உயிரே வா உறவே வா
அழிவதில்லை காதல்
அதுவே என் பாடல்
அன்பே வந்துவிடு வா
எந்தன் மூச்சே நீ தான் என்பேன்
எந்தன் வாழ்வே காதல் என்பேன்
உண்மை காதல் தோற்குமா
உந்தன் மனம் என்னை ஏற்குமா
உயிரே வா உறவே வா
சிலருக்கு தேவை தேகம் தான்
அவரது உணர்வோ காமம் தான்
சிலருக்கு தேவை இதயம் தான்
அவரது காதல் புனிதம் தான்
சிலருக்கு தேவை இதயம் தான்
அவரது காதல் புனிதம் தான்
போனால் இதயம் திரும்பாது
வேறொரு இதயம் பொருந்தாது
ஒரு முறை தான் நினைத்துவிட்டால்
மறப்பது என்பது முடியாது
உயிரே வா உறவே வா
சிலர் வாசனைக்கு ஆயிரம் பூக்கள்
சிலர் வாசலுக்கு ஆயிரம் கதவுகள்
சிலர் வாழும் வரை ஆயிரம் உறவுகள்
நான் சாகும் வரை ஒருத்தியின் நினைவுகள்
சிலர் வாழும் வரை ஆயிரம் உறவுகள்
நான் சாகும் வரை ஒருத்தியின் நினைவுகள்
கடல் மேல் முத்து மிதப்பதில்லை
உண்மை காதல் சுலபமாய் கிடைப்பதில்லை
பெண் மனதை ஆழம் என்பேன்
காதல் முத்தெடுக்க மூழ்கும் ஆண்கள் என்பேன்
உயிரே வா உறவே வா
அழிவதில்லை காதல்
அதுவே என் பாடல்
அன்பே வந்துவிடு வா
எந்தன் மூச்சே நீ தான் என்பேன்
எந்தன் வாழ்வே காதல் என்பேன்
உண்மை காதல் தோற்குமா
உந்தன் மனம் என்னை ஏற்குமா
உயிரே வா உறவே வா
No comments:
Post a Comment