வந்தனம் செய்யடி
ஶ்ரீ தேவி ரங்க நாயகி நாமம்
சந்ததம் சொல்லடி
ஶ்ரீ ரங்க ரங்க நாதனின் பாதம்
வந்தனம் செய்யடி
ஶ்ரீ தேவி ரங்க நாயகி நாமம்
சந்ததம் சொல்லடி
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி
தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி
தெய்வ பாசுரம் பாடடி
ஶ்ரீ ரங்க ரங்க நாதனின் பாதம்
வந்தனம் செய்யடி
ஶ்ரீ தேவி ரங்க நாயகி நாமம்
சந்ததம் சொல்லடி
கன்னடம் தாய் வீடு என்றிருந்தாலும்
கன்னி உன் மறுவீடு தென்னகம் ஆகும்
கங்கையில் மேலான காவிரி தீர்த்தம்
மங்கல நீராட முன் வினை தீர்க்கும்
நீர் வண்ணம் எங்கும் மேவிட
நஞ்சை புஞ்சைகள் பாரடி
ஊர் வண்ணம் என்ன கூறுவேன்
தெய்வலோகமே தானடி
வேறெங்கு சென்ற போதிலும்
இந்த இன்பங்கள் ஏதடி
ஶ்ரீ ரங்க ரங்க நாதனின் பாதம்
வந்தனம் செய்யடி
ஶ்ரீ ரங்க ரங்க நாதனின் பாதம்
வந்தனம் செய்யடி
ஶ்ரீ தேவி ரங்க நாயகி நாமம்
சந்ததம் சொல்லடி
No comments:
Post a Comment