அத்தான சந்திக்கத்தான்
ஆச வச்சேன்
ஆளான சேதி சொல்லி
அடையாளம் காட்டத்தானே
ஆச வச்சேன்
கனகாம்பரம் எடுத்து
கையால நீ தொடுத்து
பின்னால வச்சிவிட
ஆச வச்சேன்
மரியாதை இல்லாம
மச்சான உன்னப் பேசி
மாரோட மல்லு கட்ட
ஆச வச்சேன்
அத்தனையும் பொய்யாச்சே ராசா
ஒத்தையில நிக்குதிந்த ரோசா
மாரளவு தண்ணியில
மஞ்சத்தேச்சு நான் குளிக்க
மறைஞ்சிறுந்து நீயும் பாக்க
ஆச வச்சேன்
பசுவப்போல மெல்ல வந்து
கொசுவத்தையும் நீ இழுத்து
குசும்புப் பண்ண வேணுமுன்னு
ஆச வச்சேன்
உன்னோடு சந்தையில
எல்லாரும் பாக்கையில
கண்டாங்கி வாங்கித் தர
ஆச வச்சேன்
குத்தாத முள்ளு குத்தி
குதிகாலு வலிக்குதுன்னு
மடிமேல காலப் போட
ஆச வச்சேன்
அத்தனையும் பொய்யாச்சே ராசா
ஒத்தையில நிக்குதிந்த ரோசா
ஆத்தோரம் தோப்புக்குள்ள
அத்தான சந்திக்கத்தான்
ஆச வச்சேன்
ஆளான சேதி சொல்லி
அடையாளம் காட்டத்தானே
ஆச வச்சேன்
மேகாட்டு மூலையிலே
மேகம் கருக்கையிலே
சுக்கு தண்ணி வச்சுத் தர
ஆச வச்சேன்
மச்சம் குளிருகிற
மார்கழி மாசத்துல
மச்சானத் தொட்டுத் தூங்க
ஆச வச்சேன்
மாமன் கட்டும் வேட்டியிலே
மஞ்சக்கற என்னதுன்னு
மந்தையில நின்னு சொல்ல
ஆச வச்சேன்
ரித்திகுளம் ஆசாரிக்கு
கொட்டியிலே பணம் குடுத்து
ரெட்டத் தொட்டில் செய்யச் சொல்ல
ஆச வச்சேன்
அத்தனையும் பொய்யாச்சே ராசா
ஒத்தையில நிக்குதிந்த ரோசா
அத்தானின் இடுப்புக்கு
அண்ணாக் கயிறு கட்ட
ஆச வச்சேன்
நறுக்கான தேகத்துக்கு
நல்லெண்ண தேச்சு விட
ஆச வச்சேன்
வெந்நீரு கொதிக்க வச்சு
மச்சான குளிக்க வச்சு
மாராப்பு நனையத் தானே
ஆச வச்சேன்
மாந்தோப்பில் கட்டிலிட்டு
மனம் போல தொட்டு தொட்டு
மாமன் கூட பேசிடத் தான்
ஆச வச்சேன்
அத்தனையும் பொய்யாச்சே ராசா
ஒத்தையில நிக்குதிந்த ரோசா
ஆத்தோரம் தோப்புக்குள்ள
அத்தான சந்திக்கத்தான்
ஆச வச்சேன்
ஆளான சேதி சொல்லி
அடையாளம் காட்டத்தானே
ஆச வச்சேன்
No comments:
Post a Comment