காதல் கசக்குதய்யா - Kaathal Kasakuthayya Lyrics

காதல் கசக்குதய்யா
வர வர காதல் கசக்குதய்யா
மனந்தான் லவ்வு வவ்வுனு அடிக்கும்
லவ்வோனு தான் துடிக்கும்
தோத்துபோனா குடிக்கும்
பயித்தியம் புடிக்கும்
காதல் கசக்குதய்யா
வர வர காதல் கசக்குதய்யா


யார் யாரோ காதலிச்சு
யார் யாரோ காதலிச்சு உருப்படல
ஒன்னும் சரிப்படல
வாழ்க்கையில என்றும் சுகப்படல
காதல படம் எடுத்தா ஓடுமுங்க
தியேட்டரில சனம் கூடுமுங்க
தேவதாஸ் அவன் பார்வதி
அம்பிகாபதி அமராவதி
கதைய கேளு முடிவ பாரு
கடைசியில் சேராம வாழாம செத்தாங்க

எனக்கிந்த காதல் கசக்குதய்யா
வர வர காதல் கசக்குதய்யா
மனந்தான் லவ்வு வவ்வுனு அடிக்கும்
லவ்வோனு தான் துடிக்கும்
தோத்துபோனா குடிக்கும்
பயித்தியம் புடிக்கும்
காதல் கசக்குதய்யா


எத்தனை சினிமா எத்தனை ட்ராமா பாத்தாச்சு
எத்தனை டூயட் எத்தனை ட்யூனு கேட்டாச்சு
இத்தனை பாத்து இத்தனை கேட்டு
புத்தியும் கெட்டு சக்தியும் கெட்டு நின்னாச்சு
கிட்டப்பா அந்த காலத்துல 
காயாத கானகத்தே
பியு சின்னப்பா வந்த காலத்துல 
காதல் கனிரசமே
மன்மத லீலை எம்கேடி காலத்துல
நடையா இது நடையா 
நம்ம நடிகர் திலகம் பாணியிலே
ஹலோ ஹலோ சுகமா
அட ஆமா நீங்க நலமா
எங்கேயும் தான் கேட்டோம்
அண்ணன் எம்ஜியார் பாட்டுகள
இந்த கால இளைஞர் செய்யும் காதலுக்கு
இளையராஜா எந்தன் பாட்டிருக்கு
வீட்டுல அத பாடுங்க
பொண்டாட்டிய லவ் பண்ணுங்க
நம்ம தகப்பன் பேச்ச 
தாயின் பேச்ச மதிக்கணும்
நீயாக பெண் தேட கூடாது

எனக்கிந்த காதல் கசக்குதய்யா
வர வர காதல் கசக்குதய்யா
மனந்தான் லவ்வு வவ்வுனு அடிக்கும்
லவ்வோனு தான் துடிக்கும்
தோத்துபோனா குடிக்கும்
பயித்தியம் புடிக்கும்
காதல் மோதல் காதல்
காதல் காதல் 
கசக்குதய்யா 
கசக்குதய்யா
கசக்குதய்யா

No comments:

Post a Comment