நான் ஆசப்பட்ட பொண்ணு பேரு மோனிசா - Naan Aasapatta Ponnu Peru Lyrics

போன மாசம் நானும் 
சம்பளம் வாங்குனேன்
மோனிசா பொண்ணுக்கு
கம்பளம் வாங்குனேன்
மூனு கல்லு வச்ச
மூக்குத்தி வாங்குனேன்
மீதி பணத்துல
ஜாக்கெட்டு வாங்குனேன்
பக்கத்துல வீட்டுல
தண்டலு வாங்குனேன்
மெரினா பீச்சுல
சுண்டலு வாங்குனேன்
பத்தாத கொறைக்கு
வட்டிக்கு வாங்குனேன்
மோனிசா கூட நான்
வெட்டியா சுத்துனேன்
மூஞ்சியில பூசிக்க
ஃபேர் அன் லவ்லி
தொல்ல பண்ணா என்ன
வாங்க சொல்லி
வஊசி நகர் கொஞ்சம் தள்ளி
வாங்கித் தந்தேன் 
நல்ல ஜாதி மல்லி
ட்ரஸ்ஸுக்கு மேட்சாக
சில்ஃபரு கேக்கும்
எல்லாத்தையும் வாங்கினு
ஏமாத்த பாக்கும்
பொண்ணுங்க மேல நீ
வைக்காத ஏக்கம்
வச்சாக்க கெட்டுடும்
ஒன்னோட தூக்கம்
என்னாட்டம் ஆயிடாதே....


நான் ஆசப்பட்ட 
பொண்ணு பேரு மோனிசா
காதலிச்சேன் சீரிஸா
விட்டுட்டாளே கேர்லெஸ்ஸா
நான் ஆசப்பட்ட 
பொண்ணு பேரு மோனிசா
காதலிச்சேன் சீரிஸா
விட்டுட்டாளே கேர்லெஸ்ஸா
பேரீஸ் முனையில
பேக்கரி கடையில
வாங்கித் தந்தேன் சுவீட்டு
அது கேக்கையும் வாங்கினு
பார்சலு கட்டினு
வச்சுட்டாளே ரிவீட்டு
காரியம் முடிஞ்சதும்
காலையும் வாரிட்டு
சாரின்னு சொல்லிட்டாளே
எதிரு வீட்டு பையன் மாணிக்கம்
பொண்ணு அவன் பின்னாடியே
பைக்குல ஏறிக்கும்
அந்த எதிரு வீட்டு பையன் மாணிக்கம்
பொண்ணு அவன் பின்னாடியே
பைக்குல ஏறிக்கும்

நான் ஆசப்பட்ட 
பொண்ணு பேரு மோனிசா
காதலிச்சேன் சீரிஸா
விட்டுட்டாளே கேர்லெஸ்ஸா
நான் ஆசப்பட்ட 
பொண்ணு பேரு மோனிசா
காதலிச்சேன் சீரிஸா
விட்டுட்டாளே கேர்லெஸ்ஸா


சாங்காலம் ஆனதுன்னா
ஒரு பால ஃபோன போட்டு
சினிமாக்கு என்ன கூப்பிடும்
மெரினாக்கு கூட்டினு போய்
மணல் மேல ஒக்கார வச்சா
கோன் ஐஸ வாங்கி சாப்பிடும்
இந்த மாறி காதலிச்ச
என்ன அவ விட்டுவிட்டா
நொந்த மூஞ்சி மாணிக்கத்த
தேவலாம்மா கட்டிகிட்டா
இந்த மாறி காதலிச்ச
என்ன அவ விட்டுவிட்டா
நொந்த மூஞ்சி மாணிக்கத்த
தேவலாம்மா கட்டிகிட்டா
ஏதேதோ பொய் சொல்லி
ஏமாத்திட்டா
நம்ப வச்சு கானா தினேஷ
கழுத்த அறுத்திட்டா

கோவலம் பீச்சிக்கு
கூட்டினு போய்ட்டு
ஜோடியாக நின்னு
போட்டா புடிச்சுட்டு
மாமல்லபுரத்த ஜாலியா பாத்துட்டு
பார்க்கும் பீச்சுக்கும்
ஒன்னாவே சுத்திட்டு
கிஷ்கிந்தா அவள
கூட்டினு போய்ட்டு
இஷ்டம் போல நாங்க 
ஒன்னாவே இருந்துட்டு
சில்ரன்ஸு பார்க்குக்கு
கூட்டினு போய்ட்டு
சில்மிசம் கில்மிசம் 
எல்லாமே பண்ணிட்டு
காலையில் எழுந்து
பல்ல தேச்சி
பாக்க போனோம் நாங்க
கோல்டன் பீச்சி
ரொம்ப நாளா நாங்க ஆச வச்சி
பாத்தோமே சுற்றுலா
பொருள் காட்சி
அங்கேயும் இங்கேயும்
என் கூட சுத்தி
அப்புறம் மாறிச்சு
மோனிசா புத்தி
அப்பான்ட அம்மான்ட
வச்சுட்டா வத்தி
அப்ப தான் தெரிஞ்சது
பொண்ணுங்க பத்தி
சொன்னாலே திட்டாதீங்க

என்னாட்டம் ஆம்பளைங்க
லவ் பண்ண ஆசப்பட்டா
ஒழுங்கான ஃபிகர புடிக்கணும்
அவளான்ட கெஞ்சிக்கினு
லோ லோனு அலைஞ்சிக்குனு
எதுக்காக வெசத்த குடிக்கணும்
காதலிச்சு தோத்துவிட்ட
ஆம்பளைங்க சாகணுமா
நீங்க மட்டும் புருஷன் கூட 
பல்சருல போகணுமா
காதலிச்சு தோத்துவிட்ட
ஆம்பளைங்க சாகணுமா
நீங்க மட்டும் புருஷன் கூட 
பல்சருல போகணுமா
கண்டுக்காம போவாளே அவ பாட்டுக்கு
இவன் தேடி போவான் சுடுகாட்டுக்கு


அந்த பொண்ணுக்காக
ஏங்கித் தவிக்கிறான்
வீட்ட மறந்துட்டு
சாவ நெனைக்கிறான்
தண்டவாளத்துல 
தண்டமா சாவுறான்
மண்ட பொளந்துனு
முண்டமா ஆவுறான்
ஏக்கத்துல போயி
தூக்கு மாட்டிக்கிறான்
தூக்க மாத்திரய
வாங்கி போட்டுக்குறான்
பூச்சி மருந்தையும்
வாங்கி குடிக்கிறான்
மூச்சி அடங்கிட்டா
விழுந்து கெடக்குறான்
காதலிச்சு அவன் தாடி வச்சு
சுத்துவான் ரோட்டுல
பயித்தியம் புடிச்சி
மாடிக்கு மேலேர்ந்து கீழ குதிச்சு 
செத்துட்டான் பேப்பர்ல எழுதி வச்சு
பொண்ணுங்க பின்னால 
சுத்தினு போவான்
மண்ணெண்ன ஊத்தினு
கொளுத்தினு சாவான்
தண்ணில விழுந்து 
உள்ளுக்கு போவான்
செத்துட்ட பின்னால
டெட் பாடி ஆவான்
காரணம் பொண்ணுங்க தான்

தினேஷ் பாடும் பாட்ட கேளுங்க
நீங்க இனிமேலும் திருந்த பாருங்க
கானா தினேஷ் பாடும் பாட்ட கேளுங்க
நீங்க இனிமேலும் திருந்த பாருங்க

நான் ஆசப்பட்ட 
பொண்ணு பேரு மோனிசா
காதலிச்சேன் சீரிஸா
விட்டுட்டாளே கேர்லெஸ்ஸா
நான் ஆசப்பட்ட 
பொண்ணு பேரு மோனிசா
காதலிச்சேன் சீரிஸா
விட்டுட்டாளே கேர்லெஸ்ஸா

No comments:

Post a Comment