வான் நிலா நிலா அல்ல - Vaan nila nila alla Lyrics

வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா.. ஆ...
வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா..
தேன் நிலா எனும் நிலா
என் தேவி இந்நிலா 
தேன் நிலா எனும் நிலா
என் தேவி‌ இந்நிலா
நீ இலாத நாளெலாம் நான் தேய்ந்த வெண்ணிலா.. ஆ..

வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா..

மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா
பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா

வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா..


தெய்வம் கல்லிலா
ஒரு தோகையின் சொல்லிலா.. ஆ...
தெய்வம் கல்லிலா
ஒரு தோகையின் சொல்லிலா..
பொன்னிலா பொட்டிலா புன்னகை மொட்டிலா
அவள் காட்டும் அன்பிலா
இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா
இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா
தீதிலா காதலா ஊடலா கூடலா அவள் மீட்டும் பண்ணிலா

வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா..


வாழ்க்கை வழியிலா
ஒரு மங்கையின் ஒளியிலா.. ஆ..
வாழ்க்கை வழியிலா
ஒரு மங்கையின் ஒளியிலா..
ஊரிலா நாட்டிலா ஆனந்தம் வீட்டிலா
அவள் நெஞ்சின் ஏட்டிலா
சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா
சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா
எண்ணிலா ஆசைகள் என் நிலா கொண்டதேன்
அதைச் சொல்வாய் வெண்ணிலா

வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா..
தேன் நிலா எனும் நிலா
என் தேவி இந்நிலா 
நீ இலாத நாளெலாம் நான் தேய்ந்த வெண்ணிலா.. ஆ..
வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா..

3 comments:

  1. நல்ல கவிதை வரிகள். அற்புதம்

    ReplyDelete