சீர்மேவும் குருபதம் சிந்தையொடு - Seermevum gurupatham sinthaiyodu Lyrics

NSK:
சீர்மேவும் குருபதம் சிந்தையொடு வாய்க்கினும்
சிரமீது வைத்து போற்றி
ஜெகமெலாம் மெச்ச ஜெயக்கொடி பறக்கவிடும் வீரப்ரதாமன் நானே...

சங்கத்துப்புலவர் பலர் தங்கத்தோட பொற்பதக்கம் வங்கத்துப் பொன்னாடை பரிசளித்தார்
எனக்கிங்கில்லை ஈடெனச் சொல்லிக் களித்தார்
இந்த சிங்கத்து முன்னே ஓடி பங்கப்பட்ட பாராதீரர் சீரெடுத்துப் பாடிவாரேன் நேரே
அதற்கு ஓரெழுத்துப் பதில் சொல்லிப்பாரேன்....

MGR:
யானையைப் பிடித்து.....
யானையைப் பிடித்து ஒரு பானைக்குள் அடைத்து வைக்க ஆத்திரப்படுபவர் போல் அல்லவா
யானையைப் பிடித்து ஒரு பானைக்குள் அடைத்து வைக்க ஆத்திரப்படுபவர் போல் அல்லவா
உமதாரம்பக்கவி சொல்லுதே புலவா
வீட்டுப் பூனைக்குட்டி காட்டிலோடி புலியைப் பிடித்து தின்ன புறப்பட்ட கதை போலே அல்லவா
தற்புகழ்ச்சி பாடுகிறாயே புலவா

NSK:
அ.... அப்பறம்... ஓஹோ.. சரிதான்...

பூதானம் கன்னிகா தானம் சொர்ண தானம் அன்ன தானம்
கோதானம் உண்டு பற்பல தானங்கள் இதற்கு மேலான தானமிருந்தால் சொல்லுங்கள்

ஹேய்... கேள்விக்குப்பதில கொண்டா டேப்ப ஒடச்செறிவேன் ரெண்டா
ஒன்னே ஜெயிச்சுக்கட்டுவென் முண்டா அப்பறம் பறக்கவிடுவேன் ஜண்டா....
ஜெயக்கொடி ஜெயக்கொடி பறக்குது ஜெயக்கொடி....

பதில்ல்ல்....  

MGR:
சொல்றேன்...

எத்தனை தானம் தந்தாலும் எந்த லோகம் புகழ்ந்தாலும் தானத்தில் சிறந்தது நிதானந்தான் நிதானந்தான்....
எத்தனை தானம் தந்தாலும் எந்த லோகம் புகழ்ந்தாலும் தானத்தில் சிறந்தது நிதானந்தான்
நிதானத்தை இழந்தவர்க்கு ஈனந்தான்... நிதானத்தை இழந்தவர்க்கு ஈனந்தான்...


NSK:
சொல்லிட்டான்.. இரு...

கோவிலைக்கட்டிவைப்பதெதனாலே?... இதுக்கு பதில் சொல்ல முடியாது தம்பி 

கோவிலைக்கட்டிவைப்பதெதனாலே?

MGR:
சிற்ப வேலைக்குப் பெருமை உண்டு அதனாலே...

NSK:
போச்சுடா... சரிதான்...

MGR:
அன்ன சத்திரம் இருப்பதெதனாலே?

NSK:
அன்ன சத்திரம்........ என்ன சொன்ன?
 
MGR:
அன்ன சத்திரம் இருப்பதெதனாலே?

NSK:
பல திண்ணைதூங்கிப் பதங்கள் இருப்பதாலே? எப்டி...

MGR:
பரதேசியாய் திரிவதெதனாலே..?.. ஏ.. ஏ.. ஆ...

பரதேசியாய் திரிவதெதனாலே..?

NSK:
அவன் பத்து வீட்டு... ஆ... ஆ.. சரி இதுவேணாம்...

அவன் பத்து வீட்டு சோறு ருசி கண்டதாலே

தம்பி இங்க கவனி.. காரிருள் சூழுவது எவ்விடத்திலே?

தம்பி காரிருள் சூழுவது எவ்விடத்திலே?

MGR:
கற்றறிவில்லாத மூடர் நெஞ்சகத்திலே....

NSK: சே... MGR: அண்ணே..

MGR:
கற்றறிவில்லாத மூடர் நெஞ்சகத்திலே

NSK:
சொல்லிப்புட்டியே...

MGR:
புகையும் நெருப்பில்லாமல் எரிவதெது?

NSK:
புகையும் நெருப்பில்லாம அது எப்டி எரியும்?

MGR:
நான் சொல்லட்டுமா?

NSK:
சொல்லு..

MGR:
புகையும் நெருப்பில்லாமல் எரிவதெது? பசித்து வாடும் மக்கள் வயிறு அது
பசித்து வாடும் மக்கள் வயிறு அது

NSK:
சரிதான் சரிதான் சரிதான்

MGR:
உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?

NSK: கத்தி.. MGR: இல்ல
NSK: கோடாலி... MGR: இல்ல
NSK: ஈட்டி... MGR: ம்ஹூம்
NSK: ஆ...கடப்பாற... MGR: இல்ல

NSK:
அதுவுமில்லயா... அப்பறம்.. பயங்கரமான ஆயுதம் அக்னியா இருக்குமோ.. அது ஆயுதமில்லயே.... புரியமாட்டேங்குதே.. அட நீயே சொல்லப்பா..

MGR:
உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது? நிலைகெட்டுப்போன நயவஞ்சகரின் நாக்கு தான் அது..

NSK:
ஆஹா ஹாஹா....

MGR:
நிலைகெட்டுப்போன நயவஞ்சகரின் நாக்கு தான் அது..

11 comments:

  1. கோவிலைக்கட்டிவைப்பதெதனாலே?
    ஆ2: சிற்ப வேலைக்குப்
    பெருமை உண்டு அதனாலே...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுரேஷ்

      Delete
    2. எக்காலத்திற்கும் பொருந்துகின்ற பாடல் வரிகள். கலைவாணரை வணங்க வேண்டும்.

      Delete
  2. தயவு செய்து ஆயிரம் தலை வாங்கி அபூர்வ சிந்தாமணி படத்தில் ஸ். வரலக்ஷ்மி பாடிய 'காதலாகினேன் 'என்கிற பாடலின் வரிகள் கிடைக்குமா? நன்றி

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.. காதலாகினேன் பாடலுக்கு https://tamizhvarigal.blogspot.com/2021/01/kaathalaaginen-lyrics.html

      Delete
    2. We want to cut and paste for FB post

      Delete
  3. இலக்கியா ஷங்கர் 😎29 December 2022 at 02:52

    காணொளி வடிவில் பல் முறை இப்பாடலை பார்த்துவிட்டேன். அதன் வரிகளை தேடியதில் இவ்விடம் அறியக்கிடைத்தது.

    ReplyDelete
  4. இலக்கியா ஷங்கர் 😎29 December 2022 at 02:55

    ' தமிழ் கிறுக்கன் ' வலை தளத்திற்கு நன்றிகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி இலக்கியா ஷங்கர் அவர்களே

      Delete