அழைத்தால் வருவாளே ஸ்ரீரஞ்சனி
அழைத்தால் வருவாளே ஸ்ரீரஞ்சனி
ஆனந்தராகம் அவளின் த்வனி
இதயம் திளைத்து இசை குழைத்து
அழைத்தால் வருவாளே ஸ்ரீரஞ்சனி
ஆ.. ஆ.. ஆ.. ஆ...
சச ரிச கச மச
தசநிதமக ரிமகரி சச சச சச சசச
சச ரிச கச மச
தசநிதமக ரிமகரி சச சச சச சசச
கீரவாணியுடனே சாரமதியும் மோகனமும் அறிவேன்
எனக்குள்ள ராகம் ஸ்ரீரஞ்சனி
கண்கள் தூங்கும்பொழுதும் நினைவு தவறி கனவு வரும்பொழுதும்
உதடுகள் பாடும் ஸ்ரீரஞ்சனி
நினைவை மூட பிறைகள் இல்லை நிலவை மூட கனவு இல்லை
ஸ்வரம் எனும் அருள் பெறவா....
வா... என்றழைத்தால் வருவாளே ஸ்ரீரஞ்சனி
மமமமமமமமமமமமமம.....
மகரிசரி மாகரிசரி நிதமகரிசரி கமதநிசகரி
ரிரிரிரிரிரிரிரிரிரிரிரிரிரி....
கரிசரிகாரிச தபதாபகரி கரிசரிகா...
கரிசரிகாரிச தபதாபகரி கரிசரிரா....
நிறுத்துங்க என்ன ராகம் பாட்றீங்க?
ஏன் ஸ்ரீரஞ்சனி தான்
ஸ்ரீரஞ்சனியா இது? ஸ்வரத்துக்கெல்லாம் ஜொரம் வந்து அழப்போகுது..
இப்ப பாரு....
மமமமமமமமமமமமமம.....
மகரிசரி மாகரிசரி நிதமகரிசரி கமதநிசகரி
ரிரிரிரிரிரிரிரிரிரிரிரிரிரி....
கரிசரிகாரிச தபதாபகரி கரிசரிகா...
தவறல்லவா? அட நீங்கள் பாடியது சிவரஞ்சனி...
பஞ்ஜமம் இல்லாதது உங்கள் நெஞ்சுக்குள் நில்லாதது
ப.... கெடயாது... ப.... எப்டி வரும்... ப... இல்ல
சரிகபதநிச சநிதமகரிச.. இதுவல்லவோ ஸ்ரீரஞ்சனி...
எனக்கா தெரியாது ஸ்ரீரஞ்சனி... கொஞ்சம் கலப்படம் செய்தேன் சிவரஞ்சனி
கோபம் தீர இந்த குழப்பம் உதவியது புத்தி தெளிய இந்த உக்தி உதவியது
கள்ளச்சாவி போட்ட போது கதவு திறந்து நிலவு நடந்து வெளிவந்தது...
எனக்கா தெரியாது ஸ்ரீரஞ்சனி....
நன்றி: வைரமுத்து
No comments:
Post a Comment