கேட்க கேட்க ஆசை ஆச்சு
ஆத்தங்கர ஈரக்காத்து
மேல பட்டு மோகம் ஆச்சு
போடும் நிலா சோறு
என் பொன்னு மணி தேரு
கூட வந்து சேரு
நான் சொட்டுங்கனிச் சாறு
ஏ... ராத்திரியில் பாடும் பாட்டு
கேட்க கேட்க ஆசை ஆச்சு
ஆத்தங்கர ஈரக்காத்து
மேல பட்டு மோகம் ஆச்சு
கள்ளழகர் வைகை ஆத்தில்
கால வைக்கும் நல்ல நாளில்
எட்டு பட்டி ஊரு சனம்
கட்டுச் சோறு கட்டி வரும்
சொக்கனுக்கு மீனாள் போலே
பக்கத் துணை வாச்ச தாலே
சின்னஞ்சிறு சோடியெல்லாம்
சித்திரையில் இங்கு வரும்
உன் மேல தான் ஆச வச்சேன்
வேறெதுக்கு மீச வச்சேன்
என் புருஷன் நீயாகத்தான்
போன சென்மம் பூச வச்சேன்
உன்னோடு தான் நான் கூட
என்னோடு தான் நீ கூட
போடு முந்தானை
ஆத்தங்கர ஈரக்காத்து
மேல பட்டு மோகம் ஆச்சு
ராத்திரியில் பாடும் பாட்டு
கேட்க கேட்க ஆசை ஆச்சு
கூட வந்து சேரு
நான் சொட்டுங்கனிச் சாறு
போடும் நிலா சோறு
என் பொன்னு மணி தேரு
எல்லோருக்கும் எழுதி வச்சான்
எங்களத்தான் கட்டி வச்சான்
பொஞ்சாதியோ பூந்தோரணம்
நானும் ரொம்ப சாதாரணம்
வெண்ணிலவ மேகம் போல
என்ன அவ மூடி வப்பா
மத்தவங்க கண்ணு பட்டா
தத்தளிப்பா தான் தவிப்பா
ஊருக்கவ ராணி போல
எனக்கு அவ அம்மன் போல
சொல்லப்போனா என்னப்போல
பாக்கியவான் யாருமில்ல
தாரங்கூட தாயப்போல
ஈடு சொல்ல யாருமில்ல
எல்லாம் என் யோகம்
ராத்திரியில் பாடும் பாட்டு
கேட்க கேட்க ஆசை ஆச்சு
ஆத்தங்கர ஈரக்காத்து
மேல பட்டு மோகம் ஆச்சு
போடும் நிலா சோறு
என் பொன்னு மணி தேரு
கூட வந்து சேரு
நான் சொட்டுங்கனிச் சாறு
ராத்திரியில் பாடும் பாட்டு
கேட்க கேட்க ஆசை ஆச்சு
ஆத்தங்கர ஈரக்காத்து
மேல பட்டு மோகம் ஆச்சு
No comments:
Post a Comment