மறுவார்த்தை பேசாதே - Maruvaarthai pesaathe Lyrics

மறுவார்த்தை பேசாதே
மடிமீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கனவாய் நீ மாறிடு
மயில் தோகை போலே விரல் உன்னை வருடும்
மனப்பாடமாய் உரையாடல் நிகழும்

விழி நீரும் வீண் ஆக
இமை தாண்டக் கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாக கண் ஆனதே.....

மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாளில்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய்யில்லையே......


விடியாத காலைகள்
முடியாத மாலைகளில்
வடியாத வேர்வைத் துளிகள்...
பிரியாத போர்வை நொடிகள்...

மணி காட்டும் கடிகாரம் தரும் வாதை அறிந்தோம்
உடை மாற்றும் இடைவேளை அதன் பின்பே உணர்ந்தோம்
மறவாதே மனம்... மடிந்தாலும் வரும்...
முதல் நீ.... முடிவும் நீ....
அலர் நீ.... அகிலம் நீ....


தொலைதூரம் சென்றாலும்
தொடுவானம் என்றாலும் நீ
விழியோரம் தானே மறந்தாய்...
உயிரோடு முன்பே கலந்தாய்...

இதழ் என்னும் மலர் கொண்டு கடிதங்கள் வரைந்தாய்
பதில் நானும் தரும் முன்பே கனவாகி கலைந்தாய்
பிடிவாதம் பிடி... சினம் தீரும் அடி...
இழந்தோம்... எழில்கோலம்....
இனிமேல்... மழைக்காலம்....

மறுவார்த்தை பேசாதே
மடிமீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கனவாய் நீ மாறிடு
மயில் தோகை போலே விரல் உன்னை வருடும்
மனப்பாடமாய் உரையாடல் நிகழும்

விழி நீரும் வீண் ஆக
இமை தாண்டக் கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாக கண் ஆனதே.....

மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாளில்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய்யில்லையே......

மறுவார்த்தை பேசாதே
மடிமீது நீ தூங்கிடு....

வான் நிலா நிலா அல்ல - Vaan nila nila alla Lyrics

வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா.. ஆ...
வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா..
தேன் நிலா எனும் நிலா
என் தேவி இந்நிலா 
தேன் நிலா எனும் நிலா
என் தேவி‌ இந்நிலா
நீ இலாத நாளெலாம் நான் தேய்ந்த வெண்ணிலா.. ஆ..

வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா..

மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா
பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா

வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா..


தெய்வம் கல்லிலா
ஒரு தோகையின் சொல்லிலா.. ஆ...
தெய்வம் கல்லிலா
ஒரு தோகையின் சொல்லிலா..
பொன்னிலா பொட்டிலா புன்னகை மொட்டிலா
அவள் காட்டும் அன்பிலா
இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா
இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா
தீதிலா காதலா ஊடலா கூடலா அவள் மீட்டும் பண்ணிலா

வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா..


வாழ்க்கை வழியிலா
ஒரு மங்கையின் ஒளியிலா.. ஆ..
வாழ்க்கை வழியிலா
ஒரு மங்கையின் ஒளியிலா..
ஊரிலா நாட்டிலா ஆனந்தம் வீட்டிலா
அவள் நெஞ்சின் ஏட்டிலா
சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா
சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா
எண்ணிலா ஆசைகள் என் நிலா கொண்டதேன்
அதைச் சொல்வாய் வெண்ணிலா

வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா..
தேன் நிலா எனும் நிலா
என் தேவி இந்நிலா 
நீ இலாத நாளெலாம் நான் தேய்ந்த வெண்ணிலா.. ஆ..
வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா..

கண்ணாலே பேசி பேசி - Kannaale pesi pesi Lyrics

கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே

கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே
கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே

பாசம் மீறி சித்த தாளம் போடுதே
உன் பக்தன் உள்ளம் நித்தம் ஏங்கி வாடுதே
ஆ.. ஆசை வெட்கம் அறியாமல் ஓடுதே
என் அன்னமே உன் சின்ன ஜடை ஆடுதே
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே
கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே

பதுமை போலே காணும் உந்தன் அழகிலே
நான் படகு போல தத்தளிக்கும் நிலையிலே
ஆ.. மதுவை ஏந்தி கொந்தளிக்கும் மலரிலே
என் மதி மயங்கி வீழ்ந்தேன் உன் வலையிலே
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே
கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே
கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே..
ஆ... ஆ.. ஆ...

அரச்ச சந்தனம் மணக்கும் - Aracha santhanam manakkum Lyrics

அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே
ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே
முழு சந்திரன் வந்ததுபோல் ஒரு சுந்தரி வந்ததென்ன
ஒரு மந்திரம் செஞ்சதுபோல் பல மாயங்கள் தந்ததென்ன
இது பூவோ பூந்தேரோ....

அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே
ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே


பூவடி அவ பொன்னடி அத தேடிப் போகும் தேனீ
தேனடி அந்த திருவடி அவ தேவலோக ராணி
தாழம்பூவு வாசம் வீசும் மேனியோ
அந்த ஏழு லோகம் பார்த்திராத தேவியோ
ரத்தினம் கட்டின பூந்தேரு உங்கள படச்சதாரு
இன்னிக்கும் வயசு மூவாறு என் சொல்லு பலிக்கும் பாரு
இது பூவோ பூந்தேரோ....

அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே
ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே
முழு சந்திரன் வந்ததுபோல் ஒரு சுந்தரி வந்ததென்ன
ஒரு மந்திரம் செஞ்சதுபோல் பல மாயங்கள் தந்ததென்ன
இது பூவோ பூந்தேரோ....

அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே
ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே


மான் விழி ஒரு தேன் மொழி நல்ல மகிழம்பூவு அதரம்
பூநெறம் அவ பொன்னிறம் அவ சிரிக்க நெனப்பு சிதறும்
ஏலப்பூவு கோலம் போடும் நாசி தான்
பல ஜாலத்தோடு ஆளப்போகும் ராசி தான்
மொட்டுக்கள் இன்னைக்குப் பூவாச்சு சித்திரம் பெண்ணென ஆச்சு
கட்டுறேன் கட்டுறேன் நான் பாட்டு கைகள தட்டுங்க கேட்டு
இது பூவோ பூந்தேரோ....

அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே
ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே
முழு சந்திரன் வந்ததுபோல் ஒரு சுந்தரி வந்ததென்ன
ஒரு மந்திரம் செஞ்சதுபோல் பல மாயங்கள் தந்ததென்ன
இது பூவோ பூந்தேரோ....

அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே
ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே..

அதோ மேக ஊர்வலம் - Atho mega oorvalam Lyrics

அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே
இதோ காதல் ஊர்வலம் இதோ காமன் உற்சவம் இங்கே

ஒரே நாள் அழகிய முகம் பார்த்தேன்
இதோ நான் உயிரினில் உனைச் சேர்த்தேன் வா..

அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே


உனது பாதம் அடடட இலவம் பஞ்சு
நடக்கும் போது துடித்தது எனது நெஞ்சு
இரண்டு வாழைத்தண்டிலே ராஜ கோபுரம்
நானும் இன்று கேட்கிறேன் உன்னை ஓர் வரம்
தேகம் தன்னை மூடவே கூந்தல் போதும் போதுமே
ஆடை என்ன வேண்டுமா? நாணம் என்ன வா வா..

அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே


குழலைப் பார்த்து முகிலென மயில்கள் ஆடும்
முகத்தைப் பார்த்து அடிக்கடி நிலவு தேயும்
தென்னம்பாண்டி முத்தைப்போல் தேவி புன்னகை
வந்து ஆடச் சொல்லுமே செண்டு மல்லிகை
உன்னைச் செய்த பிரம்மனே உன்னைப் பார்த்து ஏங்குவான்
காதல் பிச்சை வாங்குவான் இன்னும் என்ன சொல்ல?

அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே
இதோ காதல் ஊர்வலம் இதோ காமன் உற்சவம் இங்கே

ஒரே நாள் அழகிய முகம் பார்த்தேன்
இதோ நான் உயிரினில் உனைச் சேர்த்தேன் வா..

அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே

முத்தமிழே முத்தமிழே - Muthamizhe muthamizhe Lyrics

முத்தமிழே முத்தமிழே முத்தச்சந்தம் ஒன்று கேட்பதென்ன
முத்தத்தமிழ் வித்தகியே என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன
இதழும் இதழும் எழுதும் பாடலென்ன
உயிரும் உயிரும் உருகும் தேடலென்ன
மனம் வேகுது மோகத்திலே
நோகுது தாபத்திலே

முத்தமிழே முத்தமிழே முத்தச்சந்தம் ஒன்று கேட்பதென்ன
முத்தத்தமிழ் வித்தகியே என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன


காதல் வழிச்சாலையிலே வேகத்தடை ஏதுமில்லை

நாணக்குடை நீ பிடித்தும் வேர் வரைக்கும் சாரல் மழை

தாகம் வந்து பாய் விரிக்க தாவணிப்போல் சிலிர்க்கிறதே

மோகம் வந்து உயிர் குடிக்க கை வளையல் சிரிக்கிறதே

உந்தன் பேரைச் சொல்லித்தான் காமன் என்னைச் சந்தித்தான்

முத்தம் சிந்தச் சிந்த ஆனந்தம் தான்

முத்தமிழே முத்தமிழே முத்தச்சந்தம் ஒன்று கேட்பதென்ன
முத்தத்தமிழ் வித்தகரே என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன
இதழும் இதழும் எழுதும் பாடலென்ன
உயிரும் உயிரும் உருகும் தேடலென்ன
மனம் வேகுது மோகத்திலே
நோகுது தாபத்திலே



கனவு வந்து காத்திருக்கு தூங்கிக்கொள்ள மடியிருக்கா

ஆசை இங்கு பசித்திருக்கு இளமைக்கென்ன விருந்திருக்கா

பூவைக் கிள்ளும் பாவனையில் சூடிக் கொள்ள தூண்டுகிறாய்

மச்சம் தொடும் தோரணையில் முத்தம் தர சீண்டுகிறாய்

மின்னல் சிந்திச் சிரித்தாய்
கண்ணில் என்னைக் குடித்தாய்

தாகம் தந்து என்னை மூழ்கடித்தாய்

ஆஹா.. முத்தமிழே  ம்...
முத்தமிழே  என்ன..
முத்தச்சந்தம் ஒன்று கேட்பதென்ன

முத்தத்தமிழ் வித்தகரே என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன

இதழும் இதழும் எழுதும் பாடலென்ன

உயிரும் உயிரும் உருகும் தேடலென்ன

மனம் வேகுது மோகத்திலே
நோகுது தாபத்திலே

முத்தமிழே முத்தமிழே முத்தச்சந்தம் ஒன்று கேட்பதென்ன


முத்தத்தமிழ் வித்தகியே என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன

கண்ணா கருமைநிறக் கண்ணா - Kannaa karumai nirakannaa Lyrics

கண்ணா... கருமை நிறக் கண்ணா..
உன்னைக் காணாத கண் இல்லையே

கண்ணா... கருமை நிறக் கண்ணா..
உன்னைக் காணாத கண் இல்லையே
உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை
என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை

கண்ணா... கருமை நிறக் கண்ணா..
உன்னைக் காணாத கண் இல்லையே
உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை
என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை

கண்ணா... கருமை நிறக் கண்ணா..
உன்னைக் காணாத கண் இல்லையே


மணம் பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர் முன் கொடுத்தாய் கண்ணா
மணம் பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர் முன் கொடுத்தாய் கண்ணா
இனம் பார்த்து எனைச் சேர்க்க மறந்தாய் கண்ணா......
இனம் பார்த்து எனைச் சேர்க்க மறந்தாய் கண்ணா
நல்ல இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா.....

கண்ணா... கருமை நிறக் கண்ணா..
உன்னைக் காணாத கண் இல்லையே


பொன்னான மனம் ஒன்று தந்தாய் கண்ணா
அதில் பூப்போல நினைவொன்று வைத்தாய் கண்ணா
பொன்னான மனம் ஒன்று தந்தாய் கண்ணா
அதில் பூப்போல நினைவொன்று வைத்தாய் கண்ணா
கண் பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா....
கண் பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா
எந்த கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா..

கண்ணா... கருமை நிறக் கண்ணா..
உன்னைக் காணாத கண் இல்லையே
உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை
என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை

கண்ணா... கருமை நிறக் கண்ணா..
உன்னைக் காணாத கண் இல்லையே

கங்கைக் கரைத் தோட்டம் - Gangai karai thottam Lyrics

கங்கைக் கரைத் தோட்டம்
கன்னிப் பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே
ஓ.. ஓ.. கண்ணன் நடுவினிலே

காலை இளங்காற்று
பாடிவரும் பாட்டு
எதிலும் அவன் குரலே
ஓ.. ஓ..  எதிலும் அவன் குரலே

ஆ... ஆ... ஆ...

கங்கைக் கரைத் தோட்டம்
கன்னிப் பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே
ஓ.. ஓ.. கண்ணன் நடுவினிலே

காலை இளங்காற்று
பாடிவரும் பாட்டு
எதிலும் அவன் குரலே
ஓ.. ஓ..  எதிலும் அவன் குரலே


கண்ணன் முகத்தோற்றம் கண்டேன்
கண்டவுடன் மாற்றம் கொண்டேன்
கண்ணன் முகத்தோற்றம் கண்டேன்
கண்டவுடன் மாற்றம் கொண்டேன்
கண்மயங்கி ஏங்கி நின்றேன்
கன்னி சிலையாகி நின்றேன்

கண்மயங்கி ஏங்கி நின்றேன்
கன்னி சிலையாகி நின்றேன்
என்ன நினைந்தேனோ? தன்னை மறந்தேனோ..
கண்ணீர் பெருகியதே..
ஓ.. ஓ.. கண்ணீர் பெருகியதே..

கங்கைக் கரைத் தோட்டம்
கன்னிப் பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே
ஓ.. ஓ.. கண்ணன் நடுவினிலே


கண்ணன் என்னை கண்டு கொண்டான்
கையிரண்டில் அள்ளிக்கொண்டான்
கண்ணன் என்னை கண்டு கொண்டான்
கையிரண்டில் அள்ளிக்கொண்டான்
பொன்னழகு மேனி என்றான்
பூச்சரங்கள் கோடி தந்தான்
பொன்னழகு மேனி என்றான்
பூச்சரங்கள் கோடி தந்தான்
கண் திறந்து பார்த்தேன் கண்ணன் அங்கு இல்லை
கண்ணீர் பெருகியதே..
ஓ.. ஓ.. கண்ணீர் பெருகியதே..

அன்று வந்த கண்ணன்
இன்று வரவில்லை
என்றோ அவன் வருவான்..
ஓ.. ஓ.. என்றோ அவன் வருவான்..


கண்ணன் முகம் கண்ட கண்கள்
மன்னர் முகம் காண்பதில்லை
கண்ணன் முகம் கண்ட கண்கள்
மன்னர் முகம் காண்பதில்லை
கண்ணனுக்குத் தந்த உள்ளம்
இன்னொருவர் கொள்வதில்லை
கண்ணனுக்குத் தந்த உள்ளம்
இன்னொருவர் கொள்வதில்லை
கண்ணன் வரும் நாளில் கன்னி இருப்பேனோ...
காற்றில் மறைவேனோ
ஓ.. ஓ.. காற்றில் மறைவேனோ

நாடி வரும் கண்ணன் கோலமணி மார்பில்
நானே தவழ்ந்திருப்பேன்
ஓ.. ஓ...நானே தவழ்ந்திருப்பேன்

கண்ணா.. ஆ.. ஆ...ஆ...
கண்ணா.. ஆ.. ஆ...ஆ...
கண்ணா.. ஆ.. ஆ...ஆ...

கங்கைக் கரைத் தோட்டம்
கன்னிப் பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே
ஓ.. ஓ.. கண்ணன் நடுவினிலே

மாலைப்பொழுதின் மயக்கத்திலே - Maalaipoluthin mayakkathile Lyrics

மாலைப்பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி
மாலைப்பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி?
காரணம் ஏன் தோழி?

ஆ.. மாலைப்பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி

இன்பம் சிலநாள் துன்பம் சிலநாள்
என்றவர் யார் தோழி?
இன்பம் கனவில் துன்பம் எதிரில்
காண்பது ஏன் தோழி?
காண்பது ஏன் தோழி?

ஆ.. மாலைப்பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோ...ழி


மணமுடித்தவர் போல் அருகினிலே
ஓர் வடிவு கண்டேன் தோழி
மங்கையின் கையில் குங்குமம் தந்தார்
மாலையிட்டார் தோழி

வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில்
சாய்ந்து விட்டேன் தோழி
அவர் மறவேன் மறவேன் என்றார்
உடனே மறந்துவிட்டார் தோழி
பறந்துவிட்டார் தோழி..

ஆ.. மாலைப்பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோ...ழி


கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன்
கணவர் என்றார் தோழி
கணவரென்றால் அவர் கனவு முடிந்ததும்
பிரிந்தது ஏன் தோழி

இளமையெல்லாம் வெறும் கனவு மயம்
இதில் மறைந்தது சிலகாலம்
தெளிவும் அறியாது முடிவும் தெரியாது
மயங்குது எதிர்காலம்.. மயங்குது எதிர்காலம்..


ஆ.. மாலைப்பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோ...ழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி?
காரணம் ஏன் தோழி?


ஆ.. மாலைப்பொழுதின் மயக்கத்திலே
நா...ன் கனவு கண்டேன் தோ...ழி


வாராயென் தோழி வாராயோ - Vaaraayen thozhi vaaraayo Lyrics

வாராயென் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
வாராயென் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ


மணமேடை தன்னில் மணமே காணும் திருநாளை காண வாராயோ

வாராயென் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ



மணக்கோலம் கொண்ட மகளே
புதுமாக்கோலம் போடு மயிலே
குணக்கோலம் கொண்ட கனியே
நம் குலம் வாழ பாடு குயிலே
சிரிக்காத வாயும் சிரிக்காதோ
திருநாளைக் கண்டு மகிழாதோ

சிரிக்காத வாயும் சிரிக்காதோ
திருநாளைக் கண்டு மகிழாதோ

வாராயென் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ



தனியாகக் காண வருவார்
இவள் தளிர்ப்பாலே தாவி அணைவாள்
கனி போலே சேர்ந்து மகிழ்வாள்
இரு கண்மூடி மார்பில் துயில்வாள்
எழிலான கூந்தல் கலையாதோ
இதமான இன்பம் மலராதோ

எழிலான கூந்தல் கலையாதோ
இதமான இன்பம் மலராதோ

வாராயென் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ



மலராத பெண்மை மலரும்
முன்பு தெரியாத உண்மை தெரியும்
மயங்காத கண்கள் மயங்கும்
முன்பு விளங்காத கேள்வி விளங்கும்
இரவோடு நெஞ்சம் உருகாதோ
இரண்டோடு மூன்று வளராதோ
இரவோடு நெஞ்சம் உருகாதோ
இரண்டோடு மூன்று வளராதோ

வாராயென் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ


மணமேடை தன்னில் மணமே காணும் திருநாளை காண வாராயோ

வாராயென் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ

எங்கே தேடுவேன் பணத்தை - Enge theduven panathai Lyrics

எங்கே தேடுவேன்
எங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன்
உலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்
உலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்
அரசர் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை எங்கே தேடுவேன்
அரசர் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை எங்கே தேடுவேன்

கறுப்பு மார்க்கெட்டில் கலங்குகின்றாயோ
கஞ்சன் கையிலே சிக்கிக்கொண்டாயோ.. ஓ..
கறுப்பு மார்க்கெட்டில் கலங்குகின்றாயோ
கஞ்சன் கையிலே சிக்கிக்கொண்டாயோ..
கிண்டி ரேசில் சுத்திக் கிறுகிறுத்தாயோ
கிண்டி ரேசில் சுத்திக் கிறுகிறுத்தாயோ
அண்டின பேர்களை ரெண்டும் செய்யும் பணத்தை
எங்கே தேடுவேன்..
பணத்தை எங்கே தேடுவேன்..


பூமிக்குள் புதைந்து புதையல் ஆனாயோ
பொன்னகையாய் பெண்மேல் தொங்குகின்றாயோ
பூமிக்குள் புதைந்து புதையல் ஆனாயோ
பொன்னகையாய் பெண்மேல் தொங்குகின்றாயோ
சாமிகள் அடிகளில் சரண் புகுந்தாயோ
சாமிகள் அடிகளில் சரண் புகுந்தாயோ
சந்நியாசி கோலத்தோடு உலவுகின்றாயோ
எங்கே தேடுவேன்..
பணத்தை எங்கே தேடுவேன்..


திருப்பதி உண்டியலில் சேர்ந்துவிட்டாயோ
திருவண்ணாமலை குகை புகுந்தாயோ
திருப்பதி உண்டியலில் சேர்ந்துவிட்டாயோ
திருவண்ணாமலை குகை புகுந்தாயோ
இருப்பு பெட்டிகளில் இருக்கின்றாயோ
இருப்பு பெட்டிகளில் இருக்கின்றாயோ
இரக்கமுள்ளவரிடம் இருக்காத பணம்தனை
எங்கே தேடுவேன்..
பணத்தை எங்கே தேடுவேன்..


தேர்தலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ
தேகசுகத்துக்காக ஊட்டி சென்றாயோ
தேர்தலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ
தேகசுகத்துக்காக ஊட்டி சென்றாயோ
சுவற்றுக்குள் தங்கமாய் பதுங்கிவிட்டாயோ
சுவற்றுக்குள் தங்கமாய் பதுங்கிவிட்டாயோ
சூடம் சாம்பிராணியாய்  புகைந்து போனாயோ
எங்கே தேடுவேன்..
பணத்தை எங்கே தேடுவேன்..

உலகம் செழிக்க உதவும் பணமே பணமே பணமே பணமே... ஏ...

சித்தத்தினால் கொண்ட பித்தத்தினால் - Sithathinaal konda pithathinaal Lyrics

சித்தத்தினால் கொண்ட பித்தத்தினால்
காதல் யுத்தத்தினால் எனது ரத்தத்தினால்
கவிதை எழுதிவைத்தேன் தோழி
இரு கண்ணிருந்தால் வாசித்து போடி


கண் பார்த்ததும் கெண்டைகால் பார்த்ததும்
உன்னை பெண் பார்த்ததும் தள்ளிப் பின் பார்த்ததும்
சுட்டாலும் மறக்காது நெஞ்சம்
முற்றும் சொன்னதில்லை தமிழுக்கு பஞ்சம்

கண்டிப்பதால் என்னை நிந்திப்பதால்
நெஞ்சைத் தண்டிப்பதால் தலையை துண்டிப்பதால்
தீராது என் காதல் என்பேன்
நீ தீயள்ளித் தின்னச்சொல் தின்பேன்


உண்டென்று சொல் இல்லை நில் என்று கொல்
எம்மை வாவென்று சொல் இல்லை போ என்று கொல்
இம்மென்றால் உள்ளதடி சொர்க்கம்
நீ இல்லையென்றால் ஈடுகாடு பக்கம்

நன்றி: வைரமுத்து

கவிதைக்கு பொருள் தந்த - Kavithaiku porul thantha Lyrics

கவிதைக்கு பொருள் தந்த கலைவாணி நீயா?
என் காதோடு கேட்கின்ற காற்சலங்கை நீயா?
பேச்சுக்கு உயிர் தந்த சப்தங்கள் நீயா?
எனை பேசாமல் செய்கின்ற மௌனங்கள் நீயா?

சத்தங்கள் இல்லாத சங்கீதம் நீயா?
எனை சாகாமல் செய்கின்ற சஞ்சீவி நீயா?
பருவத்தின் தோட்டத்தில் முதற்பூவும் நீயா?
என் பாலைவனம் காண்கின்ற முதல் மழையும் நீயா?


இரவோடு நான் காணும் ஒளிவட்டம் நீதான்
என் இருகண்ணில் தெரிகின்ற ஒரு காட்சி நீதான்
வார்த்தைக்குள் ஊடாடும் உள் அர்த்தம் நீதான்
என் வாத்தியத்தில் இசையாகும் உயிர்மூச்சும் நீதான்

தூரத்தில் மயிலிறகால் தொட்டவளும் நீதான்
என் பக்கத்தில் அக்கினியாய்ச் சுட்டவளும் நீதான்
காதலுக்கு கண்திறந்து வைத்தவளும் நீதான்
நான் காதலித்தால் கண்மூடிக் கொண்டவளும் நீதான்

நன்றி: வைரமுத்து

கங்கை அணிந்தவா - Gangai aninthavaa Lyrics

கங்கை அணிந்தவா
கண்டோர் தொழும் விலாசா
சதங்கை ஆடும் பாத விநோதா
லிங்கேஸ்வரா
நின்தாள் துணை நீதா

தில்லை அம்பல நடராஜா
செழுமைநாதனே பரமேசா
தில்லை அம்பல நடராஜா
செழுமைநாதனே பரமேசா
அல்லல் தீர்த்தாண்டவா... ஆ..
வா வா அமிழ்தானவா.. ஆ..
அல்லல் தீர்த்தாண்டவா... ஆ..
வா வா அமிழ்தானவா.. ஆ..

தில்லை அம்பல நடராஜா
செழுமைநாதனே பரமேசா


எங்கும் இன்பம் விளங்கவே.. ஏ...ஏ...ஏ...
எங்கும் இன்பம் விளங்கவே
அருள் உமாபதி
எளிமை அகல வரம் தா...வா வா..
வளம் பொங்க வா...
எளிமை அகல வரம் தா...வா வா..
வளம் பொங்க வா...

தில்லை அம்பல நடராஜா
செழுமைநாதனே பரமேசா


பலவித நாடும் கலையேடும்
பணிவுடன் உனையே துதிபாடும்
பலவித நாடும் கலையேடும்
பணிவுடன் உனையே துதிபாடும்
கலையலங்கார பாண்டியராணி நேசா
கலையலங்கார பாண்டியராணி நேசா
மலைவாசா.. மங்கா மதியானவா...

தில்லை அம்பல நடராஜா
செழுமைநாதனே பரமேசா
தில்லை அம்பல நடராஜா
செழுமைநாதனே பரமேசா

சம்போ.... ஓ.. ஓ...

மாமா மாமா மாமா - Mama Mama Lyrics

மாமா மாமா மாமா......
மாமா மாமா மாமா......

ஏம்மா ஏம்மா ஏம்மா....
ஏம்மா ஏம்மா ஏம்மா....

சிட்டு போல பெண்ணிருந்தா வட்டமிட்டு சுத்தி சுத்தி கிட்ட கிட்ட ஓடிவந்து தொடலாமா?...

சிட்டு போல பெண்ணிருந்தா வட்டமிட்டு சுத்தி சுத்தி கிட்ட கிட்ட ஓடிவந்து தொடலாமா?...

தாலி கட்டுமுன்னே கையி மேல படலாமா?..
மாமா மாமா மாமா...

மாமா மாமா மாமா...

வெட்டும் விழி பார்வையினால் ஒட்டுறவாய் பேசிவிட்டு எட்டி எட்டி இப்படியும் ஓடலாமா?...

ஓஹோஹோ

வெட்டும் விழி பார்வையினால் ஒட்டுறவாய் பேசிவிட்டு எட்டி எட்டி இப்படியும் ஓடலாமா?...

கையை தொட்டு பேச மட்டும் தடை போடலாமா?..
ஏம்மா ஏம்மா ஏம்மா...

ஏம்மா ஏம்மா ஏம்மா...


ஊரறிய நாடறிய பந்தலிலே நமக்கு உத்தவங்க மத்தவங்க மத்தியிலே

ஊரறிய நாடறிய பந்தலிலே நமக்கு உத்தவங்க மத்தவங்க மத்தியிலே

ஒன்னாகி...

ஆஹா..

ஒன்னாகி உறவுமுறை கொண்டாடும் முன்னாலே ஒருவர் கையை மற்றொருவர் பிடிக்கலாமா?..
இதை உணராமே ஆம்பிளைங்க துடிக்கலாமா?..

மாமா மாமா மாமா..

மாமா மாமா மாமா..
 
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்


நாடறிய ஒன்னாகும் முன்னாலே தூண்டி போடுகின்ற உங்களது கண்ணாலே

நாடறிய ஒன்னாகும் முன்னாலே தூண்டி போடுகின்ற உங்களது கண்ணாலே

ஜாடை காட்டி..

ஓஹோ

ஆசை மூட்டி..

ஓஹோ

ஜாடை காட்டி ஆசை மூட்டி சல்லாப பாட்டு பாடி
நீங்க மட்டும் எங்க நெஞ்சை தாக்கலாமா?...

உள்ள நிலை தெரிஞ்சும் இந்த கேள்வி கேக்கலாமா?....
ஏம்மா ஏம்மா ஏம்மா...

ஏம்மா ஏம்மா ஏம்மா...


கன்னி பொண்ண பார்த்தவுடன் காதலிச்சு
அவள கைவிட்டு ஒன்பது மேல் ஆச வச்சு

கன்னி பொண்ண பார்த்தவுடன் காதலிச்சு
அவள கைவிட்டு ஒன்பது மேல் ஆச வச்சு

வண்டாக...

ஆஹா

வண்டாக மாறுகிற மனமுள்ள ஆம்பிளைங்க
கொண்டாட்டம் போடுவத பாத்ததில்லையா?...

பெண்கள் திண்டாடும் கதைகளை கேட்டதில்லையா?...
மாமா மாமா மாமா...

மாமா மாமா மாமா...

ஹோய் ஹோய் ஹோய்

ஹோய் ஹோய் ஹோய்


ஒன்ன விட்டு ஒன்ன தேடி ஓடுறவன்
நிதமும் ஊர ஏய்ச்சு வேஷமெல்லாம் போடுறவன்

ஒன்ன விட்டு ஒன்ன தேடி ஓடுறவன்
நிதமும் ஊர ஏய்ச்சு வேஷமெல்லாம் போடுறவன்

உள்ள இந்த ஒலகத்தயே உத்து பாத்தா நீங்க இப்ப சொல்லுவது எல்லாமே உண்மதான்

ஓ...

கொஞ்சம் தூரம் நின்னு பழகுவதும் நன்மைதான் நன்மைதான்

ஆமா ஆமா ஆமா...

ஆமா ஆமா ஆமா...

கட்டு பாட்ட மீராமே சட்ட திட்டம் மாறாமே
காத்திருக்க வேணும் கொஞ்சம் காலம் வரை

ஓஹோ

கட்டு பாட்ட மீராமே சட்ட திட்டம் மாறாமே
காத்திருக்க வேணும் கொஞ்சம் காலம் வரை

பிறகு கல்யாணம் ஆகி விட்டா ஏது தடை? ஏது தடை?
மாமா மாமா மாமா...

ஆமா...

மாமா மாமா மாமா...

ஆமா ஆமா ஆமா...

போடு..

ஆமா ஆமா ஆமா...

இசைத்தமிழ் நீ செய்த - Isaithamil nee seitha Lyrics

இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை
நீ இருக்கையிலே எனக்கு பெரும் சோதனை.. இறைவா.. ஆ... ஆ.. ஆ..

இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை
இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை
நீ இருக்கையிலே எனக்கு பெரும் சோதனை
இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை
நீ இருக்கையிலே எனக்கு பெரும் சோதனை

இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை

வசி வருமே பாண்டி நாட்டினிலே... இறைவா.. ஆ... ஆ.. ஆ..
வசி வருமே பாண்டி நாட்டினிலே
குழலி மணவாளனே உனது வீட்டினிலே
வசி வருமே பாண்டி நாட்டினிலே
குழலி மணவாளனே உனது வீட்டினிலே
உயிர்மயக்கம் நாத பாட்டினிலே
உயிர்மயக்கம் நாத பாட்டினிலே
வெற்றி ஒருவனுக்கோ மதுரைத் தமிழனுக்கோ!
வெற்றி ஒருவனுக்கோ மதுரைத் தமிழனுக்கோ!

இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை


சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ?
மாமன் திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ?
சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ?
மாமன் திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ?
பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட உன்னை
பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட உன்னை
பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன?

இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை


தாய்க்கொரு பழி நேர்ந்தால் மகற்கில்லையோ?
அன்னைத்தமிழுக்கு பழி நேர்ந்தால் உனக்கில்லையோ?
வேருக்கு நீர் ஊற்றி விழைக்கின்ற தலைவா
உன் ஊருக்கு பழி நேர்ந்தால் உனக்கின்றி எனக்கில்லை
உனக்கின்றி எனக்கில்லை
உனக்கின்றி எனக்கில்லை

ஆதியிலும் பறயனல்ல ஜாதியிலும் பறையனல்ல - Aathiyilum parayanalla jaathiyilum parayanalla Lyrics

ஆதியிலும் பறையனல்ல ஜாதியிலும் பறையனல்ல
ஆதியிலும் பறயனல்ல ஜாதியிலும் பறையனல்ல
நீதியிலும் பறையனல்லவே
நானே பாதியில் பறையனானேனே
ஆதியிலும் பறையனல்ல ஜாதியிலும் பறயனல்ல
நீதியிலும் பறையனல்லவே
நானே பாதியில் பறையனானேனே


வெள்ளிப்பணம் கேட்டவர்க்கு அள்ளி அள்ளி ஈன்ற கையால்
வெள்ளிப்பணம் கேட்டவர்க்கு அள்ளி அள்ளி ஈன்ற கையால்
கொள்ளிக்காசு வாங்கலானேனே
பொன்னுலகில் பறையனானேனே

ஆதியிலும் பறையனல்ல ஜாதியிலும் பறையனல்ல
நீதியிலும் பறையனல்லவே
நானே பாதியில் பறையனானேனே

தத்துவத்தின் நீதியிலே ஜாதியில்லை பேதமில்லை
தத்துவத்தின் நீதியிலே ஜாதியில்லை பேதமில்லை
இக்கரையில் உன் வசையாலே வீணே இன்று நான் பறையனானே

ஆதியிலும் பறையனல்ல ஜாதியிலும் பறையனல்ல
நீதியிலும் பறையனல்லவே
நானே பாதியில் பறையனானேனே

உலகம் அறியாத புதுமை - Ulagam ariyaatha puthumai Lyrics

உலகம் அறியாத புதுமை
இந்த உலகம் அறியாத புதுமை
என் உடல் பொருள் ஆவியை கடனுக்கே விற்பது
உலகம் அறியாத புதுமை
என் உடல் பொருள் ஆவியை கடனுக்கே விற்பது
உலகம் அறியாத புதுமை
இந்த உலகம் அறியாத புதுமை

அலைகடல் மேவும் துரும்பதை போலே
யானை வாயின் கரும்பதை போலே
அலைகடல் மேவும் துரும்பதை போலே
யானை வாயின் கரும்பதை போலே
நிலையும் இழந்தேனே விலையும் புகுந்தேனே
உலகம் அறியாத புதுமை
இந்த உலகம் அறியாத புதுமை

கேளுமய்யா... விலை கேளுமய்யா...
வாழப்பிறந்தோர் நிலை பாருமய்யா...
கேளுமய்யா... விலை கேளுமய்யா...
வாழப்பிறந்தோர் நிலை பாருமய்யா...

தன்மானம் எந்நாளும் சன்மானம் என்றே
பெண்மானம் காக்கவே பிறந்தவள் அன்றோ..
தன்மானம் எந்நாளும் சன்மானம் என்றே
பெண்மானம் காக்கவே பிறந்தவள் அன்றோ..
அரசனும் ஆண்டியும் விதியின் முன்னாலே
அமைதியை இழப்பார் ஊழ்வினையாலே
அரசனும் ஆண்டியும் விதியின் முன்னாலே
அமைதியை இழப்பார் ஊழ்வினையாலே
அந்த அனுபவம் வாழ்வில் நேர்ந்ததினாலே

உலகம் அறியாத புதுமை
இந்த உலகம் அறியாத புதுமை
என் உடல் பொருள் ஆவியை கடனுக்கே விற்பது
உலகம் அறியாத புதுமை
இந்த உலகம் அறியாத புதுமை

கேளுமய்யா.... விலை கேளுமய்யா...
விலை கேளுமய்யா...

சின்ன சின்ன தூறல் என்ன - Chinna chinna thooral enna Lyrics

சின்ன சின்ன தூறல் என்ன!
என்னை கொஞ்சும் சாரல் என்ன!
சிந்தச் சிந்த ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன!
சின்ன சின்ன தூறல் என்ன!
என்னை கொஞ்சும் சாரல் என்ன!
சிந்தச் சிந்த ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன!
சின்ன சின்ன


உனது தூறலும் இனிய சாரலும்
தீண்டும் மேகம் சிலிர்க்குதம்மா

ஹஹஹா... அது தீண்டும் மேகம் இல்ல,, தேகம் சிலிர்க்குதம்மா

உனது தூறலும் இனிய சாரலும்
தீண்டும் தேகம் சிலிர்க்குதம்மா
நனைந்த பொழுதினில் குளிர்ந்த மனதினில்
ஏதோ ஆசை துடிக்குதம்மா
மனித ஜாதியின் பசியும் தாகமும்
உன்னால் என்றும் தீருமம்மா
வாரித் தந்த வள்ளல் என்று
பாரில் உன்னை சொல்வதுண்டு
இனமும் குலமும் இருக்கும் உலகில்
அனைவரும் இங்கு சரிசமமென உணர்த்திடும் மழையே...

சின்ன சின்ன...

சின்ன சின்ன தூறல் என்ன!
என்னை கொஞ்சும் சாரல் என்ன!
சிந்தச் சிந்த ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன!
சின்ன சின்ன தூறல் என்ன!


பிழைக்கு யாவரும் தவிக்கும் நாட்களில்
நீயோ இங்கே வருவதில்லை

படிச்சவன் பாட்ட கெடுத்தான் கதையா இல்ல இருக்கு, பிழைக்குன்னு எழுதலியே..
மழைக்குன்னு தானே எழுதிருக்கேன்..


ஓஹோ...

மழைக்கு யாவரும் தவிக்கும் நாட்களில்
நீயோ இங்கே வருவதில்லை
வெடித்த பூமியும் வானம் பார்க்கையில்
நீயோ கண்ணில் தெரிவதில்லை
உனது சேதியை பொழியும் தேதியை
முன்னால் இங்கே யார் அறிவார்?
நஞ்சை மண்ணும் புஞ்சை மண்ணும்
நீயும் வந்தால் பொன்னாய் மின்னும்
உனது பெருமை உலகம் அறியும்
இடி எனும் இசை முழங்கிட வரும்
மழை எனும் மகளே....

சின்ன சின்ன

சின்ன சின்ன தூறல் என்ன!
என்னை கொஞ்சும் சாரல் என்ன!
சிந்தச் சிந்த ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன!
சின்ன சின்ன தூறல் என்ன!
என்னை கொஞ்சும் சாரல் என்ன!
சிந்தச் சிந்த ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன!
சின்ன சின்ன

வாராயோ வெண்ணிலாவே - Vaaraayo vennilaave Lyrics

வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே
வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே
வாராயோ வெண்ணிலாவே

அகம்பாவம் கொண்ட சதியால் அறிவால் உயர்ந்திடும் பதி நான்
அகம்பாவம் கொண்ட சதியால் அறிவால் உயர்ந்திடும் பதி நான்
சதிபதி விரோதம் மிகவே சிதைந்தது இதம் தரும் வாழ்வே

வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே
வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே
வாராயோ வெண்ணிலாவே


வாக்குரிமை தந்த பதியால் வாழ்ந்திடவே வந்த சதி நான்
வாக்குரிமை தந்த பதியால் வாழ்ந்திடவே வந்த சதி நான்
நம்பிட செய்வார் நேசம் நடிப்பதெல்லாம் வெளிவேசம்
 
வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே
வாராயோ வெண்ணிலாவே

தன்பிடிவாதம் விடாது என் மனம் போல் நடக்காது
தன்பிடிவாதம் விடாது என் மனம் போல் நடக்காது
நமக்கென எதுவும் சொல்லாது நம்மையும் பேசவிடாது

வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே
வாராயோ வெண்ணிலாவே


அனுதினம் செய்வார் மோடி அகமகிழ்வார் போராடி
அனுதினம் செய்வார் மோடி அகமகிழ்வார் போராடி
இல்லறம் இப்படி நடந்தால் நல்லறமாமோ நிலவே?

வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே
வாராயோ வெண்ணிலாவே

மணமகளே மணமகளே - Manamagale manamagale Lyrics

மணமகளே மணமகளே வாழும் காலம் சூழும் மங்கலமே மங்கலமே...
குணமகளே குலமகளே பாலும் தேனும் நாளும் பொங்கிடுமே பொங்கிடுமே...
குற்றம் குறை இல்லா ஒரு குண்டுமணி சரமே...
மஞ்சள் வளமுடனே என்றும் வாழணும் வாழணுமே...

மணமகளே மணமகளே வாழும் காலம் சூழும் மங்கலமே மங்கலமே...
குணமகளே குலமகளே பாலும் தேனும் நாளும் பொங்கிடுமே பொங்கிடுமே...


வலது அடி எடுத்து வைத்து வாசல் தாண்டி வா வா பொன்மயிலே பொன்மயிலே...
புகுந்த இடம் ஒளிமயமாய் உன்னால் தானே மாறும் மாங்குயிலே மாங்குயிலே...
இல்லம் கோயிலடி.. அதில் பெண்மை தெய்வமடி...
தெய்வம் உள்ள இடம் என்றும் செல்வம் பொங்குமடி...

மணமகளே மணமகளே வாழும் காலம் சூழும் மங்கலமே மங்கலமே...
குணமகளே குலமகளே பாலும் தேனும் நாளும் பொங்கிடுமே பொங்கிடுமே...

எங்கிருந்தாலும் வாழ்க - Engirunthaalum vaazhga Lyrics

எங்கிருந்தாலும் வாழ்க
எங்கிருந்தாலும் வாழ்க
உன் இதயம் அமைதியில் வாழ்க
மஞ்சள் வளத்துடன் வாழ்க உன் மங்கல குங்குமம் வாழ்க
வாழ்க... வாழ்க...

எங்கிருந்தாலும் வாழ்க
உன் இதயம் அமைதியில் வாழ்க
மஞ்சள் வளத்துடன் வாழ்க உன் மங்கல குங்குமம் வாழ்க
வாழ்க... வாழ்க...
எங்கிருந்தாலும் வாழ்க


இங்கே ஒருவன் காத்திருந்தாலும்
இளமை அழகை பார்த்திருந்தாலும்
இங்கே ஒருவன் காத்திருந்தாலும்
இளமை அழகை பார்த்திருந்தாலும்
சென்ற நாளை நினைத்திருந்தாலும்
திருமகளே நீ வாழ்க..
வாழ்க... வாழ்க...
எங்கிருந்தாலும் வாழ்க


வருவாய் என நான் தனிமையில் நின்றேன்
வந்தது வந்தாய் துணையுடன் வந்தாய்
வருவாய் என நான் தனிமையில் நின்றேன்
வந்தது வந்தாய் துணையுடன் வந்தாய்
துணைவரைக் காக்கும் கடமையும் தந்தாய்
தூயவளே நீ வாழ்க...
வாழ்க... வாழ்க...
எங்கிருந்தாலும் வாழ்க


ஏற்றிய தீபம் நிலை பெற வேண்டும்
இருண்ட வீட்டில் ஒளி தர வேண்டும்
போற்றும் கணவன் உயிர் பெற வேண்டும்
பொன்மகளே நீ வாழ்க..
வாழ்க... வாழ்க...
எங்கிருந்தாலும் வாழ்க

உன் இதயம் அமைதியில் வாழ்க
மஞ்சள் வளத்துடன் வாழ்க உன் மங்கல குங்குமம் வாழ்க
வாழ்க... வாழ்க...
எங்கிருந்தாலும் வாழ்க