அரச்ச சந்தனம் மணக்கும் - Aracha santhanam manakkum Lyrics

அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே
ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே
முழு சந்திரன் வந்ததுபோல் ஒரு சுந்தரி வந்ததென்ன
ஒரு மந்திரம் செஞ்சதுபோல் பல மாயங்கள் தந்ததென்ன
இது பூவோ பூந்தேரோ....

பூவடி அவ பொன்னடி அத தேடிப் போகும் தேனீ
தேனடி அந்த திருவடி அவ தேவலோக ராணி
தாழம்பூவு வாசம் வீசும் மேனியோ
அந்த ஏழு லோகம் பார்த்திராத தேவியோ
ரத்தினம் கட்டின பூந்தேரு உங்கள படச்சதாரு
இன்னிக்கும் வயசு மூவாறு என் சொல்லு பலிக்கும் பாரு
இது பூவோ பூந்தேரோ....

அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே
ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே
முழு சந்திரன் வந்ததுபோல் ஒரு சுந்தரி வந்ததென்ன
ஒரு மந்திரம் செஞ்சதுபோல் பல மாயங்கள் தந்ததென்ன
இது பூவோ பூந்தேரோ....

அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே
ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே

மான் விழி ஒரு தேன் மொழி நல்ல மகிழம்பூவு அதரம்
பூநெறம் அவ பொன்னிறம் அவ சிரிக்க நெனப்பு சிதறும்
ஏலப்பூவு கோலம் போடும் நாசி தான்
பல ஜாலத்தோடு ஆளப்போகும் ராசி தான்
மொட்டுக்கள் இன்னைக்குப் பூவாச்சு சித்திரம் பெண்ணென ஆச்சு
கட்டுறேன் கட்டுறேன் நான் பாட்டு கைகள தட்டுங்க கேட்டு
இது பூவோ பூந்தேரோ....

அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே
ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே
முழு சந்திரன் வந்ததுபோல் ஒரு சுந்தரி வந்ததென்ன
ஒரு மந்திரம் செஞ்சதுபோல் பல மாயங்கள் தந்ததென்ன
இது பூவோ பூந்தேரோ....

அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே
ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே..

5 comments: