எந்தன் கதை காதல் கதையே
சின்னக்கதை வண்ணக்கதை
அந்தக் கதை மோதல் கதையே
அன்புக்கதை வம்புக்கதை
எந்தன் கதை காதல் கதையே
சின்னக்கதை வண்ணக்கதை
அந்தக் கதை மோதல் கதையே
அன்புக்கதை வம்புக்கதை
எந்தன் கதை காதல் கதையே
சின்னக்கதை வண்ணக்கதை
அந்தக் கதை மோதல் கதையே
கண்பட்டதனால் புண்பட்டது நான்
கண்பட்டதனாலே மனம் புண்பட்டது நானே
அந்தக்கதை துன்பக்கதையே
அன்புக்கதை வம்புக்கதை
எந்தன் கதை காதல் கதையே
சின்னக்கதை வண்ணக்கதை
அந்தக் கதை மோதல் கதையே
பூவொன்று மணம்வீசி புதுராகம் பாட
புரியாத புதிராகி திசை மாறிப்போக
பூவொன்று மணம்வீசி புதுராகம் பாட
புரியாத புதிராகி திசை மாறிப்போக
காதல் ஒரு ஓடம் அது ஓடும்பொழுது
நாளும் தடுமாறும் அலைமோதும் பொழுது
காதல் ஒரு ஓடம் அது ஓடும்பொழுது
நாளும் தடுமாறும் அலைமோதும் பொழுது
கருவில் உருவாகும் ஒரு உயிரின் கதையே
உயிரில் உறவாகும் அது காதல் கதையே
பழிபாவம் அறியாது அது எந்தன் கதையே
அன்புக்கதை வம்புக்கதை
எந்தன் கதை காதல் கதையே
சின்னக்கதை வண்ணக்கதை
அந்தக் கதை மோதல் கதையே
நீரோடும் நதியோரம் நானும் ஒரு தோணி
கரைசேர முடியாமல் வாழும் ஒரு ஞானி
நீரோடும் நதியோரம் நானும் ஒரு தோணி
கரைசேர முடியாமல் வாழும் ஒரு ஞானி
காணும் விழியோரம் புது காதல் வரவு
காதல் வழிமாற தினம் கண்ணீர் செலவு
காணும் விழியோரம் புது காதல் வரவு
காதல் வழிமாற தினம் கண்ணீர் செலவு
வாழும் வரைதானே வரும் வரவும் செலவும்
போகும் வரைதானே வரும் உறவும் பிரிவும்
ஒரு பாசம் அதில் நேசம் அது யாவும் கனவு
அன்புக்கதை வம்புக்கதை
எந்தன் கதை காதல் கதையே
சின்னக்கதை வண்ணக்கதை
அந்தக் கதை மோதல் கதையே
கண்பட்டதனால் புண்பட்டது நான்
கண்பட்டதனாலே மனம் புண்பட்டது நானே
அந்தக்கதை துன்பக்கதையே
அன்புக்கதை வம்புக்கதை
எந்தன் கதை காதல் கதையே
சின்னக்கதை வண்ணக்கதை
அந்தக் கதை மோதல் கதையே
அன்புக்கதை வம்புக்கதை
எந்தன் கதை காதல் கதையே
சின்னக்கதை வண்ணக்கதை
அந்தக் கதை மோதல் கதையே
No comments:
Post a Comment