கண்ணா என் சேலக்குள்ள கட்டெறும்பு - Kannaa En Selaikulla Katterumbu Lyrics

கண்ணா என் சேலக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு
கண்ணே நீ வெல்லம் என்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு அதுக்கு
எறும்பு செய்யும் லீலை போல்
குறும்பு செய்ய வந்தாயோ
உள்ளே என்னமோ பண்ண

கண்ணா என் சேலக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு
கண்ணே நீ வெல்லம் என்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு ம்.. அதுக்கு



அங்கே தொட்டு இங்கே தொட்டு
எங்கே தொட எண்ணம் ராசா
ஆஹா.. ஆஹஆஹா.. 
ஏஹே.. 
கன்னம் தொட்டு வண்ணம் தொட்டு
ம்ம்ம்.. தொட எண்ணம் ரோசா
ஆஹா.. ஆஹஆஹா.. 
ஆஹா..
இது தேவையான குறும்பு
கொஞ்சம் சிலிர்த்து போன உடம்பு
வா வா ஆ... வா வா...
வா வா ஆ... வா வா...

கண்ணா என் சேலக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு
கண்ணே நீ வெல்லம் என்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு அதுக்கு



பூமிக்குள்ள பொன்ன வச்சான்
பொண்ணுக்குள்ள என்ன வச்சான்
ம்ஹும்.. ஆஹஆஹா.. 
ஓஹோ..
ஆம்பளைக்கு மீசை வச்சான்
பொம்பளைக்கு என்ன வச்சான்
ம்ஹும்.. ம்ஹும் ம்ஹும்.. 
லலா...
அதை தெரிஞ்சி விளக்கம் தாறேன்
உன்ன திருடி குடிக்கப் போறேன்
வா வா ஆ... வா வா...
வா வா ஆ... வா வா...

கண்ணா என் சேலக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு
கண்ணே நீ வெல்லம் என்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு அதுக்கு
எறும்பு செய்யும் லீலை போல்
குறும்பு செய்ய வந்தாயோ
உள்ளே என்னமோ பண்ண

கண்ணா என் சேலக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு
கண்ணே நீ வெல்லம் என்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு ம்ம்ம்

உயிரே வா உறவே வா அழிவதில்லை - Uyire Vaa Urave Vaa Alivathillai Lyrics

உயிரே வா உறவே வா
உயிரே வா உறவே வா
அழிவதில்லை காதல் 
அதுவே என் பாடல்
அன்பே வந்துவிடு வா
எந்தன் மூச்சே நீ தான் என்பேன்
எந்தன் வாழ்வே காதல் என்பேன்
உண்மை காதல் தோற்குமா
உந்தன் மனம் என்னை ஏற்குமா

உயிரே வா உறவே வா



சிலருக்கு தேவை தேகம் தான்
அவரது உணர்வோ காமம் தான்
சிலருக்கு தேவை இதயம் தான்
அவரது காதல் புனிதம் தான்
சிலருக்கு தேவை இதயம் தான்
அவரது காதல் புனிதம் தான்
போனால் இதயம் திரும்பாது
வேறொரு இதயம் பொருந்தாது
ஒரு முறை தான் நினைத்துவிட்டால்
மறப்பது என்பது முடியாது

உயிரே வா உறவே வா



சிலர் வாசனைக்கு ஆயிரம் பூக்கள்
சிலர் வாசலுக்கு ஆயிரம் கதவுகள்
சிலர் வாழும் வரை ஆயிரம் உறவுகள்
நான் சாகும் வரை ஒருத்தியின் நினைவுகள்
சிலர் வாழும் வரை ஆயிரம் உறவுகள்
நான் சாகும் வரை ஒருத்தியின் நினைவுகள்
கடல் மேல் முத்து மிதப்பதில்லை
உண்மை காதல் சுலபமாய் கிடைப்பதில்லை
பெண் மனதை ஆழம் என்பேன்
காதல் முத்தெடுக்க மூழ்கும் ஆண்கள் என்பேன்

உயிரே வா உறவே வா
அழிவதில்லை காதல் 
அதுவே என் பாடல்
அன்பே வந்துவிடு வா
எந்தன் மூச்சே நீ தான் என்பேன்
எந்தன் வாழ்வே காதல் என்பேன்
உண்மை காதல் தோற்குமா
உந்தன் மனம் என்னை ஏற்குமா

உயிரே வா உறவே வா

ராத்திரியில் பாடும் பாட்டு கேட்க - Raathiriyil Paadum Paatu Kekka Lyrics

ராத்திரியில் பாடும் பாட்டு
கேட்க கேட்க ஆசை ஆச்சு
ஆத்தங்கர ஈரக்காத்து
மேல பட்டு மோகம் ஆச்சு
போடும் நிலா சோறு
என் பொன்னு மணி தேரு
கூட வந்து சேரு
நான் சொட்டுங்கனிச் சாறு

ஏ... ராத்திரியில் பாடும் பாட்டு
கேட்க கேட்க ஆசை ஆச்சு
ஆத்தங்கர ஈரக்காத்து
மேல பட்டு மோகம் ஆச்சு



கள்ளழகர் வைகை ஆத்தில்
கால வைக்கும் நல்ல நாளில்
எட்டு பட்டி ஊரு சனம்
கட்டுச் சோறு கட்டி வரும்
சொக்கனுக்கு மீனாள் போலே
பக்கத் துணை வாச்ச தாலே
சின்னஞ்சிறு சோடியெல்லாம்
சித்திரையில் இங்கு வரும்
உன் மேல தான் ஆச வச்சேன்
வேறெதுக்கு மீச வச்சேன்
என் புருஷன் நீயாகத்தான்
போன சென்மம் பூச வச்சேன்
உன்னோடு தான் நான் கூட
என்னோடு தான் நீ கூட
போடு முந்தானை

ஆத்தங்கர ஈரக்காத்து
மேல பட்டு மோகம் ஆச்சு
ராத்திரியில் பாடும் பாட்டு
கேட்க கேட்க ஆசை ஆச்சு
கூட வந்து சேரு
நான் சொட்டுங்கனிச் சாறு
போடும் நிலா சோறு
என் பொன்னு மணி தேரு



எல்லோருக்கும் எழுதி வச்சான்
எங்களத்தான் கட்டி வச்சான்
பொஞ்சாதியோ பூந்தோரணம்
நானும் ரொம்ப சாதாரணம்
வெண்ணிலவ மேகம் போல
என்ன அவ மூடி வப்பா
மத்தவங்க கண்ணு பட்டா
தத்தளிப்பா தான் தவிப்பா
ஊருக்கவ ராணி போல
எனக்கு அவ அம்மன் போல
சொல்லப்போனா என்னப்போல
பாக்கியவான் யாருமில்ல
தாரங்கூட தாயப்போல
ஈடு சொல்ல யாருமில்ல
எல்லாம் என் யோகம்

ராத்திரியில் பாடும் பாட்டு
கேட்க கேட்க ஆசை ஆச்சு
ஆத்தங்கர ஈரக்காத்து
மேல பட்டு மோகம் ஆச்சு
போடும் நிலா சோறு
என் பொன்னு மணி தேரு
கூட வந்து சேரு
நான் சொட்டுங்கனிச் சாறு

ராத்திரியில் பாடும் பாட்டு
கேட்க கேட்க ஆசை ஆச்சு
ஆத்தங்கர ஈரக்காத்து
மேல பட்டு மோகம் ஆச்சு

ஆராரோ பாட்டு பாட நானும் தாயில்லை - Aaraaro Paatu Paada Naanum Thaayillai Lyrics

ஆராரோ பாட்டு பாட
நானும் தாயில்லை
உன் பேர் சொல்லி வாழ்த்து கூற
நீயும் சேயில்லை
இது போல உறவும் இல்லை
இனி என்றும் பிரிவதில்லை
இது போல உறவும் இல்லை
இனி என்றும் பிரிவதில்லை

ஆரிராராரோ பாட்டு பாட
நானும் தாயில்லை
உன் பேர் சொல்லி வாழ்த்து கூற
நீயும் சேயில்லை



மார்பிலே போட்டு நான்
பாட வழி தான் இல்லையே
மடியிலே போட்டு தான்
பார்க்க நினைத்தால் தொல்லையே
வயதில் வளர்ந்த குழந்தையே
வம்பு கூடாது
சிரித்து மயக்கும் உன்னையே
நம்பக் கூடாது
மேலாடை பார்த்து தான்
நீ சிரித்தால் ஆகுமா
மேனியே கூசுதே
ஆசை வேர் விடுதே

ஆரிராராரோ பாட்டு பாட
நானும் தாயில்லை
உன் பேர் சொல்லி வாழ்த்து கூற
நீயும் சேயில்லை
இது போல உறவும் இல்லை
இனி என்றும் பிரிவதில்லை
இது போல உறவும் இல்லை
இனி என்றும் பிரிவதில்லை

ஆரிராராரோ பாட்டு பாட
நானும் தாயில்லை
உன் பேர் சொல்லி வாழ்த்து கூற
நீயும் சேயில்லை



தோளிலே நாளெல்லாம்
சாய்ந்து இருந்தால் போதுமே
வாழ்விலே ஆனந்தம்
மேலும் நிறைந்தே கூடுமே
இதயம் எழுதும் இனிமையே.. ம்...
இன்பம் வேறேது
கனவில் வளர்ந்த கவிதையே.. ம்ஹூம்..
என்றும் மாறாது
நீ என்றும் தேன் என்றும்
பேதங்கள் ஏதம்மா
நினைத்ததும் இனித்திடும்
காதல் பூ மழையே

ஆரிராராரோ பாட்டு பாட
நானும் தாயில்லை
உன் பேர் சொல்லி வாழ்த்து கூற
நீயும் சேயில்லை
இது போல உறவும் இல்லை
இனி என்றும் பிரிவதில்லை
இது போல உறவும் இல்லை
இனி என்றும் பிரிவதில்லை

ஆரிராராரோ பாட்டு பாட
நானும் தாயில்லை
உன் பேர் சொல்லி வாழ்த்து கூற
நீயும் சேயில்லை

கண்ணனே நீ வரக் காத்திருந்தேன் - Kannane Nee Vara Kaathirunden Lyrics

கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலைப் பார்த்திருந்தேன்
கண்விழித் தாமரை பூத்திருந்தேன்
என்னுடல் வேர்த்திருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்
மன்னவன் ஞாபகமே
கற்பனை மேடையில் கண்டிருந்தேன்
மன்மத நாடகமே
அந்திப் பகல் கண்ணிமையில்
உன்னருகே... ஏ...

கண்மணி நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலைப் பார்த்திருந்தேன்



நீலம் பூத்த ஜாலப் பார்வை
மானா மீனா
நான்கு கண்கள் பாடும் பாடல்
நீயா நானா
நீலம் பூத்த ஜாலப் பார்வை
மானா மீனா
நான்கு கண்கள் பாடும் பாடல்
நீயா நானா
கள்ளிருக்கும் பூவிது பூவிது
கையணைக்கும் நாளிது நாளிது
பொன்னென மேனியும்
மின்னிட மின்னிட
மெல்லிய நூலிடை
பின்னிட பின்னிட
வாடையில் வாடிய
ஆடையை மூடிய
தேன்.. நான்...

கண்மணி நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலைப் பார்த்திருந்தேன்
கண்விழித் தாமரை பூத்திருந்தேன்
என்னுடல் வேர்த்திருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்
மங்கையின் ஞாபகமே
கற்பனை மேடையில் கண்டிருந்தேன்
மன்மத நாடகமே
பொன்னழகே பூவழகே
என்னருகே... ஏ...
கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலைப் பார்த்திருந்தேன்



ஆசை தீரப் பேச வேண்டும்
வரவா வரவா
நாலு பேர்க்கு ஓசை கேட்கும்
மெதுவா மெதுவா
ஆசை தீரப் பேச வேண்டும்
வரவா வரவா
நாலு பேர்க்கு ஓசை கேட்கும்
மெதுவா மெதுவா
பெண் மயங்கும் 
நீ தொட நீ தொட
கண் மயங்கும் 
நான் வர நான் வர
அங்கங்கு வாலிபம்
பொங்கிட பொங்கிட
அங்கங்கள் யாவிலும்
தங்கிட தங்கிட
தோள்களில் சாய்ந்திட
தோகையை ஏந்திட
யார்.. நீ.. 

கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலைப் பார்த்திருந்தேன்
கண்விழித் தாமரை பூத்திருந்தேன்
என்னுடல் வேர்த்திருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்
மன்னவன் ஞாபகமே
கற்பனை மேடையில் கண்டிருந்தேன்
மன்மத நாடகமே
அந்திப் பகல் கண்ணிமையில்
உன்னருகே... ஏ...

கண்மணி நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலைப் பார்த்திருந்தேன்
கண்விழித் தாமரை பூத்திருந்தேன்
என்னுடல் வேர்த்திருந்தேன்

கேளடி கண்மணி பாடகன் சங்கதி - Keladi Kanmani Paadagan Sangathi Lyrics

கேளடி கண்மணி
பாடகன் சங்கதி
நீ இதை கேட்பதால்
நெஞ்சில் ஓர் நிம்மதி
ஆ..ஆ..ஆ..ஆ..
நாள் முழுதும்
பார்வையில் நான் எழுதும்
ஓர் கதையை உனக்கென
நான் கூற

கேளடி கண்மணி
பாடகன் சங்கதி



எந்நாளும் தானே
தேன் விருந்தாவது
பிறர்க்காக நான் பாடும்
திரைப் பாடல் தான்
இந்நாளில் தானே
நான் இசைத்தேன் அம்மா
எனக்காக நான் பாடும்
முதல் பாடல் தான்
கானல் நீரால் தீராத தாகம்
கங்கை நீரால் தீர்ந்ததடி
நான் போட்ட பூமாலை
மணம் சேர்க்கவில்லை
நீ தானே எனக்காக
மடல் பூத்த முல்லை

கேளடி கண்மணி
பாடகன் சங்கதி
நீ இதை கேட்பதால்
நெஞ்சில் ஓர் நிம்மதி



நீங்காத பாரம்
என் நெஞ்சோடு தான்
நான் தேடும் சுமைதாங்கி
நீயல்லவா
நான் வாழும் நேரம்
உன் மார்போடு தான்
நீ என்னை தாலாட்டும்
தாயல்லவா
ஏதோ ஏதோ ஆனந்த ராகம்
உன்னால் தானே உண்டானது
கால் போன பாதைகள்
நான் போன போது
கை சேர்த்து நீ தானே
மெய் சேர்த்த மாது

கேளடி கண்மணி
பாடகன் சங்கதி
நீ இதை கேட்பதால்
நெஞ்சில் ஓர் நிம்மதி
ஆ..ஆ..ஆ..ஆ..
நாள் முழுதும்
பார்வையில் நான் எழுதும்
ஓர் கதையை உனக்கென
நான் கூற

கேளடி கண்மணி
பாடகன் சங்கதி
நீ இதை கேட்பதால்
நெஞ்சில் ஓர் நிம்மதி

குயிலப் புடிச்சி கூண்டில் அடைச்சி - Kuyila Pudichi Koondil Adaichi Lyrics

குயிலப் புடிச்சி கூண்டில் அடைச்சி
கூவச் சொல்லுகிற உலகம்
மயிலப் புடிச்சி கால ஒடச்சி
ஆடச் சொல்லுகிற உலகம்
குயிலப் புடிச்சி கூண்டில் அடைச்சி
கூவச் சொல்லுகிற உலகம்
மயிலப் புடிச்சி கால ஒடச்சி
ஆடச் சொல்லுகிற உலகம்
அது எப்படி பாடுமய்யா
அது எப்படி ஆடுமய்யா
ஓ..ஓ..ஓ..ஓ..

குயிலப் புடிச்சி கூண்டில் அடைச்சி
கூவச் சொல்லுகிற உலகம்
மயிலப் புடிச்சி கால ஒடச்சி
ஆடச் சொல்லுகிற உலகம்



ஆண் பிள்ள முடி போடும்
பொன் தாலி கயிறு
என்னான்னு தெரியாது எனக்கு
ஆத்தாள நான் கேட்டு 
அறிஞ்சேனே பிறகு
ஆனாலும் பயனென்ன அதுக்கு
வேறென்ன எல்லாமே
நான் செஞ்ச பாவம்
யார் மேல எனக்கென்ன கோவம்
ஓலக் குடிசையில 
இந்த ஏழை பொறந்ததுக்கு
வந்தது தண்டனையா
இது தெய்வத்தின் நிந்தனையா
இத யாரோடு சொல்ல

குயிலப் புடிச்சி கூண்டில் அடைச்சி
கூவச் சொல்லுகிற உலகம்
மயிலப் புடிச்சி கால ஒடச்சி
ஆடச் சொல்லுகிற உலகம்
அது எப்படி பாடுமய்யா
அது எப்படி ஆடுமய்யா
ஓ..ஓ..ஓ..ஓ..

குயிலப் புடிச்சி கூண்டில் அடைச்சி
கூவச் சொல்லுகிற உலகம்
மயிலப் புடிச்சி கால ஒடச்சி
ஆடச் சொல்லுகிற உலகம்



எல்லார்க்கும் தல மேல
எழுத்தொன்னு உண்டு
என்னான்னு யார் சொல்லக்கூடும்
கண்ணீர குடம் கொண்டு
வடிச்சாலும் கூட
எந்நாளும் அழியாம வாழும்
யாரார்க்கு எதுவென்று
விதி போடும் பாதை
போனாலும் வந்தாலும்
அது தான்
ஏழை என் வாசலுக்கு
வந்தது பூங்குருவி
கோழை என்று இருந்தேன்
போனது கை நழுவி
இத யாரோடு சொல்ல

குயிலப் புடிச்சி கூண்டில் அடைச்சி
கூவச் சொல்லுகிற உலகம்
மயிலப் புடிச்சி கால ஒடச்சி
ஆடச் சொல்லுகிற உலகம்
அது எப்படி பாடுமய்யா
அது எப்படி ஆடுமய்யா
ஓ..ஓ..ஓ..ஓ..

குயிலப் புடிச்சி கூண்டில் அடைச்சி
கூவச் சொல்லுகிற உலகம்
மயிலப் புடிச்சி கால ஒடச்சி
ஆடச் சொல்லுகிற உலகம்