பதினெட்டு வயது இளமொட்டு மனது - Pathinettu Vayathu Ilamottu Lyrics

லலலா லல லலலலலா லலலா லல லலலலலா
லலலலலா லாலலா லலலல லாலாலாலாலாலா

பதினெட்டு வயது இளமொட்டு மனது
ஏங்குது பாய் போட
பனிகொட்டும் இரவு பால் வண்ண நிலவு
வேண்டுது உறவாட
கங்கை போலே காவிரி போலே ஆசைகள் ஊறாதா
சின்னப்பொண்ணு செவ்வரிக்கண்ணு ஜாடையில் கூறாதா
பதினெட்டு வயது இளமொட்டு மனது
ஏங்குது பாய் போட


மாணிக்கத்தேரு மணிமுத்து ஆறு
மாணிக்கத்தேரு மணிமுத்து ஆறு
போதும் போதும் நீ ஒதுங்கு.. ஆஹாங்
அந்த பாயப்போட்டுத் தான் ஒறங்கு
நான் விடமாட்டேன் தூண்டில போட்டேன்
காலந்தோறும் நீ எனக்கு.. ஐயோ
இது காலதேவனின் கணக்கு
கூசுது ஒடம்பு குலுங்குது நரம்பு
நீ என்ன ஒரசாதே.. ஓ.. 
கூச்சங்கள் எதுக்கு ஆண்மகன் உனக்கு
நீ என்ன வெலகாதே...

ராத்திரி நமக்கு முதல் ராத்திரி
பால் பழம் கொண்ட பாத்திரம்
பக்கம் நெருங்கிட விருந்திட ஆசை விடுமா
சும்மா நின்னா மாமன கண்டு
தலையணை சிரிக்காதா
சூரியன் வந்து சுள்ளுனு சுட்டா
தாமரை வெடிக்காதா

ஆ.. ஆ...ஆ...ஆ..ஆ..


மாங்கனிச்சாறும் செவ்விளநீரும்
மாங்கனிச்சாறும் செவ்விளநீரும்
மேலும் கீழும் தான் இனிக்க
அவை மீண்டும் மீண்டும் நீ எடுக்க
மூக்குத்திப்பூவே மோக நிலாவே
தேன வாரி தெளிக்க
அதில் தாகம் தீர நான் குளிக்க
மன்மத பானம் காயுற நேரம்
வீரத்த நெலநாட்டு
மாலையில் தொடங்கி காலையில் அடங்கும்
வாலிப விளையாட்டு

பூவுடல் புரண்டு வரும் பாற்கடல்
தீண்டினாள் எனை தூண்டினாள்
அவள் வலைகளை விரித்ததும் நானும் விழுந்தேன்
மஞ்சத்தாலி முடிஞ்ச பின்னாலே
மாப்பிள்ள நீயாச்சு
வெட்கம் அச்சம் இவைகளுக்கின்று
விடுமுறை நாளாச்சு

பதினெட்டு வயது இளமொட்டு மனது
ஏங்குது பாய் போட
பனிகொட்டும் இரவு பால் வண்ண நிலவு
வேண்டுது உறவாட

No comments:

Post a Comment