அம்மாவுக்கு வீடெங்கே அக்கம் பக்கமா
எங்க கிட்டே மாட்டிக்கிட்டே எக்கச் சக்கமா
சின்ன கண்ணம்மா சின்ன கண்ணம்மா
ரோந்து சுத்தி வாரியே ரோட்டுப்பக்கமா
கூட்டம் போட்டு கேக்குறோம் ஓட்டு என்னம்மா
கொள்ளை அழகே நீ அள்ளிக் கொடம்மா
உன் வெள்ளைச் சிரிப்பு அது வெள்ளிக்காசம்மா
தங்க நகைய நாங்க கொள்ள அடிச்சோம்
எங்க மனச நீீ கொள்ளை அடிச்ச
கன்னம் இரண்டில் கன்னம் வைக்க
சம்மதம் சொல்லம்மா
நீ சம்மதம் சொல்லம்மா
உன் சங்கதி என்னம்மா
ஆத்தாடி நான் அன்னக்கிளி தான்
ஆத்தாடி நான் அன்னக்கிளி தான்
பாத்தாலே நான் பச்சக்கிளி தான்
அன்னை அவள் பிறந்தது கங்கைக்கரையில்
எந்தன் தந்தை வளர்ந்தது காவிரியில்
என் வீடு தானே பாரதம்
எல்லோரும் இங்கே ஓர் குலம்
தன்மானம் தானே சீதனம்
பெண் மானம் இன்று கேவலம்
காந்தி மகன் தேசம் இது
புத்தன் வந்த பூமி இது
சின்ன கண்ணம்மா சின்ன கண்ணம்மா
தப்பி செல்ல பாக்குறே ரொம்ப தப்பம்மா
கற்பு கொண்ட பெண் கிளி கையில் சிக்குமா
வெக்கக் கேடம்மா வெக்கக் கேடம்மா
வீதி வந்த பெண்ணுக்கு வேலி என்னம்மா
கண்ணிமைச்சா மின்னல் என்ன கையில் சிக்குமா
சுட்டு விரல நீ தொட்டு செல்லம்மா
எட்டு மணிக்கு பசி விட்டு போகுமா
புத்தன் காந்திக்கு நாம மாலை போடலாம்
பொன்னே ஒன்னத்தான் வா ஏலம் போடலாம்
கோழிக்குஞ்சே ஒன்ன நாங்க கொள்ளை அடிப்போமே
பல பங்கு பிரிப்போமே
ஒரு பந்தி விரிப்போமே
தாய் நாடா என் தாய் நாடா
தாய் நாடா என் தாய் நாடா
பெண்ணைப் பார்த்தால் இது பேய் வீடா
பெண்ணுடம்பில் இருப்பது சதை மட்டுமா
உடம்புக்குள் மனசுண்டு ஒப்புக்கொள்ளுமா
வேதாந்தம் இங்கே வேண்டுமா
வெந்நீரில் மீன்கள் வாழுமா
மண்ணோடு வானம் மாறலாம்
பெண்ணென்ற தன்மை மாறுமா
இன்று மட்டும் வாழ்ந்து விடு
இல்லை இல்லை ஆளை விடு
சின்ன கண்ணம்மா நீ எந்த ஊரம்மா
வேளை கெட்ட வேளையில் வேலை என்னம்மா
போலீஸ் பொன்னைய்யா நான் உள்ளூர் தானய்யா
பொம்பளைக்கு ஊருக்குள் காவல் இல்லையா
கன்னி மயிலே துணை யாரும் வர்லயா.. ஆ...
காவல்துறையில் ஓர் ஆணும் இல்லையா
ஐயா யாருன்னு நீ கேட்டதில்லையா
உண்மைய சொல்லய்யா வீண் ஜம்பம் ஏனய்யா
காக்கி சட்ட போட்டவருக்கு சக்தியும் இல்லையா
உன் லத்தியும் எங்கய்யா
அட சக்தியும் இல்லையா
சுதந்திரம் தான் இருக்கின்றதா
நடுத்தெருவில் அது கெடக்கின்றதா
பெண்கள் நிலை இன்று என்ன கடைச்சரக்கா
கண்ணகியும் வந்த மண்ணில் இந்த கிறுக்கா
பெண் பேரில் இங்கே ஆலயம்
பெண் பாடு ஏனோ கேவலம்
என் உள்ளம் என்ன தாங்குமா
என் துப்பாக்கி என்ன தூங்குமா
காக்கி சட்டை மன்னவரே
கை கொடுங்கள் காவலரே
போனாளே நம் பொட்டக்குருவி
பறந்தாளே நம் சிட்டுக்குருவி
கையில் வந்த கனி அது விழுந்திருச்சே
பையில் வந்த சில்லைரையும் தொலஞ்சிருச்சே
யாரோடு யார் தான் என்பது
உண்டாகும்போதே உள்ளது
வானோடு நீலம் சேர்ந்தது
வாழ்வோடு இன்பம் சேர்ந்தது
கங்கை நதி வந்ததென்ன
காவிரியில் சேர்ந்ததென்ன
No comments:
Post a Comment