ஜனகணமன என ஜதி - Janagana mana ena jathi Lyrics

தன்னன் னன்னன் னன்னன் னன்ன தானா னானா..

தன்னன் னன்னன் னன்னன் னன்ன தானா னானா..

தானா தரனா.

தானா.. தானா னனனா..

தன்னன் னன னானா...

தன்னன் னன னானா...

தன்னன்னா.. னன்னன்னா.. னன ரரரரனானா..

ஜனகணமன என ஜதி சொல்லும் நேரம்
ஜனனமும் மரணமும் சந்திக்கும் காலம்
முடியும் நிகழ்ச்சி ஆஹா..
மனதில் மகிழ்ச்சி..
துள்ளி எழ வேண்டும் ஏன் அழ வேண்டும்?
இந்த பூமிக்கு நன்றி சொல்லி புறப்படவேண்டும்.. ஆ.. ஆ..

ஜனகணமன என ஜதி சொல்லும் நேரம்
ஜனனமும் மரணமும் சந்திக்கும் காலம்


ஜனிக்கும் உயிர்கள் சாகாமல் போனால்
தாங்காது தாங்காது பூலோகம் என்னாவது?
சுழலும் பூமி சுற்றாது சாமி
சுவாசிக்க முடியாது அப்போது என்செய்வது?

காலம் வந்தால் எதுவும் இங்கு நடக்கும்
நேரம் வந்தால் பறவை ரெக்கை துடிக்கும்

கிழக்கு வானம் அழைக்கும் நேரம்
கிளிகள் கூட்டம் பறக்கட்டும்
கீதங்கள் இசைக்கட்டும்
திசை எங்கே.. அதோ அங்கே.. அங்கே..

இந்த தரை வாழ்க்கை வெறும் சிறை வாழ்க்கை
இந்த சிறை பட்ட சிலந்திக்கு விடுதலை வேட்கை

ஜனகணமன என ஜதி சொல்லும் நேரம்
ஜனனமும் மரணமும் சந்திக்கும் காலம்


மழையின் துளிகள் மண்ணோடு வீழ்ந்தால்
மழை கொண்ட சாவென்று வான்மேகம் தான் சொல்லுமா?
 
நகரும் நதிகள் கடலோடு சேர்ந்தால்
நதி கொண்ட சாவென்று கடல் என்ன தடை சொல்லுமா?

சங்கமிக்க இயற்கை கற்று தந்தது
சங்கமத்தால் உலகம் இன்னும் உள்ளது
பள்ளத்தில் சேரும் வெள்ளத்தைப் போலே
இயற்கையோடு கலக்கலாம்..
 
ஜகத்தையே ஜெயிக்கலாம்
திசை எங்கே.. அதோ அங்கே.. அங்கே...

இதில் தலை எங்கே அட வால் எங்கே?
இந்த கேள்விக்கு விடை சொல்லும் ஞானிகள் எங்கே?


ஜனகணமன என ஜதி சொல்லும் நேரம்
ஜனனமும் மரணமும் சந்திக்கும் காலம்
முடியும் நிகழ்ச்சி ஆஹா...
மனதில் மகிழ்ச்சி..
துள்ளி எழ வேண்டும் ஏன் அழ வேண்டும்?
இந்த பூமிக்கு நன்றி சொல்லி புறப்படவேண்டும்.. ஆ.. ஆ..

ஜனகணமன என ஜதி சொல்லும் நேரம்
ஜனனமும் மரணமும் சந்திக்கும் காலம்

நன்றி: வைரமுத்து

மச்சான பாத்தீங்களா - Machaana paatheengalaa Lyrics

லலீ லாலீ லாலோ.. ஓ.. ஓ...
லலீ லாலீ லாலோ.. ஓ.. ஓ...
லலீ லாலீ லாலோ.. ஓ.. ஓ...ஓ.. ஓ...

என் மச்சான... மச்சான...

மச்சான பாத்தீங்களா?.. மலவாழ தோப்புக்குள்ளே...
மச்சான பாத்தீங்களா?.. மலவாழ தோப்புக்குள்ளே...
குயிலக்கா கொஞ்சம் நீ பாத்து சொல்லு
வந்தாரா காணலியே அவர் வந்தாரா காணலியே


வெள்ளிச்சரம் புன்னகையில் அள்ளி வச்சேன் காணலியே
நான் அள்ளி வச்சேன் காணலியே..
ஊர் கோல மேகங்களே நீங்க ஒரு நாழி நில்லுங்களே
மயிலாடும் காட்டில் தனியாக அவர பாத்தாக்கா சொல்லுங்களே
என் ஏக்கத்த சொல்லுங்களே

மச்சான பாத்தீங்களா?.. மலவாழ தோப்புக்குள்ளே...

பச்சப்புள்ளை போல் அவர் பாத்து நிக்க இச்சைக்கொடியாட்டம் நான் பாத்து சொக்க
பச்சப்புள்ளை போல் அவர் பாத்து நிக்க இச்சைக்கொடியாட்டம் நான் பாத்து சொக்க
அச்சாரம் தந்து முத்தாரம் சூட்ட கொத்தோடு என்ன நெஞ்சோடு அள்ள
நெஞ்சோடு அள்ள....
நெஞ்சோடு அள்ள....

கஸ்தூரி கலைமான்களே அவர கண்டாக்கா சொல்லுங்களே
ரோஜாக்கள் ஆடும் தோட்டத்தில் அவர பாத்தாக்கா சொல்லுங்களே
என் ஏக்கத்த சொல்லுங்களே

மச்சான பாத்தீங்களா?.. மலவாழ தோப்புக்குள்ளே...


கல்யாணம் பேசி கண்டாங்கி சேல தந்தாக்கா என்ன மாட்டேன்னா சொல்வேன்?
கல்யாணம் பேசி கண்டாங்கி சேல தந்தாக்கா என்ன மாட்டேன்னா சொல்வேன்?
புதுமஞ்சள் பூசி பொன் மேடை இட்டு மன்னாதி மன்னன் மாப்பிள்ளையாக
மாப்பிள்ளையாக...
மாப்பிள்ளையாக...

தலவாழ இலை போடுங்க ஊர விருந்துக்கு வரச் சொல்லுங்க
தலவாழ இலை போடுங்க ஊர விருந்துக்கு வரச் சொல்லுங்க
பூப்போட்ட மஞ்சம் ஆடட்டும் கொஞ்சம் மனசார வாழ்த்துங்களேன்
எங்க குலம் வாழ வாழ்த்துங்களேன்...

வாடி பொட்டபுள்ள வெளியே - Vaadi potta pulla veliye Lyrics

வாடி பொட்டபுள்ள வெளியே.. என் வாலிபத்த நோகடிச்ச கிளியே..
வாடி பொட்டபுள்ள வெளியே.. என் வாலிபத்த நோகடிச்ச கிளியே..
நீயா ஒன்னு தாறியா.. இல்ல மோதி பாக்க போறியா...
என்ன மொத மொதல் ராத்திரியில் மூக்கறுக்க வந்தவளே...

வாடி பொட்டபுள்ள வெளியே.. என் வாலிபத்த நோகடிச்ச கிளியே..
வாடி பொட்டபுள்ள வெளியே.. என் வாலிபத்த நோகடிச்ச கிளியே..


மூணு முடிச்சி போட்ட பின்னாலே பொண்டாட்டி மூடக்கூடாது
அடி ஓடக்கூடாது முக்காடு போடக்கூடாது
புரியுதாடி.....
வெளக்க அணைச்சு முடிச்ச பின்னாலே நெறத்த பாக்க கூடாது
கட்சி மாறக்கூடாது படிப்பையும் கேட்க கூடாது
பூனைக்கு தான் பால் குடுத்த ராத்திரி அந்த பூனை தானா ஓம் புருஷன் சுந்தரி
மொத ராத்திரி முடிஞ்சு வந்து எல்லாந் தண்ணீரில் குளிச்சாங்கேடி...
மொத ராத்திரி முடிஞ்சு வந்து நான் கண்ணீரில் குளிச்சேனடி...

வாடி பொட்டபுள்ள வெளியே.. என் வாலிபத்த நோகடிச்ச கிளியே..
வாடி பொட்டபுள்ள வெளியே.. என் வாலிபத்த நோகடிச்ச கிளியே..


தண்ணி மேல சத்தியம் தறேன் தொடாம ஒன்ன விடமாட்டேன்
இனி கட்டியணைக்காம ஆத்தாடி கட்டுப்படமாட்டேன்
ப்ராமிஸ்டி ஏய்....
பத்தாம் மாசம் பிள்ள தராம சும்மா நான் படுத்திர மாட்டேன் நான் பதுங்கிட மாட்டேன்
அம்மாடி பயப்படமாட்டேன்
ஆளக்கண்டு கோழயின்னா நெனச்ச.. நான் ஏழையின்னா ஓன் கதவ அடைச்ச
அரபாட்டில் உள்ள போச்சு நான் துரியோதனன் ஆனேனடி
ஒரு பாட்டில் உள்ள போனா நான் துச்சாதனன் ஆவேனடி

வாடி பொட்டபுள்ள வெளியே.. என் வாலிபத்த நோகடிச்ச கிளியே..
வாடி பொட்டபுள்ள வெளியே.. என் வாலிபத்த நோகடிச்ச கிளியே..
நீயா ஒன்னு தாறியா.. இல்ல மோதி பாக்க போறியா...
என்ன மொத மொதல் ராத்திரியில் மூக்கறுக்க வந்தவளே...

வாடி பொட்டபுள்ள வெளியே.. என் வாலிபத்த நோகடிச்ச கிளியே.. அடியே...
வாடி பொட்டபுள்ள வெளியே.. என் வாலிபத்த நோகடிச்ச கிளியே..

கத கேளு கத கேளு - Katha kelu katha kelu Lyrics

ஆ... கத கேளு கத கேளு... நெஜமான கத கேளு
சுவையோடு சுகமாக உருவான கத கேளு
ஆ.. மைக்கேல் மதன காம ராஜன் கதய நல்லா கேளு...
அச்சடிச்சு வச்சதுபோல் நாலு பேர பாரு...

மைக்கேல் மதன காம ராஜன் கதய நல்லா கேளு...
அச்சடிச்சு வச்சதுபோல் நாலு பேர பாரு...

கத கேளு கத கேளு... நெஜமான கத கேளு
சுவையோடு சுகமாக உருவான கத கேளு


சீமானின் காதலுக்கு ஆளான பெண்ணொருத்தி
கல்யாணம் ஆகும் முன்னே தன்னையே தந்தாள்
சீமானின் சொத்துக்கெல்லாம் வாரிசு இல்லையென்று
பங்கிற்கு காத்திருந்த தம்பிக்கு அதிர்ச்சி
அண்ணனின் உறவை அழித்திடத் துணிந்தான்
சகுனியைப் போல் ஒரு சதி செய்தான்
உண்மையை அறிந்த கன்னியும் உடனே
கருவினை காத்திடத் துணிந்தாளே

வஞ்சகர் கண்களில் மண்ணையும் தூவி
விரைந்தவள் பறந்தாள் அபயம் தேடி
ஆதரவின்றி அழைந்தே திரிந்தே கொடிபோல் துவண்டாள்
தனியே கிடந்தாள்
ஒரு நல்ல மகராசி வந்தாளே சமயத்தில்
உதவிக்கு தாய் போல் துணையாய் நின்றாள்

கத கேளு கத கேளு... நெஜமான கத கேளு
சுவையோடு சுகமாக உருவான கத கேளு


பிள்ளையே இல்லையென்று ஏங்குவோர் இங்கிருக்க
பிள்ளையோ பிள்ளையென்று பிறந்தது நான்கு
ஒன்றுக்கு நாலு என்று சொத்துக்கு பங்கு கொள்ள
வாரிசு கண்ட தம்பி பலியிட துணிந்தான்
சொல்லிட நெஞ்சமும் பதறுது இங்கே
பாலகர் நிலை இனி என்னாகும்....
பணத்துக்கு விழுந்த பாதகன் செயலால்
அன்னையின் கதையும் என்னாகும்....

மரணத்தின் கொடுமை அறியாக் குழந்தையின்
மலர்போல் சிரிப்பில் அவன் மனம் மாற
இறைவனின் அருளால் நல்லது நடக்க
பிரிந்தன குழந்தைகள் திசைக்கென ஒன்றாய்
தந்தைக்கு தெரியாது தன் பிள்ளை தன் கையில்
விதி போடும் கோலங்கள் யாருக்கும் புரியாது...

கத கேளு கத கேளு... நெஜமான கத கேளு
சுவையோடு சுகமாக உருவான கத கேளு
மைக்கேல் மதன காம ராஜன் கதய நல்லா கேளு...
அச்சடிச்சு வச்சதுபோல் நாலு பேர பாரு...
மைக்கேல் மதன காம ராஜன் கதய நல்லா கேளு...
அச்சடிச்சு வச்சதுபோல் நாலு பேர பாரு...

கத கேளு கத கேளு... நெஜமான கத கேளு
சுவையோடு சுகமாக உருவான கத கேளு

ஒரு மடமாதும் ஒருவனுமாகி - Oru madamaathum oruvanumaagi Lyrics

ஒரு மடமாதும் ஒருவனுமாகி 
இன்பசுகம் தரும் அன்பு பொருந்தி
உணர்வு கலங்கி ஒழுகிய விந்து 
ஊருசுரோநிதமீது கலந்து
பனியிலோர் பாதி சிறு துளி மாது 
பண்டியில் வந்து புகுந்து திரண்டு
பதும அரும்பு கமடம் இதென்று 
பார்வை மெய் வாய் செவி கால்கைகள் என்ற
உருவமுமாகி உயிர்வளர்மாதம் 
ஒன்பதும் ஒன்றும் நிறைந்து மடந்தை
உதரம் அகன்று புவியில் விழுந்து 
யோகமும் வாரமும் நாளும் அறிந்து
ஒளிநடை ஊறல் இதழ்மடவாரும் 
உவந்து முகந்திட வந்து தவழ்ந்து
மடியில் இருந்து மழலை மொழிந்து 
வாய் இரு போவென நாமம் விளம்ப
உடைமணியாடை அரைவடமாட 
உண்பவர் திண்பவர் தங்களோடுண்டு
தெருவில் இருந்து புழுதியடைந்து 
தேடிய பாலரொடோடி நடந்து
அஞ்சு வயதாகி விளையாடியே.......


உயர்தரு ஞான குரு உபதேசம் 
முத்தமிழின் கலையும் கரைகண்டு
வளர்பிறை என்று பலரும் விளம்ப 
வாழ்பதினாறு பிராயமும் வந்து
மதனஸ்வரூபன் இவன் என மோக 
மங்கையர் கண்டு மருண்டு திரண்டு
வரிவிழி கொண்டு சுழியை அறிந்து 
மாமயில் போலவர் போவது கண்டு
மனது பொறாமல் அவர் பிறகோடி 
தேடிய மாமுதல் சேர வழங்கி
வளமையும் மாறி இளமையும் மாறி 
வன்பல் விழுந்திரு கண்கள் இருண்டு
வயது முதிர்ந்து நரை திரை வந்து 
வாதவிரோத குரோதமடைந்து
செங்கையில் ஓர் தடியும் ஆகியே......


வருவது போவது ஒரு முதுகூனும் 
மந்தியெனும்படி குந்தி நடந்து
மதியும் அழிந்து செவிதிமிர் வந்து 
வாயறியாமல் விடாமல் மொழிந்து
கலகலவென்று மலஜலம் வந்து 
கால்வழிமேல்வழி சார நடந்து
கடன்முறை பேசும் என உரை நாவும் 
உறங்கி விழுந்து கைகொண்டு மொழிந்து
கடைவழிகஞ்சி ஒழுகிட வந்து 
பூதமும் நாலு சுவாசமும் நின்று
நெஞ்சு தடுமாறி வரும் நேரமே....


வளைபிறை போல எகிறுமுறோ 
அவரும் சடையும் சிறுகுஞ்சி உவிஞ்ச
மனதும் இருண்ட வடிவும் இழந்த 
மாமலை போல் எமதூதர்கள் வந்து
வலைக்கொடு வீசி உயிர்க்கொடு போக 
மைந்தரும் வந்து குனிந்தழ நொந்து
மடியில் விழுந்து மனைவி புலம்ப 
மாழ்கினரே இவர் காலம் அறிந்து
வரிசை கெடாமல் எடும் என ஓடி 
வந்திழ மைந்தர் குனிந்து சுமந்து
கடுகி நடந்து சுடலை அடைந்து 
மானிட வாழ்வென வாழ்வென நொந்து
விறகிட மூடி அழல் கொடு போட 
வெந்து விழுந்து முறிந்தினினங்கள்
உருகி எலும்பு கருகி அடங்கி 
ஓர்பிடி நீரும் இலாத உடம்பை
நம்பும் அடியேனை இனி ஆழுமே....

காதல் சிறகை காற்றினில் - Kaathal siragai kaatrinil Lyrics

தாவி வரும் மேகமே என் தாய்நாடு செல்வாயோ?...
ஊர் உலகம் போற்ற வரும் என் உத்தமனை காண்பாயோ?... ஓ...ஓ..
இன்று மணமுடித்த ஏந்திழை போல் நானிங்கே
சொந்தம் கொண்டாடுவதை சொல்லிவிடமாட்டாயோ?... ஓ...ஓ..

காதல் சிறகை காற்றினில் விரித்து வானவீதியில் பறக்கவா?...
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில் கண்ணீர்க்கடலில் குளிக்கவா?...
கண்ணீர்க்கடலில் குளிக்கவா?...

காதல் சிறகை காற்றினில் விரித்து வானவீதியில் பறக்கவா?...
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில் கண்ணீர்க்கடலில் குளிக்கவா?...
கண்ணீர்க்கடலில் குளிக்கவா?...


எண்ணங்களாலே பாலம் அமைத்து இரவும் பகலும் நடக்கவா?...
எண்ணங்களாலே பாலம் அமைத்து இரவும் பகலும் நடக்கவா?...
இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி
இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி
இரு கை கொண்டு வணங்கவா?...
இரு கை கொண்டு வணங்கவா...

காதல் சிறகை காற்றினில் விரித்து வானவீதியில் பறக்கவா?...
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில் கண்ணீர்க்கடலில் குளிக்கவா?...
கண்ணீர்க்கடலில் குளிக்கவா?...


முதல் நாள் காணும் புதுமணப் பெண் போல் முகத்தை மறைத்தல் வேண்டுமா?..
முதல் நாள் காணும் புதுமணப் பெண் போல் முகத்தை மறைத்தல் வேண்டுமா?..
முறையுடன் மணந்த கணவர் முன்னாலே
முறையுடன் மணந்த கணவர் முன்னாலே
பரம்பரை நாணம் தோன்றுமா?...
பரம்பரை நாணம் தோன்றுமா?...

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேச மறந்து சிலையாய் இருந்தால்
பேச மறந்து சிலையாய் இருந்தால்
அது தான் தெய்வத்தின் சந்நதி
அது தான் காதல் சந்நதி...

ஆ... ஆ.. ஆ...

காதல் சிறகை காற்றினில் விரித்து வானவீதியில் பறக்கவா?...
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில் கண்ணீர்க்கடலில் குளிக்கவா?...
கண்ணீர்க்கடலில் குளிக்கவா?...

ஆ... ஆ.. ஆ... 

என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட - Ennai thottu allikonda Lyrics

ஆ.. ஆ.. ஆ.. ஆ...

என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி
எனக்குச்சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத்தொட்டு பின்னிக்கொண்ட கண்ணன் ஊரும் என்னடி
எனக்குச்சொல்லடி விஷயம் என்னடி
அன்பே ஓடி வா... அன்பால் கூடவா... ஓ.. பைங்கிளி
நிதமும் என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி
எனக்குச்சொல்லடி விஷயம் என்னடி


சொந்தம் பந்தம் உன்னைத் தாலாட்டும் தருணம்
சொர்க்கம் சொர்க்கம் என்னைச்சீராட்ட வரணும்
பொன்னி பொன்னி நதி நீராட வரணும்
என்னை என்னை நிதம் நீ ஆள வரணும்

பெண் மனசு காணாத இந்திர ஜாலத்தை அள்ளித்தர தானாக வந்துவிடு
என்னுயிரைத் தீயாக்கும் மன்மத பாணத்தை கண்டு கொஞ்சம் காப்பாற்றித்தந்துவிடு
அன்பே ஓடி வா... அன்பால் கூடவா...  
அன்பே ஓடி வா... அன்பால் கூடவா... ஓ.. பைங்கிளி


நிதமும் என்னைத் தொட்டு....

என்னைத் தொட்டு.... நெஞ்சைத் தொட்டு

என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி
எனக்குச்சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத்தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் என்னடி
எனக்குச்சொல்லடி விஷயம் என்னடி


ஆ... ஆ.. ஆ....
மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே
ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில் தானாடும் நிலவே
மின்னல் மின்னல் கொடி போலாடும் அழகே
கன்னல் கன்னல் மொழி நீ பாடு குயிலே

கட்டுக்குள்ள நிற்காது திரிந்த காளையை கட்டிவிட்டு கண்சிரிக்கும் சுந்தரியே
அக்கரையும் இக்கரையும் கடந்த வெள்ளத்தை கட்டி அணை கட்டி வைத்த பைங்கிளியே
என்னில் நீயடி... உன்னில் நானடி...
என்னில் நீயடி... உன்னில் நானடி... ஓ.. பைங்கிளி

நிதமும் என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி
எனக்குச்சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத்தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் என்னடி
எனக்குச்சொல்லடி விஷயம் என்னடி
அன்பே ஓடி வா... அன்பால் கூடவா... ஓ.. பைங்கிளி
நிதமும் என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி
எனக்குச்சொல்லடி விஷயம் என்னடி

வா கலாபமயிலே - Vaa kalaaba mayile Lyrics

வா கலாபமயிலே... வா கலாபமயிலே...
ஓடி நீ வா கலாபமயிலே...
ஓடி நீ வா கலாபமயிலே...

வந்தே கனியமுதம் தந்தே மகிழ்ந்திடவே வா..
வந்தே கனியமுதம் தந்தே மகிழ்ந்திடவே
வா கலாபமயிலே..
ஓடி நீ வா கலாபமயிலே...


வாழ்நாளில் இனி நாம்.... வாழ்நாளில் இனி நாம் 
வளம் பெறவே வாழ்நாளில் இனி நாம் 
வளம் பெறவே வண்ணத்தமிழ்க்கலையே துள்ளி துள்ளி விளையாட வா...
வண்ணத்தமிழ்க்கலையே துள்ளி துள்ளி விளையாட வா...

நீ வா.. 
கண்ணே வா கலாபமயிலே...
ஓடி நீ வா கலாபமயிலே..

ஆலையின் கரும்பானேன் ஆழியின் துரும்பானேன்
ஆலையின் கரும்பானேன் ஆழியின் துரும்பானேன்
காலமெல்லாம் உந்தன் காதலில் மெலிந்தேனே
காலமெல்லாம் உந்தன் காதலில் மெலிந்தேன்
விண்ணோடு விளையாடும் வளர்மதியே 
விண்ணோடு விளையாடும் வளர்மதியே
எந்தன் கண்ணோடு கனிந்தாடும் கலைநிதியே 
கண்ணோடு கனிந்தாடும் கலைநிதியே
எந்நாளும் மறவேனே எழில் ரதியே...
எந்நாளும் மறவேனே எழில் ரதியே
மின்னலிடைக்கொடியே அன்ன நடை அழகோடு வா...
மின்னலிடைக்கொடியே அன்ன நடை அழகோடு வாராயோ
என்னைப் பாராயோ கலி தீராயோ
கண்ணே வாராயோ...
எந்தன் ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா
ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா
ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா
ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா
பக்தா... ஆரியமாலா... 

சீர்மேவும் குருபதம் சிந்தையொடு - Seermevum gurupatham sinthaiyodu Lyrics

NSK:
சீர்மேவும் குருபதம் சிந்தையொடு வாய்க்கினும்
சிரமீது வைத்து போற்றி
ஜெகமெலாம் மெச்ச ஜெயக்கொடி பறக்கவிடும் வீரப்ரதாமன் நானே...

சங்கத்துப்புலவர் பலர் தங்கத்தோட பொற்பதக்கம் வங்கத்துப் பொன்னாடை பரிசளித்தார்
எனக்கிங்கில்லை ஈடெனச் சொல்லிக் களித்தார்
இந்த சிங்கத்து முன்னே ஓடி பங்கப்பட்ட பாராதீரர் சீரெடுத்துப் பாடிவாரேன் நேரே
அதற்கு ஓரெழுத்துப் பதில் சொல்லிப்பாரேன்....

MGR:
யானையைப் பிடித்து.....
யானையைப் பிடித்து ஒரு பானைக்குள் அடைத்து வைக்க ஆத்திரப்படுபவர் போல் அல்லவா
யானையைப் பிடித்து ஒரு பானைக்குள் அடைத்து வைக்க ஆத்திரப்படுபவர் போல் அல்லவா
உமதாரம்பக்கவி சொல்லுதே புலவா
வீட்டுப் பூனைக்குட்டி காட்டிலோடி புலியைப் பிடித்து தின்ன புறப்பட்ட கதை போலே அல்லவா
தற்புகழ்ச்சி பாடுகிறாயே புலவா

NSK:
அ.... அப்பறம்... ஓஹோ.. சரிதான்...

பூதானம் கன்னிகா தானம் சொர்ண தானம் அன்ன தானம்
கோதானம் உண்டு பற்பல தானங்கள் இதற்கு மேலான தானமிருந்தால் சொல்லுங்கள்

ஹேய்... கேள்விக்குப்பதில கொண்டா டேப்ப ஒடச்செறிவேன் ரெண்டா
ஒன்னே ஜெயிச்சுக்கட்டுவென் முண்டா அப்பறம் பறக்கவிடுவேன் ஜண்டா....
ஜெயக்கொடி ஜெயக்கொடி பறக்குது ஜெயக்கொடி....

பதில்ல்ல்....  

MGR:
சொல்றேன்...

எத்தனை தானம் தந்தாலும் எந்த லோகம் புகழ்ந்தாலும் தானத்தில் சிறந்தது நிதானந்தான் நிதானந்தான்....
எத்தனை தானம் தந்தாலும் எந்த லோகம் புகழ்ந்தாலும் தானத்தில் சிறந்தது நிதானந்தான்
நிதானத்தை இழந்தவர்க்கு ஈனந்தான்... நிதானத்தை இழந்தவர்க்கு ஈனந்தான்...


NSK:
சொல்லிட்டான்.. இரு...

கோவிலைக்கட்டிவைப்பதெதனாலே?... இதுக்கு பதில் சொல்ல முடியாது தம்பி 

கோவிலைக்கட்டிவைப்பதெதனாலே?

MGR:
சிற்ப வேலைக்குப் பெருமை உண்டு அதனாலே...

NSK:
போச்சுடா... சரிதான்...

MGR:
அன்ன சத்திரம் இருப்பதெதனாலே?

NSK:
அன்ன சத்திரம்........ என்ன சொன்ன?
 
MGR:
அன்ன சத்திரம் இருப்பதெதனாலே?

NSK:
பல திண்ணைதூங்கிப் பதங்கள் இருப்பதாலே? எப்டி...

MGR:
பரதேசியாய் திரிவதெதனாலே..?.. ஏ.. ஏ.. ஆ...

பரதேசியாய் திரிவதெதனாலே..?

NSK:
அவன் பத்து வீட்டு... ஆ... ஆ.. சரி இதுவேணாம்...

அவன் பத்து வீட்டு சோறு ருசி கண்டதாலே

தம்பி இங்க கவனி.. காரிருள் சூழுவது எவ்விடத்திலே?

தம்பி காரிருள் சூழுவது எவ்விடத்திலே?

MGR:
கற்றறிவில்லாத மூடர் நெஞ்சகத்திலே....

NSK: சே... MGR: அண்ணே..

MGR:
கற்றறிவில்லாத மூடர் நெஞ்சகத்திலே

NSK:
சொல்லிப்புட்டியே...

MGR:
புகையும் நெருப்பில்லாமல் எரிவதெது?

NSK:
புகையும் நெருப்பில்லாம அது எப்டி எரியும்?

MGR:
நான் சொல்லட்டுமா?

NSK:
சொல்லு..

MGR:
புகையும் நெருப்பில்லாமல் எரிவதெது? பசித்து வாடும் மக்கள் வயிறு அது
பசித்து வாடும் மக்கள் வயிறு அது

NSK:
சரிதான் சரிதான் சரிதான்

MGR:
உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?

NSK: கத்தி.. MGR: இல்ல
NSK: கோடாலி... MGR: இல்ல
NSK: ஈட்டி... MGR: ம்ஹூம்
NSK: ஆ...கடப்பாற... MGR: இல்ல

NSK:
அதுவுமில்லயா... அப்பறம்.. பயங்கரமான ஆயுதம் அக்னியா இருக்குமோ.. அது ஆயுதமில்லயே.... புரியமாட்டேங்குதே.. அட நீயே சொல்லப்பா..

MGR:
உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது? நிலைகெட்டுப்போன நயவஞ்சகரின் நாக்கு தான் அது..

NSK:
ஆஹா ஹாஹா....

MGR:
நிலைகெட்டுப்போன நயவஞ்சகரின் நாக்கு தான் அது..

அழைத்தால் வருவாளே ஸ்ரீரஞ்சனி - Azhaithal varuvaale sriranjani Lyrics

அழைத்தால் வருவாளே ஸ்ரீரஞ்சனி
அழைத்தால் வருவாளே ஸ்ரீரஞ்சனி
ஆனந்தராகம் அவளின் த்வனி
இதயம் திளைத்து இசை குழைத்து
அழைத்தால் வருவாளே ஸ்ரீரஞ்சனி

ஆ.. ஆ.. ஆ.. ஆ...
சச ரிச கச மச
தசநிதமக ரிமகரி சச சச சச சசச


கீரவாணியுடனே சாரமதியும் மோகனமும் அறிவேன்
எனக்குள்ள ராகம் ஸ்ரீரஞ்சனி
கண்கள் தூங்கும்பொழுதும் நினைவு தவறி கனவு வரும்பொழுதும்
உதடுகள் பாடும் ஸ்ரீரஞ்சனி
நினைவை மூட பிறைகள் இல்லை நிலவை மூட கனவு இல்லை
ஸ்வரம் எனும் அருள் பெறவா....
வா... என்றழைத்தால் வருவாளே ஸ்ரீரஞ்சனி

மமமமமமமமமமமமமம.....
மகரிசரி மாகரிசரி நிதமகரிசரி கமதநிசகரி
ரிரிரிரிரிரிரிரிரிரிரிரிரிரி....
கரிசரிகாரிச தபதாபகரி கரிசரிகா...
கரிசரிகாரிச தபதாபகரி கரிசரிரா....

நிறுத்துங்க என்ன ராகம் பாட்றீங்க?

ஏன் ஸ்ரீரஞ்சனி தான்

ஸ்ரீரஞ்சனியா இது? ஸ்வரத்துக்கெல்லாம் ஜொரம் வந்து அழப்போகுது..

இப்ப பாரு....

மமமமமமமமமமமமமம.....
மகரிசரி மாகரிசரி நிதமகரிசரி கமதநிசகரி
ரிரிரிரிரிரிரிரிரிரிரிரிரிரி....
கரிசரிகாரிச தபதாபகரி கரிசரிகா...

தவறல்லவா? அட நீங்கள் பாடியது சிவரஞ்சனி...
பஞ்ஜமம் இல்லாதது உங்கள் நெஞ்சுக்குள் நில்லாதது
ப.... கெடயாது... ப.... எப்டி வரும்... ப... இல்ல
சரிகபதநிச சநிதமகரிச.. இதுவல்லவோ ஸ்ரீரஞ்சனி...

எனக்கா தெரியாது ஸ்ரீரஞ்சனி... கொஞ்சம் கலப்படம் செய்தேன் சிவரஞ்சனி
கோபம் தீர இந்த குழப்பம் உதவியது புத்தி தெளிய இந்த உக்தி உதவியது
கள்ளச்சாவி போட்ட போது கதவு திறந்து நிலவு நடந்து வெளிவந்தது...
எனக்கா தெரியாது ஸ்ரீரஞ்சனி....

நன்றி: வைரமுத்து