பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடு பட்டேன்
அந்த பாட்டுக்கள் பல விதம் தான்
பாட்டுக்கு நான் பாடு பட்டேன்
அந்த பாட்டுக்கள் பல விதம் தான்
பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடு பட்டேன்
அந்த பாட்டுக்கள் பல விதம் தான்
காளையர்கள் காதல் கன்னியரை
கவர்ந்திட பாடல் கேட்டார்கள்
ஏழைகளும் ஏவல் அடிமைகளாய்
இருப்பதை பாடச் சொன்னார்கள்
கதவோரம் கேட்டிடும் கட்டில் பாடலின்
மெட்டு போடச் சொன்னார்கள்
தெருவோரம் சேர்ந்திட திருவாசகம்
தேவாரம் கேட்டார்கள்
நான் படும் பாடுகள் அந்த ஏடுகள்
அதில் எழுதினாலும் முடிந்திடாது
பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடு பட்டேன்
அந்த பாட்டுக்கள் பல விதம் தான்
பூஜையில் குத்து விளக்கை ஏற்ற வைத்து
அது தான் நல்லதென்றார்கள்
படத்தில் முதல் பாடலை பாட வைத்து
அது நல்ல ராசி என்றார்கள்
எத்தனையோ பாடுகளை அதை பாடல்களாய்
நான் வித்தேன் இது வரையில்
அத்தனையும் நல்லவையா அவை கெட்டவையா
என அறியேன் உண்மையிலே
எனக்கு தான் தலைவர்கள் என் ரசிகர்கள்
அவர் விரும்பும் வரையில் விருந்து படைப்பேன்
பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடு பட்டேன்
அந்த பாட்டுக்கள் பல விதம் தான்
பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடு பட்டேன்
அந்த பாட்டுக்கள் பல விதம் தான்
No comments:
Post a Comment