வாழ்க்கை உண்டானதே
கலைமகளே நீ வாழ்கவே
அவனே இணைத்தான் உறவை வளர்த்தான்
இரண்டும் ஒன்றானதே
திருமகனே நீ வாழ்கவே
ஆயிரம் காலமே வாழவே திருமணம்
ஆயிரம் காலமே வாழவே திருமணம்
கடவுள் நினைத்தான் மணநாள் கொடுத்தான்
வாழ்க்கை உண்டானதே
கலைமகளே நீ வாழ்கவே
அவனே இணைத்தான் உறவை வளர்த்தான்
இரண்டும் ஒன்றானதே
திருமகனே நீ வாழ்கவே
எழில் வானம் எங்கும்
பல வண்ண மேகம்
அழகான வீணை
ஆனந்த ராகம்
எழில் வானம் எங்கும்
பல வண்ண மேகம்
அழகான வீணை
ஆனந்த ராகம்
எதிர்கால காற்று
எது செய்யும் என்று
அறியாத உள்ளம்
அது தெய்வ வெள்ளம்
மாலை நீ கட்டிவைத்து கொண்டுவந்த வேளை
நல் பொட்டு வைத்து இங்கு வந்த காலை
நீ எண்ணியதும் இல்லையம்மா நாளை
கடவுள் நினைத்தான் மணநாள் கொடுத்தான்
வாழ்க்கை உண்டானதே
கலைமகளே நீ வாழ்கவே
அவனே இணைத்தான் உறவை வளர்த்தான்
இரண்டும் ஒன்றானதே
திருமகனே நீ வாழ்கவே
மணமேடை தந்த
மலர் போன்ற பெண்மை
மணவாளன் கையில்
விளையாட்டு பொம்மை
மணமேடை தந்த
மலர் போன்ற பெண்மை
மணவாளன் கையில்
விளையாட்டு பொம்மை
விளையாட்டு காண
வருகின்ற தெய்வம்
விளையாடுமானால்
எது வாழ்வில் உண்மை
காலம் நீ கைகள் தந்து இங்கு வந்த நேரம்
உன் காதில் அன்று சொல்லி வைத்த வேதம்
உன் கட்டழகும் மங்கலமும் வாழ்க
கடவுள் நினைத்தான் மணநாள் கொடுத்தான்
வாழ்க்கை உண்டானதே
கலைமகளே நீ வாழ்கவே
அவனே இணைத்தான் உறவை வளர்த்தான்
இரண்டும் ஒன்றானதே
திருமகனே நீ வாழ்கவே
ஆயிரம் காலமே வாழவே திருமணம்
ஆயிரம் காலமே வாழவே திருமணம்
No comments:
Post a Comment