கங்கை அணிந்தவா - Gangai aninthavaa Lyrics

கங்கை அணிந்தவா
கண்டோர் தொழும் விலாசா
சதங்கை ஆடும் பாத விநோதா
லிங்கேஸ்வரா
நின்தாள் துணை நீதா

தில்லை அம்பல நடராஜா
செழுமைநாதனே பரமேசா
தில்லை அம்பல நடராஜா
செழுமைநாதனே பரமேசா
அல்லல் தீர்த்தாண்டவா... ஆ..
வா வா அமிழ்தானவா.. ஆ..
அல்லல் தீர்த்தாண்டவா... ஆ..
வா வா அமிழ்தானவா.. ஆ..

தில்லை அம்பல நடராஜா
செழுமைநாதனே பரமேசா


எங்கும் இன்பம் விளங்கவே.. ஏ...ஏ...ஏ...
எங்கும் இன்பம் விளங்கவே
அருள் உமாபதி
எளிமை அகல வரம் தா...வா வா..
வளம் பொங்க வா...
எளிமை அகல வரம் தா...வா வா..
வளம் பொங்க வா...

தில்லை அம்பல நடராஜா
செழுமைநாதனே பரமேசா


பலவித நாடும் கலையேடும்
பணிவுடன் உனையே துதிபாடும்
பலவித நாடும் கலையேடும்
பணிவுடன் உனையே துதிபாடும்
கலையலங்கார பாண்டியராணி நேசா
கலையலங்கார பாண்டியராணி நேசா
மலைவாசா.. மங்கா மதியானவா...

தில்லை அம்பல நடராஜா
செழுமைநாதனே பரமேசா
தில்லை அம்பல நடராஜா
செழுமைநாதனே பரமேசா

சம்போ.... ஓ.. ஓ...

4 comments:

  1. நல்ல முயற்சி. நன்றி.

    ReplyDelete
  2. Brother ennaku oru song veanum song name. ஓ சிதம்பரவாசனை தில்லை நடராஜன்னே சிவகாமியின் நேசன்னே வா உன் தரிசனம் காணவே. இந்த பாடல் கிடைக்குமா

    ReplyDelete
    Replies
    1. இதோ நீங்கள் கேட்ட பாடல்
      https://tamizhvarigal.blogspot.com/2023/01/o-chidambara-nathane-thillai-nadarajane.html

      Delete