கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு - Kalyaana Ponnu Kannaana Kannu Lyrics

கல்யாணப் பொண்ணு
கண்ணான கண்ணு
கொண்டாடி வரும் வளையல்
கல்யாணப் பொண்ணு
கண்ணான கண்ணு
கொண்டாடி வரும் வளையல்
அம்மா பூவோடு வருமே
பொட்டோடு வருமே
சிங்காரத் தங்க வளையல்

வங்கி வளையல்
சங்கு வளையல்
முத்து முத்தான வளையலுங்க
வங்கி வளையல்
சங்கு வளையல்
முத்து முத்தான வளையலுங்க


அத்தானின் காதல்
முத்தாமல் இருந்தால்
பித்தாகச் செய்யும் வளையல்
சில சித்தாதை உடம்பு
வத்தாமல் இருந்தால்
ஒத்தாசை செய்யும் வளையல்

அத்தானின் காதல்
முத்தாமல் இருந்தால்
பித்தாகச் செய்யும் வளையல்
சில சித்தாதை உடம்பு
வத்தாமல் இருந்தால்
ஒத்தாசை செய்யும் வளையல்

அன்ன நடை பின்னி வர
சின்ன இடை மின்னி வர
முன்னாடி வரும் வளையல்
இது அத்தை மவ ரத்தினத்தின்
அச்சடித்த சித்திரத்தின்
கையோடு வரும் வளையல்
ஆ..ஆ...ஆ...ஆ....

கல்யாணப் பொண்ணு
கண்ணான கண்ணு
கொண்டாடி வரும் வளையல்
கல்யாணப் பொண்ணு
கண்ணான கண்ணு
கொண்டாடி வரும் வளையல்
அம்மா பூவோடு வருமே
பொட்டோடு வருமே
சிங்காரத் தங்க வளையல்

வங்கி வளையல்
சங்கு வளையல்
முத்து முத்தான வளையலுங்க


பெண்டாட்டி புருஷன்
ரெண்டாக இருந்தால்
மூணாக செய்யும் வளையல்
இது ஒட்டாத மனசில்
கிட்டாத சுகத்தை
கட்டாயம் தரும் வளையல்
மாமியார மாமனார
சாமியாரா மாத்திவிட
மந்திரிச்சு தந்த வளையல்
இளங்காளையர்கள் கெஞ்சி வர
கன்னியர்கள் கொஞ்சி வர
தூதாக வந்த வளையல்

கல்யாணப் பொண்ணு
கண்ணான கண்ணு
கொண்டாடி வரும் வளையல்
கல்யாணப் பொண்ணு
கண்ணான கண்ணு
கொண்டாடி வரும் வளையல்
அம்மா பூவோடு வருமே
பொட்டோடு வருமே
சிங்காரத் தங்க வளையல்

வங்கி வளையல்
சங்கு வளையல்
முத்து முத்தான வளையலுங்க


தள்ளாடும் கிழவிக்கு
இல்லாத அழகை
தானாக தரும் வளையல்
யாரும் பாக்காத முகத்தை
கேக்காத சுகத்தை
தேனாக தரும் வளையல்
கைகளிலே ஓசை வர
கண்களிலே ஆசை வர
பெண்ணோடு வரும் வளையல்
அவ முன்னழகை சொல்லிக் கொண்டு
பின்னழகை அள்ளிக் கொண்டு
பின்னோடு வரும் வளையல்

கல்யாணப் பொண்ணு
கண்ணான கண்ணு
கொண்டாடி வரும் வளையல்
கல்யாணப் பொண்ணு
கண்ணான கண்ணு
கொண்டாடி வரும் வளையல்
அம்மா பூவோடு வருமே
பொட்டோடு வருமே
சிங்காரத் தங்க வளையல்

வங்கி வளையல்
சங்கு வளையல்
முத்து முத்தான வளையலுங்க

No comments:

Post a Comment