பாடலென்றும் புதியது
பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது
முருகா உன்னைப் பாடும்
பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது
முருகா உன்னைப் பாடும்
பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது
அருள் நிறைந்த புலவர் நெஞ்சில்
அமுதம் என்னும் தமிழ் கொடுத்த
பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது
அருள் நிறைந்த புலவர் நெஞ்சில்
அமுதம் என்னும் தமிழ் கொடுத்த
பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது
முருகன் என்ற பெயரில் வந்த அழகே
என்றும் புதியது
முருகன் என்ற பெயரில் வந்த அழகே
என்றும் புதியது
முறுவல் காட்டும் குமரன் கொண்ட இளமை
என்றும் புதியது
முறுவல் காட்டும் குமரன் கொண்ட இளமை
என்றும் புதியது
உன்னைப் பெற்ற அன்னையர்க்கு
உனது லீலை புதியது
உன்னைப் பெற்ற அன்னையர்க்கு
உனது லீலை புதியது
உனது தந்தை இறைவனுக்கோ
வேலும் மயிலும்
உனது தந்தை இறைவனுக்கோ
வேலும் மயிலும் புதியது
முருகா உன்னைப் பாடும்
பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது
திங்களுக்கும் ஞாயிறுக்கும்
கந்தன் மேனி புதியது
திங்களுக்கும் ஞாயிறுக்கும்
கந்தன் மேனி புதியது
சேர்ந்தவர்க்கு வழங்கும்
கந்தன் கருணை புதியது
சேர்ந்தவர்க்கு வழங்கும்
கந்தன் கருணை புதியது
அறிவில் அரியது
அருளில் பெரியது
அறிவில் அரியது
அருளில் பெரியது
அள்ளி அள்ளி உண்ண உண்ண
உனது தமிழ் இனியது
அள்ளி அள்ளி உண்ண உண்ண
உனது தமிழ் இனியது
முதலில் முடிவது முடிவில் முதலது
முதலில் முடிவது முடிவில் முதலது
மூன்று காலம் பேர்க்கு
ஆறுமுகம் புதியது
முருகா உன்னைப் பாடும்
பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது
அற்புதமான பாடல். அடுத்தடுத்து சொற்கள் வந்து நிற்பன போலும். என்ன தவம் செய்தோமோ இப்படி ஒரு கவிஞரை தமிழ் நாடு பெற. 🙏🏻🙏🏻🙏🏻
ReplyDeleteமுருவல் காட்டும் காட்டும்.. என்பது புருவல் என்று தவறு இருக்கிறது.
ReplyDeleteநன்றி. திருத்தப் பட்டது.
Delete