வையகம் ஒரு மேடையே
வேஷமே அங்கெல்லாம் வெறும் வேமே
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே