உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே - Unnai kaanaathu naan indru naanillaye lyrics

அதிநவநீதா அபிநய ராஜா
கோகுல பாலா கோடி பிரகாசா
விரக நரக ஶ்ரீரக்சக மாலா
எத்தனை முறை நான் ஏங்கிச் சாவேன்
இத்தவணை எனை ஆட்கொள்வாயா

சூடிய வாடலை சூடியவா
களவாடிய சிந்தை திரும்பத் தா
பூதகியாக பணித்திடுவாயா
பாவை விரகம் பருகிடுவாயா
ஆயர் தம் மாயா நீ வா
மாயா மாயா
ஆயர் தம் மாயா நீ வா
மாயா மாயா
ஆயர் தம் மாயா நீ வா
மாயா மாயா வா..

உன்னைக் காணாது நான் இன்று
நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
உன்னைக் காணாது நான் இன்று
நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
மாயத் திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
மாயத் திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
கிருஷ்ணா.... 

உன்னைக் காணாது நான் இன்று
நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
நிதம் காண்கின்ற வான் கூட நிஜம் அல்ல
இதம் சேர்க்கும் கனா கூட சுகம் அல்ல
நீ இல்லாமல் நான் இல்லையே

உன்னைக் காணாமல்
உன்னைக் காணாமல்
உன்னைக் காணாமல்
உன்னைக் காணாமல்

உன்னைக் காணாமல் 
பெண் நெஞ்சு தடுமாறுதே
விதை இல்லாமல் வேர் இல்லையே
நளின மோக சாமன ரங்கா
தீம் தீம்கிட தின்னா
நடன பாவ சுதிலய கங்கா
தீம் தீம்கிட தின்னா
சரிவர தூங்காது வாடும்
மனம் தினம் உனக்காக ஏங்கும்
ராதா தான் உனக்கென ராதா தான்
உனக்கொரு ராதா தான்



அவ்வாறு நோக்கினால் எவ்வாறு நாணுவேன்
கண்ணாடி முன் நின்று பார்த்துக் கொண்டேன்
ஒன்றாகச் செய்திட ஒரு நூறு நாடகம்
ஒத்திகைகள் செய்து எதிர் பார்த்திருந்தேன்
எதிர்பாராமலே அவன்
எதிர்பாராமலே அவன்
ஓ... பின்னிருந்து வந்து எனை
பம்பரமாய் சுழற்றி விட்டு
உலகுண்ட பெருவாயன் எந்தன்
வாயோடு வாய் பதித்தான்
இங்கு பூலோகம் என்றொரு 
பொருள் உள்ளதை
இந்த பூங்கோதை மறந்தாளடி



உடலணிந்த ஆடை போல்
எனை அணிந்து கொள்வாயா இனி நீ
இனி நீ கண்ணா..
தூங்காத என் கண்ணின்
துயிலுரித்த கண்ணன் தான் இனி நீ
இனி நீ
இது நேராமலே நான்
உனை பாராமலே நான்
இந்த முழு ஜென்மம் போயிருந்தால்
என்று அதை எண்ணி வீண் ஏக்கம்
ஏங்காமலே உன்னை மூச்சாக்கி வாழ்வேனடா

மாயத் திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
மாயத் திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா

ரோஜா ரோஜா - Roja roja song lyrics

ரோஜா... ரோஜா....
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

கண்ட பின்னே உன்னிடத்தில்
என்னை விட்டு வீடு வந்தேன்

உனை தென்றல் தீண்டவும் விடமாட்டேன்
அந்த திங்கள் தீண்டவும் விடமாட்டேன்
உனை வேறு கைகளில் தரமாட்டேன்
நான் தரமாட்டேன் நான் தரமாட்டேன் 
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா



நிலத்தினில் உன் நிழல் விழ ஏங்குவேன்
நிழல் விழுந்த மணலையும் மடியினில் தாங்குவேன்
உடையென எடுத்து எனை உடுத்து
நூல் ஆடை கொடி மலர் இடையினை 
உறுத்தும் ரோஜா

உன் பேர் மெல்ல நான் சொன்னதும்
என் வீட்டு ரோஜாக்கள் பூக்கின்றன
ஓர் நாள் உனைக் காணா விடில்
எங்கே உன் அன்பென்று கேட்கின்றன
நீ வந்தால் மறு கணம் விடியும் என் வானமே

மழையில் நீ நனைகையில் எனக்கு காய்ச்சல் வரும்
வெயிலில் நீ நடக்கையில் எனக்கு வேர்வை வரும்
உடல்கள் தான் ரெண்டு உணர்வுகள் ஒன்று
ரோஜா ரோஜா ரோஜா

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா...
கண்ட பின்னே உன்னிடத்தில்
என்னை விட்டு வீடு வந்தேன்



இளையவளின் இடை ஒரு நூலகம்
படித்திடவா பனி விழும் இரவுகள் ஆயிரம்
இடைவெளி எதற்கு சொல் நமக்கு
உன் நாணம் ஒரு முறை விடுமுறை
எடுத்தால் என்ன

என்னை தீண்டக் கூடாதென
வானோடு சொல்லாது வங்கக்கடல்
என்னை ஏந்தக் கூடாதென
கையோடு சொல்லாது புல்லாங்குழல்

நீ தொட்டால் நிலவினில் கறைகளும் நீங்குமே
விழிகளில் வழிந்திடும் அழகு நீர் வீழ்ச்சியே
எனக்கு நீ உனைத் தர எதற்கு ஆராய்ச்சியே
உனை விட வேறு நினைவுகள் ஏது
ரோஜா ரோஜா ரோஜா

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா 
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா 
கண்ட பின்னே உன்னிடத்தில்
என்னை விட்டு வீடு வந்தேன்

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா 
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா 
ரோஜா ரோஜா 

கூண்டுக்குள்ள என்ன வச்சு கூடி நின்ன - Koondukkulla onna vachu koodi ninna lyrics

கூண்டுக்குள்ள என்ன வச்சு
கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே

கூண்டுக்குள்ள என்ன வச்சு
கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே
அடி மானே மானே ஒன்னத் தானே
எண்ணி நானும் நாளும் தவித்தேனே
அடி மானே மானே ஒன்னத் தானே
எண்ணி நானும் நாளும் தவித்தேனே

கூண்டுக்குள்ள என்ன வச்சு
கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே



கண்ணு வலது கண்ணு
தானே துடிச்சதுன்னா ஏதோ நடக்குமின்னு பேச்சு
மானம் கொறையுமின்னு மாசு படியுமின்னு
வீணா கத முடிஞ்சு போச்சு
ஈசான மூலையில லேசான பல்லிச் சத்தம்
மாமன் பேர சொல்லிப் பேசுது
ஆறாத சோகந்தன்ன தீராம சேர்த்து வச்சு
ஊரும் சேர்ந்து என்ன ஏசுது
மாமா மாமா ஒன்னத் தானே
எண்ணி நானும் நாளும் தவித்தேனே

கூண்டுக்குள்ள என்ன வச்சு
கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே
கூண்டுக்குள்ள ஒன்ன வச்சு
கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள வந்ததிந்த கோலக்கிளியே



தென்னங்கிளையும் தென்றல் காத்தும் குயிலும்
அடி மானே உன்ன தினம் பாடும்
கஞ்சி மடிப்பும் கறை வேட்டி துணியும்
இந்த மாமன் கதைய தினம் பேசும்
பொள்ளாச்சி சந்தையில கொண்டாந்த சேலையில
சாயம் இன்னும் விட்டி போகல
பண்ணாரி கோயிலுக்கு முந்தான ஓரத்தில
நேர்ந்து முடிச்சு வச்ச கடன் தீரல
மானே மானே ஒன்னத் தானே
எண்ணி நானும் நாளும் தவித்தேனே

கூண்டுக்குள்ள ஒன்ன வச்சு
கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள வந்ததிந்த கோலக்கிளியே
கூண்டுக்குள்ள என்ன வச்சு
கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே
என் மாமா மாமா ஒன்னத் தானே
எண்ணி நானும் நாளும் தவித்தேனே
அடி மானே மானே ஒன்னத் தானே
எண்ணி நானும் நாளும் தவித்தேனே

கூண்டுக்குள்ள என்ன வச்சு
கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் - Nalam vaazha ennaalum en vaazhthukkal song lyrics

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன் மீது பண் பாடும்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன் மீது பண் பாடும்

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்



மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் பிழை ஆகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்
விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதில் என்ன பாவம் எதற்கிந்த சோகம் கிளியே

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்



கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது
கடல்களில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது
நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான் இறைவன்

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன் மீது பண் பாடும்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன் மீது பண் பாடும்

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

எல்லோரும் சொல்லும் பாட்டு சொல்வேனே - Ellorum sollum paatu solvene

எல்லோரும் சொல்லும் பாட்டு
சொல்வேனே உன்னைப் பார்த்து
மேடையே வையகம் ஒரு மேடையே
வேஷமே அங்கெல்லாம் வெறும் வேமே
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே

எல்லோரும் சொல்லும் பாட்டு
சொல்வேனே உன்னைப் பார்த்து



நாயகன் மேலிருந்து 
நூலினை ஆட்டுகின்றான்
நாமெல்லாம் பொம்மை என்று 
நாடகம் காட்டுகின்றான்
காவியம் போலொரு காதலை தீட்டுவான்
காரணம் ஏதுமின்றி காட்சியை மாற்றுவான்
ரயில் ஸ்னேகமாய் புயலடித்த மேகமாய்
கலைந்து வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே

எல்லோரும் சொல்லும் பாட்டு
சொல்வேனே உன்னைப் பார்த்து



கோவலன் காதை தன்னில்
மாதவி வந்ததுண்டு
மாதவி இல்லையென்றால்
கண்ணகி ஏது இன்று
மானிடன் ஜாதகம் இறைவனின் கையிலே
மயக்கங்கள் நேர்வதில்லை தெளிந்தவர் நெஞ்சிலே
எது கூடுமோ எது விலகி ஓடுமோ
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே

எல்லோரும் சொல்லும் பாட்டு
சொல்வேனே உன்னைப் பார்த்து
மேடையே வையகம் ஒரு மேடையே
வேஷமே அங்கெல்லாம் வெறும் வேமே
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் - Ennulle ennulle pala minnal lyrics

என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம்

என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம்

நான் மெய் மறந்து மாற
ஓர் வார்த்தை இல்லை கூற
இது ஓர் மோகம்

என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம்



கண்ணிரண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும்
ஆனாலும் அனல் பாயும்
நாடி எங்கும் ஏனோ நாத வெள்ளம் ஓடும்
ஆனாலும் என்ன தாகம்
மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன
தூபம் போடும் நேரம் தூண்டிலிட்டதென்ன
என்னையே கேட்டு ஏங்கினேன் நான்

என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம்



கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட
ஊன் கலந்து ஊனும் ஒன்று பட தியானம்
ஆழ்நிலையில் அரங்கேற
காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு
இக்கணத்தைப் போலே இன்பமேது சொல்லு
காண்பவை யாவும் சொர்க்கமே தான்

என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம்

நன்றி சொல்லவே எனக்கு என் மன்னவா - Nandri sollave unaku en mannavaa lyrics

நன்றி சொல்லவே உனக்கு  என் மன்னவா
வார்த்தை இல்லையே
தெய்வம் என்பதே எனக்கு நீ அல்லவா
வேறு இல்லையே

நாற்புறமும் அலைகள் அடிக்க
நீ ஒரு தீவென தனித்திருக்க
பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாரும் இன்றி கன்னி இருந்தேன்
சொந்தம் இன்றி பந்தம் இன்றி நானும் இருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்

நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா
வார்த்தை இல்லையே
தெய்வம் என்பதே எனக்கு நீ அல்லவா
வேறு இல்லையே



ராசி இல்லை இவள் என பலர் தூற்றிய போது
ராப்பகலாய் எழும் புயல் உனை வாட்டிய போது
சுடும் மொழி நாளும் கேட்டு
இரு சிறு விழி நீரில் ஆட
ஓர் நதி வழி ஓடும் ஓடம்
என விதி வழி நானும் ஓட
போதும் போதும் வாழ்க்கை என்று
ஏழை மாது எண்ணும் போது நானும் அணைத்திட

பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாரும் இன்றி கன்னி இருந்தேன்
சொந்தம் இன்றி பந்தம் இன்றி நானும் இருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா
வார்த்தை இல்லையே
தெய்வம் என்பதே எனக்கு நீ அல்லவா
வேறு இல்லையே



வாழும் வரை நிழல் என உடன் நான் வருவேனே
ஏழ் பிறப்பும் உயிர் துணை உனை நான் பிரியேனே
திசை அறியாது நானே
இங்கு தினசரி வாடினேனே
இந்த பறவையின் வேடந்தாங்கல்
உந்தன் மனமெனும் வீடு தானே
நீண்ட காலம் நேர்ந்த சோகம்
நீங்கி போக நானும் தீண்ட யோகம் விழைந்திட

பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாரும் இன்றி கன்னி இருந்தேன்
சொந்தம் இன்றி பந்தம் இன்றி நானும் இருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா
வார்த்தை இல்லையே
தெய்வம் என்பதே எனக்கு நீ அல்லவா
வேறு இல்லையே

நாற்புறமும் அலைகள் அடிக்க
நீ ஒரு தீவென தனித்திருக்க
பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாரும் இன்றி கன்னி இருந்தேன்
சொந்தம் இன்றி பந்தம் இன்றி நானும் இருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா
வார்த்தை இல்லையே
தெய்வம் என்பதே எனக்கு நீ அல்லவா
வேறு இல்லையே

உன்னை தொட்ட தென்றல் இன்று என்னை தொட்டு - Unnai thotta thendral ondru ennai thottu lyrics

உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டு சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்து
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி
பேச வந்தேன் நூறு வார்த்தை
பேசிப் போனேன் வேறு வார்த்தை
உண்மை சொல்லவா

உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டு சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்து
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி



தலைவி உந்தன் கண் பார்க்கும் பொழுதே
தலைப்புச் செய்தி தந்தாயே
தலைப்புச் செய்தி புரியாமல் தவித்தேன்
தலைப்பை கையில் தந்தாயே
உறங்கும் போதும் உந்தன் பேரை
சொல்லிப் பார்க்கிறேன்
உன்னைக் கண்டு பேசும் போதும்
உச்சி வேர்க்கிறேன்
இந்த சுந்தர வார்த்தைகள் தந்தது யாரடி
உன்னைக் கேட்கிறேன்

உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டு சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்து
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி



உன்னை எண்ணி என் மேனி மெலிய
உருகி உருகி நூலானேன்
உன்னைக் கண்டு ஓர் வார்த்தை மொழிய
உடைந்து உடைந்து தூளானேன்
பார்க்க வந்த சேதி மட்டும்
சொன்ன முல்லையே 
பருவம் வந்த தேதி மட்டும்
சொல்லவில்லையே
நீ என் பார்வையில் காதலன் பழக்கத்தில் கோவலன்
சொல்லவில்லையே

உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டு சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்து
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி

பேச வந்தேன் நூறு வார்த்தை
பேசிப் போனேன் வேறு வார்த்தை
உண்மை சொல்லவா

உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டு சொன்னதொரு ம்ஹூம்..
உள்ளுக்குள்ளே ஆசை வைத்து
தள்ளித் தள்ளிப் போவதென்ன ம்ஹூம்..

மேற்குச் சீமையிலே வேகாட்டுக் கோவிலிலே - Merku seemayile mekattu kovilile lyrics

மேற்குச் சீமையிலே மேகாட்டுக் கோவிலிலே
கதை ஒன்னு நடக்குதம்மா
காட்டுப் புலி ஒன்னு காயம் பட்டுப் போச்சே
காரணம் யார் சொல்லம்மா

சாட்டை உடுக்கையில் சத்தம் முழங்கிட
தாயே நீ பொங்கிடம்மா
சாட்டை உடுக்கையில் சத்தம் முழங்கிட
தாயே நீ பொங்கிடம்மா
சூலக்காளியே ஆத்தா தாயே
சூலக்காளியே ஆத்தா தாயே

மேற்குச் சீமையிலே மேகாட்டுக் கோவிலிலே
கதை ஒன்னு நடக்குதம்மா
பம்ப சத்தம் கொட்டுச் சத்தம் கேட்கலயா சொல்லு தாயி
வெட்டருவா வேலுக்கம்பு சூலாயுதம் ஏந்தி வாடி



எட்டு தெச கட்டி ஆண்டு வந்தானே
எத்தனையோ கஷ்டம் தீர்த்து வச்சானே தாயே
அம்மா....
ஊரெல்லாம் உசுருன்னு நேசம் வச்சானே
சனமெல்லாம் பெருசுன்னு ஆசப் பட்டானே தாயே
அம்மா....
மகமாயி தாயே மனம் மாறணும்
மகராசி கோட்டையில் குடியேறணும்
கருமாரி தாயே நீ கண் பார்க்கணும்
காயங்கள் மாறித் தான் மண் ஆளணும்
குங்குமக்காரியே பொறுப்பேற்கும் தேவியே
உன் பிள்ளை வாடுதம்மா
முத்து மாரியே ஆத்தா தாயே



காதல் வசப்பட்டு பார்த்தது தப்பா
கழுத்தில் மாலை விழ நெனச்சது தப்பா தாயே
அம்மா....
கல்யாணம் தான் மாறி போனது தப்பா
காத்திருந்து நானும் வாழ்ந்தது தப்பா தாயே
அம்மா....
சூறாவளி காத்து சுத்தி வந்து
சொந்தம் எல்லாம் மாறி போனதம்மா
காத்திருந்த சொந்தம் வேணுமுன்னு
நேர்த்திக் கடன் செய்ய வந்தேனம்மா
பூவுக்கும் பொட்டுக்கும் ஆசப்பட்டு வந்தேன்
வேறென்ன கேட்டேனம்மா
முத்து மாரியே ஆத்தா தாயே

மேற்குச் சீமையிலே மேகாட்டுக் கோயிலிலே
கதை ஒன்னு நடக்குதம்மா
மேற்குச் சீமையிலே மேகாட்டுக் கோயிலிலே
கதை ஒன்னு நடக்குதம்மா

காட்டுப் புலி ஒன்னு காயம் பட்டுப் போச்சே
காரணம் யார் சொல்லம்மா
சாட்டை உடுக்கையில் சத்தம் முழங்கிட
தாயே நீ பொங்கிடம்மா
சூலக்காளியே ஆத்தா தாயே
சூலக்காளியே ஆத்தா தாயே

உன் நெஞ்சத் தொட்டு சொல்லு - Un nenja thottu sollu lyrics

உன் நெஞ்சத் தொட்டு சொல்லு
என் ராசா
என் மேல் ஆசை இல்லயா
உன் நெஞ்சத் தொட்டு சொல்லு
என் ராசா
என் மேல் ஆசை இல்லயா
என் மேல் ஆசை இல்லயா

உன் நெஞ்சத் தொட்டு சொல்லு
என் ராசா
என் மேல் ஆசை இல்லயா
என் மேல் ஆசை இல்லயா
வானந்தான் சாட்சி இருக்கு
பூமி தான் சாட்சி இருக்கு

உன் நெஞ்சத் தொட்டு சொல்லு
என் ராசா
என் மேல் ஆசை இல்லயா
என் மேல் ஆசை இல்லயா



தண்ணிக்குள்ளே முக்குளிச்சு
முத்து ஒன்னு எடுத்ததென்ன
தனிச்சிருந்து சூடையிலே
தவறி அது விழுந்ததென்ன
கோயிலிலே சாமி முன்னே
வேடிக்கை தான் நடக்குமம்மா
சாமியும் தான் எனக்கு இங்கே
வேடிக்கை தான் நடத்துதம்மா
நல்ல காதலுக்கு இது வாடிக்கையா

உன் நெஞ்சத் தொட்டு சொல்லு
என் ராசா
என் மேல் ஆசை இல்லயா
என் மேல் ஆசை இல்லயா



தாகத்திலே சிப்பி ஒன்னு
தண்ணிக்குள்ளே மிதக்குதம்மா
மேகத்திலே நீர்க்குடிக்க
நீருக்குள்ளே தவிக்குதம்மா
ஆயிரம் பேர் ஊருக்குள்ளே
ஆம்பிளன்னு இங்கில்லயா
ஆயிரமும் உனக்கிணையா
எனக்கு அது வழித்துணையா
இந்த கேள்விக்கு நீ ஒரு பதிலச் சொல்லு

உன் நெஞ்சத் தொட்டு சொல்லு
என் ராசா
என் மேல் ஆசை இல்லயா
என் மேல் ஆசை இல்லயா
வானந்தான் சாட்சி இருக்கு
பூமி தான் சாட்சி இருக்கு

உன் நெஞ்சத் தொட்டு சொல்லு
என் ராசா
என் மேல் ஆசை இல்லயா
என் மேல் ஆசை இல்லயா