கானக்கருங்குயிலே கச்சேரிக்கு - Kaanakarunguyile Kacheriku Vaa Vaa Lyrics

கானக்கருங்குயிலே
கச்சேரிக்கு வா வா
கச்சேரி வைக்கேயிலே
கண் மலரும் பூவா

முத்து போலே மெட்டு பாட
முத்து மாலை கட்டி போட
வந்தேனே

கானக்கருங்குயிலே
கச்சேரிக்கு வா வா
கச்சேரி வைக்கேயிலே
கண் மலரும் பூவா


தேனும் பாலும்
வீம்பா போச்சு 
ஒன்ன பாத்த நாளு
தூர நின்னே
நீதான் என்ன
தூண்டி போட்ட ஆளு

மாடி வீட்டு மானா
கூர வீட்டில் வாழும்
வீடு வாசல் யாவும்
நீதான் எந்த நாளும்

மானம் காக்கும் சேல போலே
மாமன் வந்து மாலை போடும் நாளே
வெட்கம் ஏறும் மேலே

கானக்கருங்குயிலே
கச்சேரிக்கு வா வா
கச்சேரி வைக்கேயிலே
கண் மலரும் பூவா

முத்து போலே மெட்டு பாட
முத்து மாலை கட்டி போட
வந்தேனே

கானக்கருங்குயிலே
கச்சேரிக்கு வா வா
கச்சேரி வைக்கேயிலே
கண் மலரும் பூவா


சோளக்கதிரு ஒன்னு
சேல கட்டி ஆடும்
நீலக்குருவி வந்து
மாலை கட்டி போடும்

மாமன் மனசுக்குள்ளே
மொட்டு விட்டேன் நான் தான்
வாலே வயசுப்புள்ளே
வார்த்தை எல்லாம் தேன் தான்

பாசம் பந்தம் எங்கே போகும்
போனால் தீயாய் தேகம் வேகும்
தீராதம்மா மோகும்

கானக்கருங்குயிலே
கச்சேரிக்கு வா வா
கச்சேரி வைக்கேயிலே
கண் மலரும் பூவா

முத்து போலே மெட்டு பாட
முத்து மாலை கட்டி போட
வந்தேனே

கானக்கருங்குயிலே
கச்சேரிக்கு வா வா
கச்சேரி வைக்கேயிலே
கண் மலரும் பூவா

மீனம்மா அதிகாலையிலும் அந்தி மாலையிலும் - Meenamma Athikaalaiyilum Anthi Maalaiyilum Lyrics

மீனம்மா...
அதிகாலையிலும்
அந்தி மாலையிலும்
உந்தன் ஞாபகமே

அம்மம்மா
முதல் பார்வையிலே
சொன்ன வார்த்தையெல்லாம்
ஒரு காவியமே

சின்ன சின்ன ஊடல்களும்
சின்ன சின்ன மோதல்களும்
மின்னல் போல
வந்து வந்து போகும்

ஊடல் வந்து ஊடல் வந்து
முட்டிக் கொண்ட போதும்
இங்கு காதல் மட்டும்
காயம் இன்றி வாழும்

இது மாதங்கள் நாட்கள் செல்ல.. ஆ...
நிறம் மாறிடும் பூக்கள் அல்ல.. ஆ...

மீனம்மா...
அதிகாலையிலும்
அந்தி மாலையிலும்
உந்தன் ஞாபகமே


ஒரு சின்னப் பூத்திரியில்
ஒளி சிந்தும் ராத்திரியில்
இந்த மெத்தை மேல்
இளம் தத்தை போல்
புது வித்தை காட்டிடவா

ஒரு ஜன்னல் அங்கிருக்கு
தென்றல் எட்டிப் பார்ப்பதற்கும்
அதை மூடாமல்
தாழ் போடாமல்
எனை தொட்டுத் தீண்டுவதா

மாமன் காரன் தானே
மாலை போட்ட தாலே
மோகம் தீரவே
மெதுவாய் மெதுவாய்
தொடலாம்

மீனம்மா
மழை உனை நனைத்தால்
இங்கு எனக்கல்லவா
குளிர் காய்ச்சல் வரும்

அம்மம்மா
வெயில் உன்னை அணைத்தால்
இங்கு எனக்கல்லவா
உடல் வேர்த்து விடும்


அன்று காதல் பண்ணியது
உந்தன் கன்னம் கிள்ளியது
அடி இப்போதும்
நிறம் மாறாமல்
இந்த நெஞ்சில் நிற்கிறது

அன்று பட்டுச் சேலைகளும்
நகை நட்டும் பாத்திரமும்
உனை கேட்டேனே
சண்டை போட்டேனே
அது கண்ணில் நிற்கிறது

ஜாதி மல்லி பூவே
தங்க வெண்ணிலாவே
ஆசை தீரவே 
பேசலாம் முதல் நாள் இரவு

து.. து.. து...

மீனம்மா
உன்னை நேசிக்கவும்
அன்பை வாசிக்கவும்
தென்றல் காத்திருக்கு

அம்மம்மா
உன்னைக் காதலித்து
புத்தி பேதலித்து
புஷ்பம் பூத்திருக்கு


உன்னைத் தொட்ட
தென்றல் வந்து
என்னைத் தொட்டு
என்னென்னவோ
சங்கதிகள் சொல்லிவிட்டு போக

உன் மனமும்
என் மனமும்
ஒன்றையொன்று ஏற்றுக்கொண்டு
ஒப்பந்தத்தில் கையெழுத்து போட

பின்பு மோகனப் பாட்டெடுத்தோம்..ஆ...
முழு மூச்சுடன் காதலித்தோம்.. ஆ...

மீனம்மா...
அதிகாலையிலும்
அந்தி மாலையிலும்
உந்தன் ஞாபகமே

இளமை எனும் பூங்காற்று - Ilamai Enum Poongaatru Lyrics

இளமை எனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்

இளமை எனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்

ஒரே வீணை ஒரே ராகம்


தன்னை மறந்து 
மண்ணில் விழுந்து
இளமை மலரின் மீது
கண்ணை இழந்த வண்டு
தேக சுகத்தில் கவனம்
காட்டு வழியில் பயணம்
கங்கை நதிக்கு மண்ணில் அணையா

இளமை எனும் பூங்காற்று

அங்கம் முழுதும்
பொங்கும் இளமை
இதம் பதமாய் தோன்ற
அள்ளி அணைத்த கைகள்
கேட்க நினைத்தால் மறந்தாள்
கேள்வி எழும் முன் விழுந்தாள்
எந்த உடலோ எந்த உறவோ

இளமை எனும் பூங்காற்று

மங்கை இனமும்
மன்னன் இனமும்
குலம் குணமும் என்ன
தேகம் துடித்தால் கண்ணேது
கூந்தல் கலைந்த கனியே
கொஞ்சி சுவைத்த கிளியே
இந்த நிலை தான்
என்ன விதியோ


இளமை எனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்

ஒரே வீணை ஒரே ராகம்
ஒரே வீணை ஒரே ராகம்

கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு - Kalyaana Ponnu Kannaana Kannu Lyrics

கல்யாணப் பொண்ணு
கண்ணான கண்ணு
கொண்டாடி வரும் வளையல்
கல்யாணப் பொண்ணு
கண்ணான கண்ணு
கொண்டாடி வரும் வளையல்
அம்மா பூவோடு வருமே
பொட்டோடு வருமே
சிங்காரத் தங்க வளையல்

வங்கி வளையல்
சங்கு வளையல்
முத்து முத்தான வளையலுங்க
வங்கி வளையல்
சங்கு வளையல்
முத்து முத்தான வளையலுங்க


அத்தானின் காதல்
முத்தாமல் இருந்தால்
பித்தாகச் செய்யும் வளையல்
சில சித்தாதை உடம்பு
வத்தாமல் இருந்தால்
ஒத்தாசை செய்யும் வளையல்

அத்தானின் காதல்
முத்தாமல் இருந்தால்
பித்தாகச் செய்யும் வளையல்
சில சித்தாதை உடம்பு
வத்தாமல் இருந்தால்
ஒத்தாசை செய்யும் வளையல்

அன்ன நடை பின்னி வர
சின்ன இடை மின்னி வர
முன்னாடி வரும் வளையல்
இது அத்தை மவ ரத்தினத்தின்
அச்சடித்த சித்திரத்தின்
கையோடு வரும் வளையல்
ஆ..ஆ...ஆ...ஆ....

கல்யாணப் பொண்ணு
கண்ணான கண்ணு
கொண்டாடி வரும் வளையல்
கல்யாணப் பொண்ணு
கண்ணான கண்ணு
கொண்டாடி வரும் வளையல்
அம்மா பூவோடு வருமே
பொட்டோடு வருமே
சிங்காரத் தங்க வளையல்

வங்கி வளையல்
சங்கு வளையல்
முத்து முத்தான வளையலுங்க


பெண்டாட்டி புருஷன்
ரெண்டாக இருந்தால்
மூணாக செய்யும் வளையல்
இது ஒட்டாத மனசில்
கிட்டாத சுகத்தை
கட்டாயம் தரும் வளையல்
மாமியார மாமனார
சாமியாரா மாத்திவிட
மந்திரிச்சு தந்த வளையல்
இளங்காளையர்கள் கெஞ்சி வர
கன்னியர்கள் கொஞ்சி வர
தூதாக வந்த வளையல்

கல்யாணப் பொண்ணு
கண்ணான கண்ணு
கொண்டாடி வரும் வளையல்
கல்யாணப் பொண்ணு
கண்ணான கண்ணு
கொண்டாடி வரும் வளையல்
அம்மா பூவோடு வருமே
பொட்டோடு வருமே
சிங்காரத் தங்க வளையல்

வங்கி வளையல்
சங்கு வளையல்
முத்து முத்தான வளையலுங்க


தள்ளாடும் கிழவிக்கு
இல்லாத அழகை
தானாக தரும் வளையல்
யாரும் பாக்காத முகத்தை
கேக்காத சுகத்தை
தேனாக தரும் வளையல்
கைகளிலே ஓசை வர
கண்களிலே ஆசை வர
பெண்ணோடு வரும் வளையல்
அவ முன்னழகை சொல்லிக் கொண்டு
பின்னழகை அள்ளிக் கொண்டு
பின்னோடு வரும் வளையல்

கல்யாணப் பொண்ணு
கண்ணான கண்ணு
கொண்டாடி வரும் வளையல்
கல்யாணப் பொண்ணு
கண்ணான கண்ணு
கொண்டாடி வரும் வளையல்
அம்மா பூவோடு வருமே
பொட்டோடு வருமே
சிங்காரத் தங்க வளையல்

வங்கி வளையல்
சங்கு வளையல்
முத்து முத்தான வளையலுங்க

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் - Ninaipathellaam Nadanthuvittaal Lyrics

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றும் இல்லை

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றும் இல்லை

முடிந்த கதை தொடர்வதில்லை
இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை
மனிதன் வீட்டினிலே

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றும் இல்லை


ஆயிரம் வாசல் இதயம்
அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார்
வருவதும் போவதும் தெரியாது
ஆயிரம் வாசல் இதயம்
அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார்
வருவதும் போவதும் தெரியாது
ஒருவர் மட்டும் குடியிருந்தால்
துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால்
என்றும் அமைதி இல்லை

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றும் இல்லை


எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்
இது தான் பாதை
இது தான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது
எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்
இது தான் பாதை
இது தான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறி வரும்
பயணம் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்து கொண்டால்
மயக்கம் தெளிந்துவிடும்

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றும் இல்லை

ஆத்தோரம் தோப்புக்குள்ள அத்தான - Aathoram Thoppukulla Athana Lyrics

ஆத்தோரம் தோப்புக்குள்ள
அத்தான சந்திக்கத்தான்
ஆச வச்சேன்

ஆளான சேதி சொல்லி
அடையாளம் காட்டத்தானே
ஆச வச்சேன்

கனகாம்பரம் எடுத்து
கையால நீ தொடுத்து
பின்னால வச்சிவிட
ஆச வச்சேன்

மரியாதை இல்லாம
மச்சான உன்னப் பேசி
மாரோட மல்லு கட்ட
ஆச வச்சேன்

அத்தனையும் பொய்யாச்சே ராசா
ஒத்தையில நிக்குதிந்த ரோசா


மாரளவு தண்ணியில
மஞ்சத்தேச்சு நான் குளிக்க
மறைஞ்சிறுந்து நீயும் பாக்க
ஆச வச்சேன்

பசுவப்போல மெல்ல வந்து
கொசுவத்தையும் நீ இழுத்து
குசும்புப் பண்ண வேணுமுன்னு
ஆச வச்சேன்

உன்னோடு சந்தையில
எல்லாரும் பாக்கையில
கண்டாங்கி வாங்கித் தர
ஆச வச்சேன்

குத்தாத முள்ளு குத்தி
குதிகாலு வலிக்குதுன்னு
மடிமேல காலப் போட
ஆச வச்சேன்

அத்தனையும் பொய்யாச்சே ராசா
ஒத்தையில நிக்குதிந்த ரோசா

ஆத்தோரம் தோப்புக்குள்ள
அத்தான சந்திக்கத்தான்
ஆச வச்சேன்

ஆளான சேதி சொல்லி
அடையாளம் காட்டத்தானே
ஆச வச்சேன்


மேகாட்டு மூலையிலே
மேகம் கருக்கையிலே
சுக்கு தண்ணி வச்சுத் தர
ஆச வச்சேன்

மச்சம் குளிருகிற
மார்கழி மாசத்துல
மச்சானத் தொட்டுத் தூங்க
ஆச வச்சேன்

மாமன் கட்டும் வேட்டியிலே
மஞ்சக்கற என்னதுன்னு
மந்தையில நின்னு சொல்ல
ஆச வச்சேன்

ரித்திகுளம் ஆசாரிக்கு
கொட்டியிலே பணம் குடுத்து
ரெட்டத் தொட்டில் செய்யச் சொல்ல
ஆச வச்சேன்

அத்தனையும் பொய்யாச்சே ராசா
ஒத்தையில நிக்குதிந்த ரோசா


அத்தானின் இடுப்புக்கு
அண்ணாக் கயிறு கட்ட
ஆச வச்சேன்

நறுக்கான தேகத்துக்கு
நல்லெண்ண தேச்சு விட
ஆச வச்சேன்

வெந்நீரு கொதிக்க வச்சு
மச்சான குளிக்க வச்சு
மாராப்பு நனையத் தானே
ஆச வச்சேன்

மாந்தோப்பில் கட்டிலிட்டு
மனம் போல தொட்டு தொட்டு
மாமன் கூட பேசிடத் தான்
ஆச வச்சேன்

அத்தனையும் பொய்யாச்சே ராசா
ஒத்தையில நிக்குதிந்த ரோசா

ஆத்தோரம் தோப்புக்குள்ள
அத்தான சந்திக்கத்தான்
ஆச வச்சேன்

ஆளான சேதி சொல்லி
அடையாளம் காட்டத்தானே
ஆச வச்சேன்

வா வா எந்தன் நிலவே - Vaa Vaa Nilave Vennilave Lyrics

வா வா எந்தன்
நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீதான்
நிலவே வெண்ணிலவே
பிரித்தாலும் பிரியாது
நம் காதல் அழியாது
வரும் தடைகளை உடைத்திடு
உறவுக்கு வழி கொடு

வா வா எந்தன்
நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீதான்
நிலவே வெண்ணிலவே


காணும் கனவெல்லாம்
என்றும் நீதானே
என் கனவெல்லாம் நினைவாக
வா வா கண்மணியே
வீசும் காற்றில்
தூசாய் ஆனேனே
உனை எங்கோ மனம் பேச
உள்ளம் நொந்தேனே
நாம் ஒன்று சேரும்
திருநாளும் உருவாகும்
ஜென்மங்கள் ஏழேழும்
நாம் வாழ்வதைத் தடுத்திட முடியாது

வா வா எந்தன்
நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீதான்
நிலவே வெண்ணிலவே


காதல் பிரிவென்றால்
உள்ளம் துடிக்கிறதே
அதை காதால் கேட்டாலே
உலகே வெறுக்கிறதே
தீயாய் உடலெங்கும்
என்னை சுடுகிறதே
உன்னை தேடும் கண்கள்
கண்ணீர் வடிக்கிறதே
உன்னோடு நானும்
நிழலாக வருவேனே
உடலோடு உயிராக
நாம் சேர்ந்தது யாருக்கும் தெரியாதே

வா வா எந்தன்
நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீதான்
நிலவே வெண்ணிலவே
பிரித்தாலும் பிரியாது
நம் காதல் அழியாது
வரும் தடைகளை உடைத்திடு
உறவுக்கு வழி கொடு

வா வா எந்தன்
நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீதான்
நிலவே வெண்ணிலவே

சின்னத் தங்கம் எந்தன் செல்லத் தங்கம் - Chinna Thangam Enthan Chella Lyrics

சின்னத் தங்கம்
எந்தன் செல்லத் தங்கம்
ஏன் கண்ணு கலங்குது
எதை எண்ணிக் கொண்டு
இந்த அல்லித் தண்டு
மனம் விம்மி வருந்துது

நீ துள்ளி வரும் 
மானினத்தின் தோழியடி
சிறு துன்பம் என்றால் 
எந்தன் நெஞ்சில் காயமடி

சின்னத் தங்கம்
எந்தன் செல்லத் தங்கம்
ஏன் கண்ணு கலங்குது
எதை எண்ணிக் கொண்டு
இந்த அல்லித் தண்டு
மனம் விம்மி வருந்துது


குமரி நீயும் குழந்தையடி
மாங்கொழுந்து தானே இதயமடி
பொறந்த பாசம் தவிக்குதடி
உன்ன பாக்க மனசு துடிக்குதடி
என்ன நடந்ததால்
உந்தன் முகம் சிவந்தது
இந்த நினைவிலே
சோகமெங்கும் நிறைந்தது
இந்த அண்ணன் இருக்க
உனது வாழ்வில் கலக்கம் ஏனடி

சின்னத் தங்கம்
எந்தன் செல்லத் தங்கம்
ஏன் கண்ணு கலங்குது
எதை எண்ணிக் கொண்டு
இந்த அல்லித் தண்டு
மனம் விம்மி வருந்துது


மனசுக்கேத்த மாப்பிள்ளய
ஒம்மனசு போல மணம் முடிப்பேன்
சீமந்தமும் நடத்தி வப்பேன்
ஒன் குழந்தைகள நான் சுமப்பேன்
பதினாறுகளும் 
பெற்று நீ வாழணும்
அத பாத்து நான்
தினம் தினம் மகிழணும்
நம்ம ஊரும் உறவும்
உனது வாழ்வை மகிழ்ந்து பாடணும்

சின்னத் தங்கம்
எந்தன் செல்லத் தங்கம்
ஏன் கண்ணு கலங்குது
எதை எண்ணிக் கொண்டு
இந்த அல்லித் தண்டு
மனம் விம்மி வருந்துது

நீ துள்ளி வரும் 
மானினத்தின் தோழியடி
சிறு துன்பம் என்றால் 
எந்தன் நெஞ்சில் காயமடி

சின்னத் தங்கம்
எந்தன் செல்லத் தங்கம்
ஏன் கண்ணு கலங்குது
எதை எண்ணிக் கொண்டு
இந்த அல்லித் தண்டு
மனம் விம்மி வருந்துது