ஒரு மடமாதும் ஒருவனுமாகி
இன்பசுகம் தரும் அன்பு பொருந்தி
உணர்வு கலங்கி ஒழுகிய விந்து
ஊருசுரோநிதமீது கலந்து
பனியிலோர் பாதி சிறு துளி மாது
பனியிலோர் பாதி சிறு துளி மாது
பண்டியில் வந்து புகுந்து திரண்டு
பதும அரும்பு கமடம் இதென்று
பதும அரும்பு கமடம் இதென்று
பார்வை மெய் வாய் செவி கால்கைகள் என்ற
உருவமுமாகி உயிர்வளர்மாதம்
உருவமுமாகி உயிர்வளர்மாதம்
ஒன்பதும் ஒன்றும் நிறைந்து மடந்தை
உதரம் அகன்று புவியில் விழுந்து
உதரம் அகன்று புவியில் விழுந்து
யோகமும் வாரமும் நாளும் அறிந்து
ஒளிநடை ஊறல் இதழ்மடவாரும்
ஒளிநடை ஊறல் இதழ்மடவாரும்
உவந்து முகந்திட வந்து தவழ்ந்து
மடியில் இருந்து மழலை மொழிந்து
மடியில் இருந்து மழலை மொழிந்து
வாய் இரு போவென நாமம் விளம்ப
உடைமணியாடை அரைவடமாட
உடைமணியாடை அரைவடமாட
உண்பவர் திண்பவர் தங்களோடுண்டு
தெருவில் இருந்து புழுதியடைந்து
தெருவில் இருந்து புழுதியடைந்து
தேடிய பாலரொடோடி நடந்து
அஞ்சு வயதாகி விளையாடியே.......
உயர்தரு ஞான குரு உபதேசம்
அஞ்சு வயதாகி விளையாடியே.......
உயர்தரு ஞான குரு உபதேசம்
முத்தமிழின் கலையும் கரைகண்டு
வளர்பிறை என்று பலரும் விளம்ப
வளர்பிறை என்று பலரும் விளம்ப
வாழ்பதினாறு பிராயமும் வந்து
மதனஸ்வரூபன் இவன் என மோக
மதனஸ்வரூபன் இவன் என மோக
மங்கையர் கண்டு மருண்டு திரண்டு
வரிவிழி கொண்டு சுழியை அறிந்து
வரிவிழி கொண்டு சுழியை அறிந்து
மாமயில் போலவர் போவது கண்டு
மனது பொறாமல் அவர் பிறகோடி
மனது பொறாமல் அவர் பிறகோடி
தேடிய மாமுதல் சேர வழங்கி
வளமையும் மாறி இளமையும் மாறி
வன்பல் விழுந்திரு கண்கள் இருண்டு
வயது முதிர்ந்து நரை திரை வந்து
வயது முதிர்ந்து நரை திரை வந்து
வாதவிரோத குரோதமடைந்து
செங்கையில் ஓர் தடியும் ஆகியே......
வருவது போவது ஒரு முதுகூனும்
செங்கையில் ஓர் தடியும் ஆகியே......
வருவது போவது ஒரு முதுகூனும்
மந்தியெனும்படி குந்தி நடந்து
மதியும் அழிந்து செவிதிமிர் வந்து
மதியும் அழிந்து செவிதிமிர் வந்து
வாயறியாமல் விடாமல் மொழிந்து
கலகலவென்று மலஜலம் வந்து
கலகலவென்று மலஜலம் வந்து
கால்வழிமேல்வழி சார நடந்து
கடன்முறை பேசும் என உரை நாவும்
கடன்முறை பேசும் என உரை நாவும்
உறங்கி விழுந்து கைகொண்டு மொழிந்து
கடைவழிகஞ்சி ஒழுகிட வந்து
கடைவழிகஞ்சி ஒழுகிட வந்து
பூதமும் நாலு சுவாசமும் நின்று
நெஞ்சு தடுமாறி வரும் நேரமே....
வளைபிறை போல எகிறுமுறோ
நெஞ்சு தடுமாறி வரும் நேரமே....
வளைபிறை போல எகிறுமுறோ
அவரும் சடையும் சிறுகுஞ்சி உவிஞ்ச
மனதும் இருண்ட வடிவும் இழந்த
மனதும் இருண்ட வடிவும் இழந்த
மாமலை போல் எமதூதர்கள் வந்து
வலைக்கொடு வீசி உயிர்க்கொடு போக
வலைக்கொடு வீசி உயிர்க்கொடு போக
மைந்தரும் வந்து குனிந்தழ நொந்து
மடியில் விழுந்து மனைவி புலம்ப
மடியில் விழுந்து மனைவி புலம்ப
மாழ்கினரே இவர் காலம் அறிந்து
வரிசை கெடாமல் எடும் என ஓடி
வரிசை கெடாமல் எடும் என ஓடி
வந்திழ மைந்தர் குனிந்து சுமந்து
கடுகி நடந்து சுடலை அடைந்து
கடுகி நடந்து சுடலை அடைந்து
மானிட வாழ்வென வாழ்வென நொந்து
விறகிட மூடி அழல் கொடு போட
விறகிட மூடி அழல் கொடு போட
வெந்து விழுந்து முறிந்தினினங்கள்
உருகி எலும்பு கருகி அடங்கி
உருகி எலும்பு கருகி அடங்கி
ஓர்பிடி நீரும் இலாத உடம்பை
நம்பும் அடியேனை இனி ஆழுமே....
நம்பும் அடியேனை இனி ஆழுமே....
No comments:
Post a Comment