ஒரு முறை தான் ஒரு முறை தான் - Oru Murai Than Oru Murai Than Lyrics

ஒரு முறை தான்
ஒரு முறை தான்
மனிதனின் வாழ்க்கை
ஒரு முறை தான்

ஒரு முறை தான்
ஒரு முறை தான்
வாழ்க்கையில் திருமணம்
ஒரு முறை தான்
ஊரே வந்து பூத்தூவ
ஊர்வலம் போகும் கல்யாணம்
அம்மா அப்பா கைசேர்த்து
அட்சதை போடும் சந்தோஷம்
ஒரு முறை தான்
ஒரு முறை தான்
ஒரு சில மகிழ்ச்சிகள்
ஒரு முறை தான்
பெற்றவர்க்கு பிள்ளைகளால்
சந்தோஷம் சில முறை தான்


எத்தனையோ ஆசை
எத்தனையோ ஏக்கம்
சுமந்திருந்த தந்தையின் நெஞ்சை
நொறுக்கிவிட்டு சேர்ந்தோம்
கனவுகளும் கோடி
கற்பனைகள் கோடி
பெற்றவர்கள் கட்டிய கூட்டை
கலைத்து விட்டு சேர்ந்தோம்
உடைந்த உறவு வருமா
இழந்த மானம் வருமா
இனியும் வசந்தம் வருமா
காலம் திருப்பித் தருமா
வெறுமை நெஞ்சை அறுக்க
வலிக்கிறதே

ஒரு முறை தான்
ஒரு முறை தான்
ஒரு சில தவறுகள் 
ஒரு முறை தான்
ஒரு முறை தான் தவறியதால்
அடைகிற வேதனை
பல முறை தான்


யார் விழியின் நீரை
யார் துடைக்க என்றே
உறவுகளின் நினைவுகள் வரவே
வெந்து எரிகின்றோம்
ஆதரவும் இல்லை
ஆறுதலும் இல்லை
இருவருமே இடியைத் தாங்கி
இறந்து வாழ்கின்றோம்
ஒன்றாய் கூடி அமர்ந்து
அன்பாய்  உணவு பகிர்ந்து
தாயின் மடியில் கிடந்து
பாசம் பருகும் நிமிஷம்
இனிமேல் என்று கிடைக்கும்
தெரியவில்லை

ஒரு முறை தான்
ஒரு முறை தான்
தாய் வழி வருவது
ஒரு முறை தான்
தாய்மையை அடையும் பெண்ணுக்கு
தாய் வந்து செய்யும் மருத்துவங்கள்
குழந்தையின் குரலை 
முதன் முதலாய் கேட்கையில்
தோன்றும் பரவசங்கள்
ஒரு முறை தான்
ஒரு முறை தான்
ஒரு சில மகிழ்ச்சிகள்
ஒரு முறை தான்
பிஞ்சு நிலா பிறந்து  வந்தால்
பெற்றவர் கிடைப்பார்
மறு முறை தான்

ஒரு புன்னகைப் பூவே சிறு பூக்களின் தீவே - Oru Punnagai Poove Siru Pookalin Theeve Lyrics

ஒரு புன்னகைப் பூவே
சிறு பூக்களின் தீவே
ம்..ம்..ம்..ம்...

லல்லால லாலல்லால லால லாலலா
லல்லால லாலல்லால லால லாலலா
லால்லாலா லால்லாலா

எங்கேயே போகின்ற மேகம் நிற்குது
என் பேரை உன் பேரைச்
சொல்லி அழைக்குது
லவ் பண்ணு லவ் பண்ணு
ஓ.. ஓ... ஓ.. ஓ...
ஒரு புன்னகைப் பூவே
சிறு பூக்களின் தீவே
நீ என்னை மட்டும் காதல் பண்ணு
என் வாலிப நெஞ்சம்
உன் காலடி கெஞ்சும்
சிறு காதல் பிச்சை 
போடு கண்ணு
நான் கெஞ்சி கேட்கும் நேரம்
உன் நெஞ்சின் ஓரம் ஈரம்
ஆ.. சச்சோ அச்சோ காதல் வாராதோ

எங்கேயே போகின்ற மேகம் நிற்குது
என் பேரை உன் பேரைச்
சொல்லி அழைக்குது
லவ் பண்ணு லவ் பண்ணு


சூரியன் வாசல் வந்து
ஐஸ்க்ரீம் கொடுக்கும்
உடாதம்மா பீலா தாம்மா
சந்திரன் உள்ளே வந்து
சாக்லேட் கொடுக்கும்
சுத்தாதம்மா ரீலு தாம்மா
உன் படுக்கை அறையிலே
ஒரு வசந்தம் வேண்டுமா
உன் குளியல் அறையிலே
விண்டர் சீஸன் வேண்டுமா
நீ மாறச் சொன்னதும்
நாங்க சீஸனும் மாற வேண்டுமா
லவ் பண்ணு 

எங்கேயே போகின்ற மேகம் நிற்குது
என் பேரை உன் பேரைச்
சொல்லி அழைக்குது
லவ் பண்ணு லவ் பண்ணு
லவ் பண்ணு லவ் பண்ணு


எண்பது ஆண்டுகள்
இளமை வேண்டுமா
மெய்யாலுமா மெய்யாலுமா
சொடுக்கொன்று போட்டதும்
சொர்க்கம் வேண்டுமா
மெய்யாலுமா மெய்யாலுமா
அட வெள்ளை வெள்ளையாய்
ஓர் இரவு வேண்டுமா
புது வெளிச்சம் போடவே
இரு நிலவு வேணுமா
உனை காலை மாலையும் சுற்றி வருவது
காதல் செய்யவே
லவ் பண்ணு ஐயோ பண்ணு

எங்கேயே போகின்ற மேகம் நிற்குது
என் பேரை உன் பேரைச்
சொல்லி அழைக்குது
லவ் பண்ணு லவ் பண்ணு
லவ் பண்ணு ஐயோ பண்ணு

ஒரு புன்னகைப் பூவே
சிறு பூக்களின் தீவே
நீ என்னை மட்டும் காதல் பண்ணு
என் வாலிப நெஞ்சம்
உன் காலடி கெஞ்சும்
சிறு காதல் பிச்சை 
போடு கண்ணு
நீ கெஞ்சி கேட்கும் நேரம்
என் நெஞ்சின் ஓரம் ஈரம்
ஆ.. சச்சோ அச்சோ காதல் வந்தாச்சோ

லல்லாலல்லால லால லாலலா
லல்லாலல்லால லால லாலலா
லால்லாலா லாலாலாலா
லால்லாலா லாலாலாலா

காதல் கீதல் பண்ணி பாருடா - Kathal Keethal Panni Paaruda Lyrics

காதல் கீதல் பண்ணி பாருடா
நீ பண்ணாவிட்டா காலேஜூக்கே
கெட்ட பேருடா
காதலிக்கு ஜொள்ளு விடுடா
நீ காதலிச்சா காதலிக்கு
சொல்லிவிடுடா
வட்டமிட்ட எத்தனையோ
பட்டாம்பூச்சி தான்
நம்ம கிட்டவந்து
காட்டுதடா கண்ணாமூச்சிதான்
அட ஒன்னு ரெண்டு விட்டுபாரு
ஆரோ லெட்டரு
அத ஏத்துக்காதா எந்த பொண்ணும்
நம்ம சிஸ்டரு
காதல் இல்லாமலும்
ஃப்ரண்ட்ஷிப் வாழுமடா
நல்ல நட்பு தெய்வம் என்று
வொர்ஷிப் பண்ணுங்கடா

காதல் எக்ஸாம் வந்தா
எழுதி நாங்க பாஸ் ஆகணும்
அதுல பாஸ தான் தவறவிட்டா
ஏன் தேவதாஸ் ஆகணும்
காதல் காதல் எக்ஸாம் வந்தா
எழுதி நாங்க பாஸ் ஆகணும்
அதுல பாஸ தான் 
அதுல பாஸ தான் 
அதுல அதுல பாஸ தான் 
தவறவிட்டா
ஏன் தேவதாஸ் ஆகணும்

காதல் கீதல் பண்ணி பாருடா
நீ பண்ணாவிட்டா காலேஜூக்கே
கெட்ட பேருடா
காதலிக்கு ஜொள்ளு விடுடா
நீ காதலிச்சா காதலிக்கு
சொல்லிவிடுடா

திகி திகி தித்தோம் திகி திகிதோம்
திகி திகி திகிதோம்
திகி திகி தித்தோம் தித்தோம் தி
திகி தித்தோம் தி

நானும் நீயும் இளைய நதி
நமக்கு ஏது அரசு விதி
போகலாமே நினைத்தபடி
பூக்கள் கூட்டம் அணைத்தபடி
வேலி போட்டாலும் கூட
காற்று உள்ளே நிக்காதுடா
வலைவீசி பாத்தாலும் கூட
விண்மீன் வலையில் சிக்காதுடா
சுற்றும் மேகத்தின் 
வேகத்தை எண்ணியே... எண்ணி... யே..
ஒரு ஸ்பீடு பிரேக்கர்
வானத்தில் இல்லையே 
வானத்தில் இல்லையே 
வாலிபத்தின் வேகம் என்பது
வாலிபத்தின் வேகம் என்பது
ஏர் பஸ்ஸை கூட வென்று நிற்பது

ஓ..ஓ..ஓ...ஓ...

என்றும் இல்லை மனக்கவலை
ஏது இங்கு பணக்கவலை
அந்தக் கவலை அப்பனுக்கு.. அப்பனுக்கு..
படிக்க வைக்கும் சுப்பனுக்கு
மார்ச்சு போனாலும் கூட
இங்கே மீண்டும் எக்ஸாம் வரும்
திகிதோம் திகிதிகிதோம் 
நம் இளமை போனாலே நண்பா 
இங்கே மீண்டும் எப்போ வரும்
அட இன்றைக்கே ஒன்றாக சேரலாம்
ஒன்றாக சேரலாம்
இன்று நாளைக்கே நம் பாதை மாறலாம்
பாதை பாதை பாதை பாதை பாதை...
காதல் என்றும் மாறக்கூடாது
மாறக்கூடாது கூடாது கூடாது
அது கைமாறிப் போகக்கூடாது
கைமாறிப் போகக்கூடாது

காதல் கீதல் பண்ணி பாருடா
நீ பண்ணாவிட்டா காலேஜூக்கு
கெட்ட பேருடா
காதலிக்கு ஜொள்ளு விடுடா
நீ காதலிச்ச காதலிக்கு
சொல்லிவிடுடா
வட்டமிட்ட எத்தனையோ
பட்டாம்பூச்சி தான்
நம்ம கிட்டவந்து
காட்டுதடா கண்ணாமூச்சிதான்
ஒன்னு ரெண்டு விட்டு பாரு
ஆரோ லெட்டரு
அத ஏத்துக்காதா எந்த பொண்ணும்
நம்ம சிஸ்டரு
காதல் இல்லாமலும்
ஃப்ரண்ட்ஷிப் வாழுமடா
நல்ல நட்பு தெய்வம் என்று
வொர்ஷிப் பண்ணுங்கடா

காதல் எக்ஸாம் வந்தா
எழுதி நாங்க பாஸ் ஆகணும்
அதுல பாஸ தான் தவற விட்டா
ஏன் தேவதாஸ் ஆகணும்
காதல் எக்ஸாம் வந்தா
எழுதி நம்ம பாஸ் ஆகணும்
அதுல பாஸ தான் 
அதுல பாஸ தான் 
அதுல அதுல அதுல 
அதுல பாஸ தான் 
தவறவிட்டா
ஏன் தேவதாஸ் 
தேவதாஸ் தேவதாஸ் ஆகணும்

ஒரு நதி ஒரு பௌர்ணமி ஓர் ஓடம் - Oru Nathi Oru Pournami Oor Odam Lyrics

ஒரு நதி ஒரு பௌர்ணமி
ஓர் ஓடம் என்னிடமுண்டு
ஒரு நதி ஒரு பௌர்ணமி
ஓர் ஓடம் என்னிடமுண்டு
ஓடக்காரன் ஓடக்காரன்
அட உங்களில் யாருண்டு

ஒரு காடு சிறு மேடு
சில பூக்கள் என்னிடமுண்டு
பூக்காரன் பூக்காரன்
அட உங்களில் யாருண்டு

ஒரு புதையல் பொற்குவியல்
மலைவாசல் என்னிடமுண்டு
ஒரு புதையல் பொற்குவியல்
மலைவாசல் என்னிடமுண்டு
அலிபாபா அலிபாபா
அட உங்களில் யாருண்டு

ஒரு நதி ஒரு பௌர்ணமி
ஓர் ஓடம் என்னிடமுண்டு
ஓடக்காரன் ஓடக்காரன்
அட உங்களில் யாருண்டு

ஒரு காடு சிறு மேடு
சில பூக்கள் என்னிடமுண்டு
பூக்காரன் பூக்காரன்
அட உங்களில் யாருண்டு

ஒரு புதையல் பொற்குவியல்
மலைவாசல் என்னிடமுண்டு
ஒரு புதையல் பொற்குவியல்
மலைவாசல் என்னிடமுண்டு
அலிபாபா அலிபாபா
அட உங்களில் யாருண்டு

ஒரு நதி ஒரு பௌர்ணமி
ஓர் ஓடம்...
ஒரு புதையல் பொற்குவியல்
மலைவாசல்...


பாராமல் போன பௌர்ணமியெல்லாம்
பறித்துக் கொடுக்கும் ஒருவன்
கேளாமல் போன பாடலையெல்லாம்
திரட்டிக் கொடுக்கும் ஒருவன்
பாராமல் போன பௌர்ணமியெல்லாம்
பறித்துக் கொடுக்கும் ஒருவன்
கேளாமல் போன பாடலையெல்லாம்
திரட்டிக் கொடுக்கும் ஒருவன்
நான் தானா.... நீயில்லை
நான் தானா.... நீயில்லை
வான் மழையில் நனைந்த வானவில்லை
என் மடியில் கட்டும் ஒருவன்
என் தேகக் கதவு ஜன்னல் எல்லாம்
திறந்து வைக்கும் ஒருவன்
நான் தானா.... நீயில்லை
என் தேடல் அது வேறு
அட போடா நீயில்லை..ஐ...

ஒரு நதி ஒரு பௌர்ணமி
ஓர் ஓடம் என்னிடமுண்டு
ஓடக்காரன் ஓடக்காரன்
அட உங்களில் யாருண்டு

ஒரு காடு சிறு மேடு
சில பூக்கள் என்னிடமுண்டு
பூக்காரன் பூக்காரன்
அட உங்களில் யாருண்டு


தீராமல் போன ஆசைகளெல்லாம்
தீர்க்கத் தெரிந்த ஒருவன்
போகாத எல்லை போய் வந்தாலும்
புன்னகை செய்யும் ஒருவன்
புன்னகை செய்யும் ஒருவன்.. ஆ....
தீராமல் போன ஆசைகளெல்லாம்
தீர்க்கத் தெரிந்த ஒருவன்
போகாத எல்லை போய் வந்தாலும்
புன்னகை செய்யும் ஒருவன்
நீ தானா.. நான் இல்லை
நீ தானா.. நா நா.. நான் இல்லை
ஒரு கற்பு கண்ணிமை கருமம் எல்லாம்
கண்டு கொள்ளாத ஒருவன்
நான் போதும் போதும் என்னும் வரையில்
புதுமை செய்யும் ஒருவன்
நீ தானா.. அய்யோ நான் இல்லை
நான் தேடும் ஸ்ருங்காரன்
இங்கு ஏனோ ஏனில்லை...ஐ...

ஒரு நதி.. நதி... ஒரு பௌர்ணமி... பௌர்ணமி..
ஓர் ஓடம் என்னிடமுண்டு
ஓடக்காரன் ஓடக்காரன்
அட உங்களில் யாருண்டு

ஒரு காடு.. காடு... சிறு மேடு..மேடு..
சில பூக்கள் என்னிடமுண்டு
பூக்காரன் பூக்காரன்
அட உங்களில் யாருண்டு

ஒரு புதையல்.. புதையல்..  பொற்குவியல்.. குவியல்..
மலைவாசல் என்னிடமுண்டு
ஒரு புதையல்.. புதையல்..  பொற்குவியல்.. குவியல்..
மலைவாசல் என்னிடமுண்டு
அலிபாபா அலிபாபா
அட உங்களில் யாருண்டு

எங்களி்ல் யாருண்டு....

உன்னை நானறிவேன் என்னையன்றி - Unnai Naanariven Ennai Andri Lyrics

ஆ..ஆ..ஆ..ஆ..
உன்னை நானறிவேன்
என்னையன்றி யாரறிவார்
கண்ணில் நீர் வழிந்தால்
என்னையன்றி யார் துடைப்பார்
யார் இவர்கள்
மாயும் மானிடர்கள்
ஆட்டி வைத்தால்
ஆடும் பாத்திரங்கள்

உன்னை நானறிவேன்
என்னையன்றி யாரறிவார்
கண்ணில் நீர் வழிந்தால்
என்னையன்றி யார் துடைப்பார்


தேவன் என்றால் தேவனல்ல
தரைமேல் உந்தன் ஜனனம்
ஜீவன் என்றால் ஜீவனல்ல
எனைப்போல் இல்லை சலனம்
நீயோ வானம் விட்டு
மண்ணில் வந்த தாரகை
நானோ யாரும் வந்து
தங்கிச் செல்லும் மாளிகை
ஏன் தான் பிறந்தாயோ
இங்கே வளர்ந்தாயோ
காற்றே நீயே 
சேற்றின் வாடை கொள்ள வேண்டும்

உன்னை நானறிவேன்
என்னையன்றி யாரறிவார்
கண்ணில் நீர் வழிந்தால்
என்னையன்றி யார் துடைப்பார்

உன்னை நானறிவேன்
என்னையன்றி யாரறிவார்
கண்ணில் நீர் வழிந்தால்
என்னையன்றி யார் துடைப்பார்
தாய்ப் பறவை மிதித்தால்
சேய்ப் பறவை நோவதில்லை
காயம் ஆவதில்லை
உன்னை நானறிவேன்
என்னையன்றி யாரறிவார்
கண்ணில் நீர் வழிந்தால்
என்னையன்றி யார் துடைப்பார்

காட்டுக்குயில் போல இந்த வீட்டுக்குயில் - Kaatu Kuyil Pola Intha Veetu Kuyil Lyrics

ஏ.. காட்டுக்குயில் போல
இந்த வீட்டுக்குயில் கூவும்
கேட்டுக்குங்க சாமி
உங்க கோவமெல்லாம் போவும்
நான் பாட்டுக்குள்ள இலக்கணத்த
படிச்சதில்ல ஏட்டில்
நாட்டுப்புற இலக்கியம் தான்
நெறஞ்சிருக்கும் பாட்டில்
யார் இதயத்தையும் 
இளக வைக்கும் எந்தன் பாட்டு தான்

ஆ...ஆ...ஆ.. ஆ..


பொட்டலுல செடி வளரும்
மொட்டதல முடி வளரும்
பட்டிக்காட்டு பாட்டெடுத்தா
பாறையில புல் மொளைக்கும்
கேப்பையில நெய் வடியும்
காளையில பால் வடியும்
ஏழிசைய கேட்டிருந்தா
எத்திக்காயில் தேன் வடியும்
சாமியென்ன பூமியென்ன
சங்கீதம்னா சரண்டருதான்
எங்க ஊரு ஓட வாட
எல்லாம் பாடுது
அந்த இயற்கைய தான் பாத்து
என் ஞானம் வந்தது
என் கூடப் பொறந்த பொறப்பா
இந்த கானம் வந்தது
ஊர் நெனப்புல தான்
நெலச்சு நிக்கும்
நம்ம பாட்டு தான்

ஆ...ஆ...ஆ.. ஆ..

காட்டுக்குயில் போல
இந்த வீட்டுக்குயில் கூவும்
கேட்டுக்குங்க சாமி
உங்க கோவமெல்லாம் போவும்


ஆ... கந்தனுக்கு வடிவேலு
கண்ணனுக்கு வேய்குழலு
எந்தனுக்கு துணையாகும்
தாய் குடுத்த தமிழ் பாலு
சிந்துகளில் பெயரெடுத்த
சூரக்கோட்ட பொறப்பெடுத்த
சின்னத்தம்பி பரம்பரை தான்
சொக்கனுக்கும் பாடகன் நான்
கிட்டப்பாவ கேட்டதில்ல
சின்னப்பாவ பாத்ததில்ல
ரத்தத்தில் ஊறிப்போச்சு
ராகம் தாளம் தான்
நான் டிஎம்எஸ்ஸு பொறந்த
தென் மதுரைக்காரன் தான்
என் மனசில் புகுந்து பாடும்
அந்த மதுர வீரம் தான்
நான் அடுத்தவங்க அகம் குளிர
நாளும் பாடுவேன்

ஆ...ஆ...ஆ.. ஆ..

காட்டுக்குயில் போல
இந்த வீட்டுக்குயில் கூவும்
கேட்டுக்குங்க சாமி
உங்க கோவமெல்லாம் போவும்
நான் பாட்டுக்குள்ள இலக்கணத்த
படிச்சதில்ல ஏட்டில்
நாட்டுப்புற இலக்கியம் தான்
நெறஞ்சிருக்கும் பாட்டில்
யார் இதயத்தையும் 
இளக வைக்கும் எந்தன் பாட்டு தான்

ஆ...ஆ...ஆ.. ஆ..

மௌனமான மரணம் ஒன்று - Mounamaana Maranam Ondru Lyrics

மௌனமான மரணம் ஒன்று
உயிரை கொண்டு போனதே
உயரமான கனவு இன்று
கரையில் வீழ்ந்து போனதே
திசையும் போனது திமிரும் போனது
தனிமை தீயிலே வாடினேன்
நிழலும் போனது நிஜமும் போனது
எனக்குள் எனையே தேடினேன்

கனவே கனவே கலைவதேனோ
கரங்கள் ரணமாய் கரைவதேனோ
நினைவே நினைவே அறைவதேனோ
எனது உலகம் உறைவதேனோ


கண்கள் ரெண்டும் நீரிலே
மீனை போல வாழுதே
கடவுளும் பெண் இதயமும்
இருக்குதா அட இல்லையா

ஓஹோ.. நானும் இங்கே வலியிலே
நீயும் அங்கோ சிரிப்பிலே
காற்றில் எங்கும் தேடினேன்
பேசிப் போன வார்த்தையை
இது நியாயமா
மனம் தாங்குமா
என் ஆசைகள் அது பாவமா

கனவே கனவே 
கரங்கள் ரணமாய் 
நினைவே நினைவே அறைவதேனோ
எனது உலகம் உறைவதேனோ

நீ கவிதைகளா கனவுகளா - Nee Kavithaigalaa Kanavugalaa Lyrics

நீ கவிதைகளா கனவுகளா
கயல் விழியே
நான் நிகழ்வதுவா கடந்ததுவா 
பதில் மொழியே
உன்னோடு நெஞ்சம்
உறவாடும் வேளை
தண்ணீர் கமலம் தானா

முகம் காட்டு நீ
முழு வெண்பனி
மூடாதே நீ 
என் எல்லையே
இதழ் ஓரமாய்
சிறு புன்னகை
நீ காட்டடி
என் முல்லையே


மழையோடு நனையும்
புது பாடல்
நீ தான் அழகான திமிரே
அடியே அடியே
காற்றோடு பரவும்
உன் வாசம் தினமும்
புது போதை தானே
சிலையே அழகே..... அழகே....

நான் உனக்கெனவே
முதல் பிறந்தேன்
இளங்கொடியே
நீ எனக்கெனவே
கரம் விரித்தாய்
என் வரமே


மந்தாரப் பூ போல
மச்சம் காணும் வேள
என்னத்த நான் சொல்ல
மிச்சம் ஒன்னும் இல்ல
முழு மதியினில்
பனி இரவினில்
தனி பொழுதினில்
ஓடாதே

முகம் காட்டு நீ
முழு வெண்பனி
மூடாதே நீ 
என் எல்லையே
இதழ் ஓரமாய்
சிறு புன்னகை
நீ காட்டடி
என் முல்லையே

நீ கவிதைகளா கனவுகளா
கயல் விழியே
நான் நிகழ்வதுவா கடந்ததுவா....
உன்னோடு நெஞ்சம்
உறவாடும் வேளை
தண்ணீர் கமலம் தானா

முகம் காட்டு நீ
முழு வெண்பனி
மூடாதே நீ 
என் எல்லையே
இதழ் ஓரமாய்
சிறு புன்னகை
நீ காட்டடி
என் முல்லையே

முகம் காட்டு நீ
முழு வெண்பனி
மூடாதே நீ 
என் எல்லையே
இதழ் ஓரமாய்
சிறு புன்னகை
நீ காட்டடி
என் முல்லையே

நான் ஆசப்பட்ட பொண்ணு பேரு மோனிசா - Naan Aasapatta Ponnu Peru Lyrics

போன மாசம் நானும் 
சம்பளம் வாங்குனேன்
மோனிசா பொண்ணுக்கு
கம்பளம் வாங்குனேன்
மூனு கல்லு வச்ச
மூக்குத்தி வாங்குனேன்
மீதி பணத்துல
ஜாக்கெட்டு வாங்குனேன்
பக்கத்துல வீட்டுல
தண்டலு வாங்குனேன்
மெரினா பீச்சுல
சுண்டலு வாங்குனேன்
பத்தாத கொறைக்கு
வட்டிக்கு வாங்குனேன்
மோனிசா கூட நான்
வெட்டியா சுத்துனேன்
மூஞ்சியில பூசிக்க
ஃபேர் அன் லவ்லி
தொல்ல பண்ணா என்ன
வாங்க சொல்லி
வஊசி நகர் கொஞ்சம் தள்ளி
வாங்கித் தந்தேன் 
நல்ல ஜாதி மல்லி
ட்ரஸ்ஸுக்கு மேட்சாக
சில்ஃபரு கேக்கும்
எல்லாத்தையும் வாங்கினு
ஏமாத்த பாக்கும்
பொண்ணுங்க மேல நீ
வைக்காத ஏக்கம்
வச்சாக்க கெட்டுடும்
ஒன்னோட தூக்கம்
என்னாட்டம் ஆயிடாதே....


நான் ஆசப்பட்ட 
பொண்ணு பேரு மோனிசா
காதலிச்சேன் சீரிஸா
விட்டுட்டாளே கேர்லெஸ்ஸா
நான் ஆசப்பட்ட 
பொண்ணு பேரு மோனிசா
காதலிச்சேன் சீரிஸா
விட்டுட்டாளே கேர்லெஸ்ஸா
பேரீஸ் முனையில
பேக்கரி கடையில
வாங்கித் தந்தேன் சுவீட்டு
அது கேக்கையும் வாங்கினு
பார்சலு கட்டினு
வச்சுட்டாளே ரிவீட்டு
காரியம் முடிஞ்சதும்
காலையும் வாரிட்டு
சாரின்னு சொல்லிட்டாளே
எதிரு வீட்டு பையன் மாணிக்கம்
பொண்ணு அவன் பின்னாடியே
பைக்குல ஏறிக்கும்
அந்த எதிரு வீட்டு பையன் மாணிக்கம்
பொண்ணு அவன் பின்னாடியே
பைக்குல ஏறிக்கும்

நான் ஆசப்பட்ட 
பொண்ணு பேரு மோனிசா
காதலிச்சேன் சீரிஸா
விட்டுட்டாளே கேர்லெஸ்ஸா
நான் ஆசப்பட்ட 
பொண்ணு பேரு மோனிசா
காதலிச்சேன் சீரிஸா
விட்டுட்டாளே கேர்லெஸ்ஸா


சாங்காலம் ஆனதுன்னா
ஒரு பால ஃபோன போட்டு
சினிமாக்கு என்ன கூப்பிடும்
மெரினாக்கு கூட்டினு போய்
மணல் மேல ஒக்கார வச்சா
கோன் ஐஸ வாங்கி சாப்பிடும்
இந்த மாறி காதலிச்ச
என்ன அவ விட்டுவிட்டா
நொந்த மூஞ்சி மாணிக்கத்த
தேவலாம்மா கட்டிகிட்டா
இந்த மாறி காதலிச்ச
என்ன அவ விட்டுவிட்டா
நொந்த மூஞ்சி மாணிக்கத்த
தேவலாம்மா கட்டிகிட்டா
ஏதேதோ பொய் சொல்லி
ஏமாத்திட்டா
நம்ப வச்சு கானா தினேஷ
கழுத்த அறுத்திட்டா

கோவலம் பீச்சிக்கு
கூட்டினு போய்ட்டு
ஜோடியாக நின்னு
போட்டா புடிச்சுட்டு
மாமல்லபுரத்த ஜாலியா பாத்துட்டு
பார்க்கும் பீச்சுக்கும்
ஒன்னாவே சுத்திட்டு
கிஷ்கிந்தா அவள
கூட்டினு போய்ட்டு
இஷ்டம் போல நாங்க 
ஒன்னாவே இருந்துட்டு
சில்ரன்ஸு பார்க்குக்கு
கூட்டினு போய்ட்டு
சில்மிசம் கில்மிசம் 
எல்லாமே பண்ணிட்டு
காலையில் எழுந்து
பல்ல தேச்சி
பாக்க போனோம் நாங்க
கோல்டன் பீச்சி
ரொம்ப நாளா நாங்க ஆச வச்சி
பாத்தோமே சுற்றுலா
பொருள் காட்சி
அங்கேயும் இங்கேயும்
என் கூட சுத்தி
அப்புறம் மாறிச்சு
மோனிசா புத்தி
அப்பான்ட அம்மான்ட
வச்சுட்டா வத்தி
அப்ப தான் தெரிஞ்சது
பொண்ணுங்க பத்தி
சொன்னாலே திட்டாதீங்க

என்னாட்டம் ஆம்பளைங்க
லவ் பண்ண ஆசப்பட்டா
ஒழுங்கான ஃபிகர புடிக்கணும்
அவளான்ட கெஞ்சிக்கினு
லோ லோனு அலைஞ்சிக்குனு
எதுக்காக வெசத்த குடிக்கணும்
காதலிச்சு தோத்துவிட்ட
ஆம்பளைங்க சாகணுமா
நீங்க மட்டும் புருஷன் கூட 
பல்சருல போகணுமா
காதலிச்சு தோத்துவிட்ட
ஆம்பளைங்க சாகணுமா
நீங்க மட்டும் புருஷன் கூட 
பல்சருல போகணுமா
கண்டுக்காம போவாளே அவ பாட்டுக்கு
இவன் தேடி போவான் சுடுகாட்டுக்கு


அந்த பொண்ணுக்காக
ஏங்கித் தவிக்கிறான்
வீட்ட மறந்துட்டு
சாவ நெனைக்கிறான்
தண்டவாளத்துல 
தண்டமா சாவுறான்
மண்ட பொளந்துனு
முண்டமா ஆவுறான்
ஏக்கத்துல போயி
தூக்கு மாட்டிக்கிறான்
தூக்க மாத்திரய
வாங்கி போட்டுக்குறான்
பூச்சி மருந்தையும்
வாங்கி குடிக்கிறான்
மூச்சி அடங்கிட்டா
விழுந்து கெடக்குறான்
காதலிச்சு அவன் தாடி வச்சு
சுத்துவான் ரோட்டுல
பயித்தியம் புடிச்சி
மாடிக்கு மேலேர்ந்து கீழ குதிச்சு 
செத்துட்டான் பேப்பர்ல எழுதி வச்சு
பொண்ணுங்க பின்னால 
சுத்தினு போவான்
மண்ணெண்ன ஊத்தினு
கொளுத்தினு சாவான்
தண்ணில விழுந்து 
உள்ளுக்கு போவான்
செத்துட்ட பின்னால
டெட் பாடி ஆவான்
காரணம் பொண்ணுங்க தான்

தினேஷ் பாடும் பாட்ட கேளுங்க
நீங்க இனிமேலும் திருந்த பாருங்க
கானா தினேஷ் பாடும் பாட்ட கேளுங்க
நீங்க இனிமேலும் திருந்த பாருங்க

நான் ஆசப்பட்ட 
பொண்ணு பேரு மோனிசா
காதலிச்சேன் சீரிஸா
விட்டுட்டாளே கேர்லெஸ்ஸா
நான் ஆசப்பட்ட 
பொண்ணு பேரு மோனிசா
காதலிச்சேன் சீரிஸா
விட்டுட்டாளே கேர்லெஸ்ஸா

ஊரு விட்டு ஊரு வந்து - Ooru Vittu Ooru Vanthu Lyrics

ஊரு விட்டு ஊரு வந்து 
பப்பப்பா
காதல் கீதல் பண்ணாதீங்க
பப்பப்பா
பேரு கெட்டு போனதுன்னா
பப்பப்பா
நம்ம பொழப்பு என்னாகுங்க
பப்பப்பா
விட்டுடு தம்பி
இது வேணாம் தம்பி
இத்தன பேரு வீடு உங்கள நம்பி
விட்டுடு தம்பி
இது வேணாம் தம்பி
இத்தன பேரு வீடு உங்கள நம்பி
ஊரு விட்டு ஊரு வந்து 
பப்பப்பா
காதல் கீதல் பண்ணாதீங்க
பப்பப்பா
பேரு கெட்டு போனதுன்னா
பப்பப்பா
நம்ம பொழப்பு என்னாகுங்க


அண்ணாச்சி என்ன
எப்போதும் நீங்க தப்பாக எண்ண வேணாம்
பொண்ணால கெட்டு போவேனோ என்று
ஆராய்ச்சி பண்ண வேணாம்
ஊருல ஒலகத்துல எங்க கத
போலெங்கும் நடக்கலயா
ரப்பப் பப்பப்பா
வீட்டயும் மறந்துபுட்டு
வேற ஒரு நாட்டுக்கு ஓடலயா
ரப்பப் பப்பப்பா
மன்மத லீலையை வென்றவருண்டோ
இல்ல இல்ல
மங்கையில்லாதொரு வெற்றியும் உண்டோ
இல்ல இல்ல
மன்மத லீலையை வென்றவருண்டோ
மங்கையில்லாதொரு வெற்றியும் உண்டோ
காதல் ஈடேற பாடு என் கூட

ஊரு விட்டு ஊரு வந்து 
பப்பப்பா
காதல் கீதல் பண்ணாதீங்க
பப்பப்பா
விட்டுடு தம்பி
இது வேணாம் தம்பி
இத்தன பேரு வீடு உங்கள நம்பி
ஊரு விட்டு ஊரு வந்து 
பப்பப்பா
காதல் கீதல் பண்ணாதீங்க


ஆணா பொறந்தா எல்லாரும் பொண்ண 
அன்பாக எண்ண வேணும்
வீணா திரிஞ்சா ஆனந்தம் இல்ல
வேறென்ன சொல்ல வேணும்
வாழ்க்கைய ரசிக்கணுன்னா
வஞ்சிக்கொடி வாசன பட வேணும்
ரப்பப் பப்பப்பா
வாலிபம் இனிக்கணுன்னா
பொண்ண கொஞ்சம் ஆசையில் தொட வேணும்
ரப்பப் பப்பப்பா
கன்னிய தேடுங்க கற்பனை வரும்
ஆமா ஆமாமா
கண்டதும் ஆயிரம் காவியம் வரும்
ஆமா ஆமாமா
கன்னிய தேடுங்க கற்பனை வரும்
கண்டதும் ஆயிரம் காவியம் வரும்
காதல் இல்லாம பூமி இங்கேது

ஊரு விட்டு ஊரு வந்து 
பப்பப்பா
காதல் கீதல் பண்ணாதீங்க
பப்பப்பா
பேரு கெட்டு போனதுன்னா
பப்பப்பா
நம்ம பொழப்பு என்னாகுங்க
விட்டுடு தம்பி
இது வேணாம் தம்பி
இத்தன பேரு வீடு உங்கள நம்பி
அய்யய்யோ விட்டுடு தம்பி
இது வேணாம் தம்பி
இத்தன பேரு வீடு உங்கள நம்பி
ஊரு விட்டு ஊரு வந்து 
பப்பப்பா
காதல் கீதல் பண்ணாதீங்க
பப்பப்பா
பேரு கெட்டு போனதுன்னா
பப்பப்பா
நம்ம பொழப்பு என்னாகுங்க

காதல் கசக்குதய்யா - Kaathal Kasakuthayya Lyrics

காதல் கசக்குதய்யா
வர வர காதல் கசக்குதய்யா
மனந்தான் லவ்வு வவ்வுனு அடிக்கும்
லவ்வோனு தான் துடிக்கும்
தோத்துபோனா குடிக்கும்
பயித்தியம் புடிக்கும்
காதல் கசக்குதய்யா
வர வர காதல் கசக்குதய்யா


யார் யாரோ காதலிச்சு
யார் யாரோ காதலிச்சு உருப்படல
ஒன்னும் சரிப்படல
வாழ்க்கையில என்றும் சுகப்படல
காதல படம் எடுத்தா ஓடுமுங்க
தியேட்டரில சனம் கூடுமுங்க
தேவதாஸ் அவன் பார்வதி
அம்பிகாபதி அமராவதி
கதைய கேளு முடிவ பாரு
கடைசியில் சேராம வாழாம செத்தாங்க

எனக்கிந்த காதல் கசக்குதய்யா
வர வர காதல் கசக்குதய்யா
மனந்தான் லவ்வு வவ்வுனு அடிக்கும்
லவ்வோனு தான் துடிக்கும்
தோத்துபோனா குடிக்கும்
பயித்தியம் புடிக்கும்
காதல் கசக்குதய்யா


எத்தனை சினிமா எத்தனை ட்ராமா பாத்தாச்சு
எத்தனை டூயட் எத்தனை ட்யூனு கேட்டாச்சு
இத்தனை பாத்து இத்தனை கேட்டு
புத்தியும் கெட்டு சக்தியும் கெட்டு நின்னாச்சு
கிட்டப்பா அந்த காலத்துல 
காயாத கானகத்தே
பியு சின்னப்பா வந்த காலத்துல 
காதல் கனிரசமே
மன்மத லீலை எம்கேடி காலத்துல
நடையா இது நடையா 
நம்ம நடிகர் திலகம் பாணியிலே
ஹலோ ஹலோ சுகமா
அட ஆமா நீங்க நலமா
எங்கேயும் தான் கேட்டோம்
அண்ணன் எம்ஜியார் பாட்டுகள
இந்த கால இளைஞர் செய்யும் காதலுக்கு
இளையராஜா எந்தன் பாட்டிருக்கு
வீட்டுல அத பாடுங்க
பொண்டாட்டிய லவ் பண்ணுங்க
நம்ம தகப்பன் பேச்ச 
தாயின் பேச்ச மதிக்கணும்
நீயாக பெண் தேட கூடாது

எனக்கிந்த காதல் கசக்குதய்யா
வர வர காதல் கசக்குதய்யா
மனந்தான் லவ்வு வவ்வுனு அடிக்கும்
லவ்வோனு தான் துடிக்கும்
தோத்துபோனா குடிக்கும்
பயித்தியம் புடிக்கும்
காதல் மோதல் காதல்
காதல் காதல் 
கசக்குதய்யா 
கசக்குதய்யா
கசக்குதய்யா