மௌனமான மரணம் ஒன்று - Mounamaana Maranam Ondru Lyrics

மௌனமான மரணம் ஒன்று
உயிரை கொண்டு போனதே
உயரமான கனவு இன்று
கரையில் வீழ்ந்து போனதே
திசையும் போனது திமிரும் போனது
தனிமை தீயிலே வாடினேன்
நிழலும் போனது நிஜமும் போனது
எனக்குள் எனையே தேடினேன்

கனவே கனவே கலைவதேனோ
கரங்கள் ரணமாய் கரைவதேனோ
நினைவே நினைவே அறைவதேனோ
எனது உலகம் உறைவதேனோ


கண்கள் ரெண்டும் நீரிலே
மீனை போல வாழுதே
கடவுளும் பெண் இதயமும்
இருக்குதா அட இல்லையா

ஓஹோ.. நானும் இங்கே வலியிலே
நீயும் அங்கோ சிரிப்பிலே
காற்றில் எங்கும் தேடினேன்
பேசிப் போன வார்த்தையை
இது நியாயமா
மனம் தாங்குமா
என் ஆசைகள் அது பாவமா

கனவே கனவே 
கரங்கள் ரணமாய் 
நினைவே நினைவே அறைவதேனோ
எனது உலகம் உறைவதேனோ

No comments:

Post a Comment