எந்தன் செல்லத் தங்கம்
ஏன் கண்ணு கலங்குது
எதை எண்ணிக் கொண்டு
இந்த அல்லித் தண்டு
மனம் விம்மி வருந்துது
நீ துள்ளி வரும்
மானினத்தின் தோழியடி
சிறு துன்பம் என்றால்
எந்தன் நெஞ்சில் காயமடி
சின்னத் தங்கம்
எந்தன் செல்லத் தங்கம்
ஏன் கண்ணு கலங்குது
எதை எண்ணிக் கொண்டு
இந்த அல்லித் தண்டு
மனம் விம்மி வருந்துது
குமரி நீயும் குழந்தையடி
மாங்கொழுந்து தானே இதயமடி
பொறந்த பாசம் தவிக்குதடி
உன்ன பாக்க மனசு துடிக்குதடி
என்ன நடந்ததால்
உந்தன் முகம் சிவந்தது
இந்த நினைவிலே
சோகமெங்கும் நிறைந்தது
இந்த அண்ணன் இருக்க
உனது வாழ்வில் கலக்கம் ஏனடி
சின்னத் தங்கம்
எந்தன் செல்லத் தங்கம்
ஏன் கண்ணு கலங்குது
எதை எண்ணிக் கொண்டு
இந்த அல்லித் தண்டு
மனம் விம்மி வருந்துது
மனசுக்கேத்த மாப்பிள்ளய
ஒம்மனசு போல மணம் முடிப்பேன்
சீமந்தமும் நடத்தி வப்பேன்
ஒன் குழந்தைகள நான் சுமப்பேன்
பதினாறுகளும்
பெற்று நீ வாழணும்
அத பாத்து நான்
தினம் தினம் மகிழணும்
நம்ம ஊரும் உறவும்
உனது வாழ்வை மகிழ்ந்து பாடணும்
சின்னத் தங்கம்
எந்தன் செல்லத் தங்கம்
ஏன் கண்ணு கலங்குது
எதை எண்ணிக் கொண்டு
இந்த அல்லித் தண்டு
மனம் விம்மி வருந்துது
நீ துள்ளி வரும்
மானினத்தின் தோழியடி
சிறு துன்பம் என்றால்
எந்தன் நெஞ்சில் காயமடி
சின்னத் தங்கம்
எந்தன் செல்லத் தங்கம்
ஏன் கண்ணு கலங்குது
எதை எண்ணிக் கொண்டு
இந்த அல்லித் தண்டு
மனம் விம்மி வருந்துது
No comments:
Post a Comment