இந்த வீட்டுக்குயில் கூவும்
கேட்டுக்குங்க சாமி
உங்க கோவமெல்லாம் போவும்
நான் பாட்டுக்குள்ள இலக்கணத்த
படிச்சதில்ல ஏட்டில்
நாட்டுப்புற இலக்கியம் தான்
நெறஞ்சிருக்கும் பாட்டில்
யார் இதயத்தையும்
இளக வைக்கும் எந்தன் பாட்டு தான்
ஆ...ஆ...ஆ.. ஆ..
பொட்டலுல செடி வளரும்
மொட்டதல முடி வளரும்
பட்டிக்காட்டு பாட்டெடுத்தா
பாறையில புல் மொளைக்கும்
கேப்பையில நெய் வடியும்
காளையில பால் வடியும்
ஏழிசைய கேட்டிருந்தா
எத்திக்காயில் தேன் வடியும்
சாமியென்ன பூமியென்ன
சங்கீதம்னா சரண்டருதான்
எங்க ஊரு ஓட வாட
எல்லாம் பாடுது
அந்த இயற்கைய தான் பாத்து
என் ஞானம் வந்தது
என் கூடப் பொறந்த பொறப்பா
இந்த கானம் வந்தது
ஊர் நெனப்புல தான்
நெலச்சு நிக்கும்
நம்ம பாட்டு தான்
ஆ...ஆ...ஆ.. ஆ..
காட்டுக்குயில் போல
இந்த வீட்டுக்குயில் கூவும்
கேட்டுக்குங்க சாமி
உங்க கோவமெல்லாம் போவும்
ஆ... கந்தனுக்கு வடிவேலு
கண்ணனுக்கு வேய்குழலு
எந்தனுக்கு துணையாகும்
தாய் குடுத்த தமிழ் பாலு
சிந்துகளில் பெயரெடுத்த
சூரக்கோட்ட பொறப்பெடுத்த
சின்னத்தம்பி பரம்பரை தான்
சொக்கனுக்கும் பாடகன் நான்
கிட்டப்பாவ கேட்டதில்ல
சின்னப்பாவ பாத்ததில்ல
ரத்தத்தில் ஊறிப்போச்சு
ராகம் தாளம் தான்
நான் டிஎம்எஸ்ஸு பொறந்த
தென் மதுரைக்காரன் தான்
என் மனசில் புகுந்து பாடும்
அந்த மதுர வீரம் தான்
நான் அடுத்தவங்க அகம் குளிர
நாளும் பாடுவேன்
ஆ...ஆ...ஆ.. ஆ..
காட்டுக்குயில் போல
இந்த வீட்டுக்குயில் கூவும்
கேட்டுக்குங்க சாமி
உங்க கோவமெல்லாம் போவும்
நான் பாட்டுக்குள்ள இலக்கணத்த
படிச்சதில்ல ஏட்டில்
நாட்டுப்புற இலக்கியம் தான்
நெறஞ்சிருக்கும் பாட்டில்
யார் இதயத்தையும்
இளக வைக்கும் எந்தன் பாட்டு தான்
ஆ...ஆ...ஆ.. ஆ..
No comments:
Post a Comment