கண்டாரே காணாதத கண்டாரே - Kandaare kaanaathatha kandaare lyrics - Siddhar song lyrics

கண்டாரே காணாதத கண்டாரே
ஹே கண்டாரே காணாதத கண்டாரே
ஒரு வீடு ஒரு கூடு அட எதுவும் கிடையாதே
சாக்காடு பிடிமூப்பு அத எல்லாம் கடந்தாரே
கண்டாரே கைலாசம் கண்டாரே
கூத்தாடும் சடையாண்டி அத குறியா கொண்டாரே
காத்தோடு கதை பேசி சிவஞானம் கண்டாரே

பத்தோட ஓர் எட்டு... ஓ...
பத்தோட பதினெட்டு சித்தர்கள் விளையாட்டு
எத்தனை பேருக்கு வந்தாலும் தெரியாது
சித்தங்க போக்கு சிவம் போக்கு என சொன்னாரே
பித்தங்க போக மருந்தாக தினம் வந்தாரே
வட காசி தென் காசி வழிதோறும் சித்தரடி
அடி ஆத்தி முடிஞ்சாக்கா அடையாளம் கண்டுபிடி



கண்டாரே காணாதத கண்டாரே
ஹே கண்டாரே காணாதத கண்டாரே
ஒரு வீடு ஒரு கூடு அட எதுவும் கிடையாதே
சாக்காடு பிடிமூப்பு அத எல்லாம் கடந்தாரே
கண்டாரே கைலாசம் கண்டாரே
கூத்தாடும் சடையாண்டி அத குறியா கொண்டாரே
காத்தோடு கதை பேசி சிவஞானம் கண்டாரே

அவனுக்கென்ன தூங்கி விட்டான் - Avanukenna thoongi vittaan lrics

அவனுக்கென்ன தூங்கி விட்டான்
அகப்பட்டவன் நானல்லவா
ஐயிரண்டு மாதத்திலே
கைகளிலே போட்டு விட்டான்
அவனுக்கென்ன தூங்கி விட்டான்
அகப்பட்டவன் நானல்லவா
ஐயிரண்டு மாதத்திலே
கைகளிலே போட்டு விட்டான்
கைகளிலே போட்டு விட்டான்

இவனுக்கென்று எதை கொடுத்தான்
எலும்புடனே சதை கொடுத்தான்
இவனுக்கென்று எதை கொடுத்தான்
எலும்புடனே சதை கொடுத்தான்
இதயத்தையும் கொடுத்துவிட்டு
இறக்கும் வரை துடிக்க விட்டான்
இறக்கும் வரை துடிக்க விட்டான்

அவனுக்கென்ன தூங்கி விட்டான்
அகப்பட்டவன் நானல்லவா
ஐயிரண்டு மாதத்திலே
கைகளிலே போட்டு விட்டான்



யானையிடம் நன்றி வைத்தான்
காக்கையிடம் உறவு வைத்தான்
மான்களுக்கும் மானம் வைத்தான்
மனிதனுக்கு என்ன வைத்தான்
மனிதனுக்கு என்ன வைத்தான்

அவனுக்கென்ன தூங்கி விட்டான்
அகப்பட்டவன் நானல்லவா
ஐயிரண்டு மாதத்திலே
கைகளிலே போட்டு விட்டான்
கைகளிலே போட்டு விட்டான்

வானிலுள்ள தேவர்களை 
வாழ வைக்க விஷம் குடித்தான்
வானிலுள்ள தேவர்களை 
வாழ வைக்க விஷம் குடித்தான்
நாட்டிலுள்ள விஷத்தையெல்லாம்
நான் குடிக்க விட்டுவிட்டான்
நான் குடிக்க விட்டுவிட்டான்

அவனுக்கென்ன தூங்கி விட்டான்
அகப்பட்டவன் நானல்லவா
ஐயிரண்டு மாதத்திலே
கைகளிலே போட்டு விட்டான்
கைகளிலே போட்டு விட்டான்

சாதி மல்லி பூச்சரமே - Saathi malli poocharame lyrics

சாதி மல்லி பூச்சரமே
சாதி மல்லி பூச்சரமே
சங்கத் தமிழ் பாச்சரமே
சாதி மல்லி பூச்சரமே
சங்கத் தமிழ் பாச்சரமே
ஆசையின்னா ஆசையடி
அவ்வளவு ஆசையடி

என்னன்னு முன்னே வந்து
கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ
காதலில் உண்டாகும் சுகம் 
இப்போது மறப்போம்
கன்னித் தமிழ் தொண்டாற்று
அதை முன்னேற்று 
பின்பு கட்டிலில் தாலாட்டு

சாதி மல்லி பூச்சரமே
சங்கத் தமிழ் பாச்சரமே
ஆசையின்னா ஆசையடி
அவ்வளவு ஆசையடி



எனது வீடு எனது வாழ்வு
என்று வாழ்வது வாழ்க்கையா
இருக்கும் நாலு சுவருக்குள்ளே
வாழ நீ ஒரு கைதியா
தேசம் வேறல்ல தாயும் வேறல்ல
ஒன்று தான்
தாயைக் காப்பதும் நாட்டைக் காப்பதும் 
ஒன்று தான்
கடுகு போல் உன் மனம் இருக்க கூடாது
கடலை போல் விரிந்ததாய் இருக்கட்டும்
உன்னைப் போல் எல்லோரும் என எண்ணோனும்
அதில் இன்பத்தைத் தேடோனும்

சாதி மல்லி பூச்சரமே
சங்கத் தமிழ் பாச்சரமே
ஆசையின்னா ஆசையடி
அவ்வளவு ஆசையடி



உலகமெல்லாம் உண்ணும் போது
நாமும் சாப்பிட எண்ணுவோம்
உலகமெல்லாம் சிரிக்கும் போது
நாமும் புன்னகை சிந்துவோம்
யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி
பாடும் நம் தமிழ் பாட்டன் சொன்னது கண்மணி
யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி
பாடும் நம் தமிழ் பாட்டன் சொன்னது கண்மணி
படிக்க தான் பாடலா நெனச்சு பாத்தோமா
படிச்சத நெனச்சு நாம் நடக்க தான்
கேட்டுக்கோ ராசாத்தி தமிழ் நாடாச்சு
இந்த நாட்டுக்கு நாமாச்சு

சாதி மல்லி பூச்சரமே
சங்கத் தமிழ் பாச்சரமே
ஆசையின்னா ஆசையடி
அவ்வளவு ஆசையடி

என்னன்னு முன்னே வந்து
கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ
காதலில் உண்டாகும் சுகம் 
இப்போது மறப்போம்
கன்னித் தமிழ் தொண்டாற்று
அதை முன்னேற்று 
பின்பு கட்டிலில் தாலாட்டு

ஶ்ரீ ரங்க ரங்க நாதனின் பாதம் - Sri ranga ranga naathanin lyrics

ஶ்ரீ ரங்க ரங்க நாதனின் பாதம்
வந்தனம் செய்யடி
ஶ்ரீ தேவி ரங்க நாயகி நாமம்
சந்ததம் சொல்லடி
ஶ்ரீ ரங்க ரங்க நாதனின் பாதம்
வந்தனம் செய்யடி
ஶ்ரீ தேவி ரங்க நாயகி நாமம்
சந்ததம் சொல்லடி

இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி
தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி
தெய்வ பாசுரம் பாடடி

ஶ்ரீ ரங்க ரங்க நாதனின் பாதம்
வந்தனம் செய்யடி
ஶ்ரீ தேவி ரங்க நாயகி நாமம்
சந்ததம் சொல்லடி



கன்னடம் தாய் வீடு என்றிருந்தாலும்
கன்னி உன் மறுவீடு தென்னகம் ஆகும்
கங்கையில் மேலான காவிரி தீர்த்தம்
மங்கல நீராட முன் வினை தீர்க்கும்
நீர் வண்ணம் எங்கும் மேவிட
நஞ்சை புஞ்சைகள் பாரடி
ஊர் வண்ணம் என்ன கூறுவேன்
தெய்வலோகமே தானடி
வேறெங்கு சென்ற போதிலும்
இந்த இன்பங்கள் ஏதடி

ஶ்ரீ ரங்க ரங்க நாதனின் பாதம்
வந்தனம் செய்யடி
ஶ்ரீ ரங்க ரங்க நாதனின் பாதம்
வந்தனம் செய்யடி
ஶ்ரீ தேவி ரங்க நாயகி நாமம்
சந்ததம் சொல்லடி

பாட்டாலே புத்தி சொன்னார் - Paataale buthi sonnaar lyrics

பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடு பட்டேன்
அந்த பாட்டுக்கள் பல விதம் தான்
பாட்டுக்கு நான் பாடு பட்டேன்
அந்த பாட்டுக்கள் பல விதம் தான்

பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடு பட்டேன்
அந்த பாட்டுக்கள் பல விதம் தான்



காளையர்கள் காதல் கன்னியரை
கவர்ந்திட பாடல் கேட்டார்கள்
ஏழைகளும் ஏவல் அடிமைகளாய்
இருப்பதை பாடச் சொன்னார்கள்
கதவோரம் கேட்டிடும் கட்டில் பாடலின்
மெட்டு போடச் சொன்னார்கள்
தெருவோரம் சேர்ந்திட திருவாசகம்
தேவாரம் கேட்டார்கள்
நான் படும் பாடுகள் அந்த ஏடுகள்
அதில் எழுதினாலும் முடிந்திடாது

பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடு பட்டேன்
அந்த பாட்டுக்கள் பல விதம் தான்



பூஜையில் குத்து விளக்கை ஏற்ற வைத்து
அது தான் நல்லதென்றார்கள்
படத்தில் முதல் பாடலை பாட வைத்து
அது நல்ல ராசி என்றார்கள்
எத்தனையோ பாடுகளை அதை பாடல்களாய் 
நான் வித்தேன் இது வரையில்
அத்தனையும் நல்லவையா அவை கெட்டவையா
என அறியேன் உண்மையிலே
எனக்கு தான் தலைவர்கள் என் ரசிகர்கள்
அவர் விரும்பும் வரையில் விருந்து படைப்பேன்

பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடு பட்டேன்
அந்த பாட்டுக்கள் பல விதம் தான்

பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடு பட்டேன்
அந்த பாட்டுக்கள் பல விதம் தான்

மெட்டு தேடி தவிக்குது ஒரு பாட்டு - Mettu thedi thavikuthu oru paatu lyrics

மெட்டு தேடி தவிக்குது ஒரு பாட்டு
அந்த பாட்டுக்குள்ளே துடிக்குது ஒரு மெட்டு
மெட்டு தேடி தவிக்குது ஒரு பாட்டு
அந்த பாட்டுக்குள்ளே துடிக்குது ஒரு மெட்டு
அத கண்ணதாசன் கண்டு சொன்னா ரசிக்காதா
இல்ல விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா
மெஸ்ஸூ விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா

அத கண்ணதாசன் கண்டு சொன்னா ரசிக்காதா
மெஸ்ஸூ விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா
அத கண்ணதாசன் கண்டு சொன்னா ரசிக்காதா
மெஸ்ஸூ விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா



தங்கள் காதலை வெளியே சொல்ல
நெஞ்சில் தைரியம் இல்லை பலருக்கு
நீ இருட்டில் நின்று கண் அடித்தால் ஆஹா
நீ இருட்டில் நின்று கண் அடித்தால்
அது எப்படி தெரியும் அவளுக்கு
வண்டு வந்து சொல்லும் வரைக்கும்
தன் வயசு தெரியாது மலருக்கு
வண்டு வந்து சொல்லும் வரைக்கும்
தன் வயசு தெரியாது மலருக்கு
நீ உந்தன் நெஞ்சை தேங்காய் போல
உடைத்து காட்டப்பா அவளுக்கு
ஆஹா மெல்ல மெல்ல மிச்சம் எல்லாம்
சொல்லித் தாறேன் டா
நான் மெஸ்ஸூ கிஸ்ஸூ 
ரெண்டும் கண்ட விஸ்வநாதன் டா
நான் மெஸ்ஸூ கிஸ்ஸூ 
ரெண்டும் கண்ட விஸ்வநாதன் டா

அத கண்ணதாசன் கண்டு சொன்னா ரசிக்காதா
மெஸ்ஸூ விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா
அத கண்ணதாசன் கண்டு சொன்னா ரசிக்காதா
மெஸ்ஸூ விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா



கனவில் மட்டும் கட்டி அணைத்தால்
காதல் வருமா கன்னிக்கு
கவி கண்ணதாசன் போல் தண்ணி அடித்தால்
கவிதை வருமா கழுதைக்கு
கனவில் மட்டும் கட்டி அணைத்தால்
காதல் வருமா கன்னிக்கு
கவி கண்ணதாசன் போல் தண்ணி அடித்தால்
கவிதை வருமா கழுதைக்கு
விரும்பிய காதலி கிடைக்காவிட்டால் 
மீசை வளர்த்ததுக்கு என்னத்துக்கு
சம்பிரதாயம் குறுக்கே வந்தால்
சாய்த்து போடப்பா அடுப்புக்கு
ஆஹா மெல்ல மெல்ல மிச்சம் எல்லாம்
சொல்லித் தாறேன் டா
நான் மெஸ்ஸூ கிஸ்ஸூ 
ரெண்டும் கண்ட விஸ்வநாதன் டா
நான் மெஸ்ஸூ கிஸ்ஸூ 
ரெண்டும் கண்ட விஸ்வநாதன் டா

மெட்டு தேடி தவிக்குது ஒரு பாட்டு
அந்த பாட்டுக்குள்ளே துடிக்குது ஒரு மெட்டு
அத கண்ணதாசன் கண்டு சொன்னா ரசிக்காதா
இல்ல விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா
மெஸ்ஸூ விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா

அத கண்ணதாசன் கண்டு சொன்னா ரசிக்காதா
மெஸ்ஸூ விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா
அத கண்ணதாசன் கண்டு சொன்னா ரசிக்காதா
மெஸ்ஸூ விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா

என்றும் புதியது பாடலென்றும் புதியது - Endrum puthiyathu paadal endrum puthiyathu song lyrics

என்றும் புதியது 
பாடலென்றும் புதியது
பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது
முருகா உன்னைப் பாடும் 
பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது
முருகா உன்னைப் பாடும் 
பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது

அருள் நிறைந்த புலவர் நெஞ்சில்
அமுதம் என்னும் தமிழ் கொடுத்த
பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது
அருள் நிறைந்த புலவர் நெஞ்சில்
அமுதம் என்னும் தமிழ் கொடுத்த
பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது



முருகன் என்ற பெயரில் வந்த அழகே
என்றும் புதியது 
முருகன் என்ற பெயரில் வந்த அழகே
என்றும் புதியது 
முறுவல் காட்டும் குமரன் கொண்ட இளமை 
என்றும் புதியது 
முறுவல் காட்டும் குமரன் கொண்ட இளமை 
என்றும் புதியது 

உன்னைப் பெற்ற அன்னையர்க்கு
உனது லீலை புதியது
உன்னைப் பெற்ற அன்னையர்க்கு
உனது லீலை புதியது
உனது தந்தை இறைவனுக்கோ 
வேலும் மயிலும் 
உனது தந்தை இறைவனுக்கோ 
வேலும் மயிலும் புதியது
முருகா உன்னைப் பாடும் 
பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது



திங்களுக்கும் ஞாயிறுக்கும்
கந்தன் மேனி புதியது
திங்களுக்கும் ஞாயிறுக்கும்
கந்தன் மேனி புதியது
சேர்ந்தவர்க்கு வழங்கும்
கந்தன் கருணை புதியது
சேர்ந்தவர்க்கு வழங்கும்
கந்தன் கருணை புதியது
அறிவில் அரியது
அருளில் பெரியது
அறிவில் அரியது
அருளில் பெரியது
அள்ளி அள்ளி உண்ண உண்ண
உனது தமிழ் இனியது
அள்ளி அள்ளி உண்ண உண்ண
உனது தமிழ் இனியது

முதலில் முடிவது முடிவில் முதலது
முதலில் முடிவது முடிவில் முதலது
மூன்று காலம் பேர்க்கு
ஆறுமுகம் புதியது
முருகா உன்னைப் பாடும் 
பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது